உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் 108 மூலிகைகளால் பவுர்ணமி சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் 108 மூலிகைகளால் பவுர்ணமி சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை ; 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, மழை மற்றும் காடுகளில் விளையக்கூடிய 108 மூலிகைகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் வடிவில் பூஜித்த இந்த ஆலயத்தில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு மழை மற்றும் காடுகளில் விளையக்கூடிய 108 மூலிகை சாறு கொண்டு சிறப்பா அபிஷேகம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை  சார்பில் 124வது ஆலயமாக இன்று மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் அபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு 108 மூலிகை சாறுகள் குடத்தில் நிரப்பி வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களுக்கு பிறகு மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டது. மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த மூலிகை அபிஷேகம் செய்வதால் மழை வளம் பெருகி, பொதுமக்கள் துன்பம் நீங்கி உலகம் நன்மை ஏற்படும் என்பது சித்தர்கள் வாக்கு என்று, அபிஷேகம் செய்த சிவனடியார்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !