காஞ்சி மகா பெரியவா ஆனி மாத அனுஷ பூஜை
உடுமலை: உடுமலை ஜி. டி.வி., லே அவுட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில், ஒவ்வொரு மாதமும் காஞ்சி மகா பெரியவாளின் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு அனுஷ பூஜை நடைபெற்று வருகிறது.
ஆனி மாத அனுஷ நட்சத்திர காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை நடைபெற்றது. விக்னேச்வர பூஜையுடன் ஆரம்பித்து, ஸங்கல்பம், பீட பூஜை, அனுஷ பிரதான பூஜை, சித்திர பட ஆவாஹனம், குருத்யானம், வேதபாராயணம், காஞ்சி மஹா பெரியவர் அஷ்டோத்திர அர்ச்சனை, தூப, தீப நைவேத்யம், மந்திர புஷ்பம், சதுர்வேத பாராயணம், கற்பூர ஹாரத்தி காட்டப்பட்டது. மேலும், காஞ்சி மட ஸ்வஸ்தி வசனம், தோடகாஷ்டகம், விநாயகர் அகவல், சிவபுராணம், திருத்தொண்டர் தொகை, கோளறு திருப்பதிகம், பஞ்சபுராணம், திருப்புகழ் உள்ளிட்ட பாராயணங்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் , ஆன்மிக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். உலக அமைதிக்கும், சமாதானத்திற்கும், ஒற்றுமைக்கும் , ஆரோக்கியத்திற்கும் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.