பழநி திரு ஆவினன்குடி கோயிலில் அன்னாபிஷேகம்
ADDED :5 hours ago
பழநி; பழநி, திருஆவினன்குடி கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கலச பூஜை நடந்தது.
பழநி திருஆவினன்குடி கோயிலில் உற்சவர் முன்பு நேற்று கும்ப கலசங்களுக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் வைக்கப்பட்ட கலச நீர், கால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் நடந்தது. அலங்காரம், தீபாராதனை நடந்தது. அமிர்தலிங்கம் குருக்கள், செல்வசுப்ரமணியம் குருக்கள் குழுவினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிராமண சமாஜ தலைவர் ஹரிஹர முத்துஅய்யர், மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.