உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி தேரோட்டம்

முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி தேரோட்டம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி திருவிழா தேரோட்டம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலின் ஆனி திருவிழா ஜூன் 20ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஜூன் 25ல் கழுவன் திருவிழா, ஜூன் 26ல் மீனாட்சி பட்டாபிஷேகம், ஜூன் 27ல் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று ஆனித் தேரோட்டம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளினர். 5:30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரதவீதிகள் வழியாக தேர்வலம் வந்தது. மீனாட்சி சொக்கநாதர் பெரிய தேரிலும் அம்மன், விநாயகர், முருகன் சிறிய தேர்களிலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் திருவீதி உலா வந்தனர். மாலை 6:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேரடி படிகளில் பக்தர்கள் நேர்த்திக்கடன் தேங்காய்களை உடைத்தனர். 10ம் நாளான இன்று (ஜூன் 29) தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !