உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை

வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை

சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த பௌர்ணமி இரண்டு கால யாக பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


உலக நன்மை வேண்டி நடந்த இரண்டு கால யாக பூஜையில் முன்னதாக வாராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகங்களும், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். பௌர்ணமி யாக பூஜையை வாராஹி அறக்கட்டளை தலைவரும், வரசித்தி வாராகி அம்மன் திருக்கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். வாராகி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !