முத்தாலம்மன் கோயில் திருவிழா
ADDED :10 hours ago
செந்துறை: செந்துறை அருகே பிள்ளையார்நத்தம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, பூந்தேரில் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு கண் திறக்கப்பட்டது. பின் கோயிலுக்குள் சென்ற அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தன.
தொடர்ந்து பக்தர்கள் அக்னிசட்டி, மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். நேற்று பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.
விழாவில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பிள்ளையார்நத்தம் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.