கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு
ADDED :2 hours ago
கோவை; மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் ஆனி மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் பூஜைகள் நடந்தன. இதில் கோவிலின் அடிவாரத்தில் உள்ள விநாயகர் முருகன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கும்ப கலசத்தில் புனித நீரானது மேலே இருக்கும் தர்மலிங்கேஸ்வரருக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. மூலவர் தர்மலிங்கேஸ்வரருக்கு அந்த புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக மூலவர் தர்மலிங்கேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், தேன், திரவியங்கள் விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டன. நிறைவாக சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் தீப ஒளியில் பக்தர்களுக்கு காட்சியளித்த சிவபெருமானை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிறைவாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.