காளஹஸ்தி சிவன் கோவிலில் ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு சேமவார அபிஷேகம்
ஸ்ரீ காளஹஸ்தி, திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் எழுந்தருளியுள்ள ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு, பவுர்ணமி சேமவார சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டன.
காளஹஸ்தி சிவன் கோவிலில் வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம். இதனையொட்டி, இன்று சேமவார திங்கட்கிழமை காலை இந்த பூஜைகள் செய்யப்பட்டன. இப்பகுதிகளில் கன மழையால் மக்கள் பாதிக்கப்படும் போது, மக்கள் இங்குள்ள சுவாமிக்கு( ம்ருத்யுஞ்சய ) சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். மேலும் ஒருவர் மரண ஆபத்தில் இருக்கும்போது, முக்தி வேண்டி பூஜைகள் செய்வது வழக்கம். மேலும் பவுர்ணமி, திங்கட்கிழமை சிவப்பெருமானுக்குப் பிரியமான நாள் என்பதால், சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி மற்றும் பச்சைகற்பூரம் ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இந்த அபிஷேகங்களுக்கு பக்தர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்தது. பின்னர், இறைவனுக்குப் பல்வேறு வகையான நறுமண மலர்கள், கஜ மாலைகள் மற்றும் வெள்ளி ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப தூபமும் மகா தீபாராதனை சமர்ப்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.