திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் 16 வகை மலர்களால் வேள்வி
ADDED :10 hours ago
திருப்புல்லாணி, திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேக விழாவை முன்னிட்டு மலர்களால் யாக வேள்வி நடந்தது. திருப்புல்லாணி ஆதி ஜகநாத பெருமாள் கோயிலில் உள்ள பத்மாஸனித்தாயார் அலங்காரம் முன் மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாள் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து மல்லிகை, முல்லை, சாமந்தி, பிச்சிப்பூ, ரோஜா, இட்லி பூ, செவ்வரளி, துளசி, சரக்கொன்றை உள்ளிட்ட 16 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யாக வேள்வி நடந்தது. கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் யாக வேள்வி அருகே மலர்களால் வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சனை செய்தனர். ஒவ்வொரு அர்ச்சனைக்கும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பத்து வகையான பிரசாதங்கள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.