உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணவாள நகர் கன்னியம்மன் கோவிலில் 57ம் ஆண்டு ஜாத்திரை விழா

மணவாள நகர் கன்னியம்மன் கோவிலில் 57ம் ஆண்டு ஜாத்திரை விழா

மணவாளநகர்: மணவாளநகர் கன்னியம்மன் கோவிலில் 57ம் ஆண்டு ஜாத்திரை திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், மணவாள நகர் ஜல்லிமேடு பகுதியில் கன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஜாத்திரை திருவிழா ஜூன் மாதம் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், 57வது ஆண்டு ஜாத்திரை திருவிழா, கடந்த 26ம் தேதி காலை 9:00 மணிக்கு தொடங்கியது. ஜல்லிமேடு பெருமாள் கோவில் அருகில் இருந்து, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின், மாலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில் ஊஞ்சல் சேவையும், 6:00 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.

நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. அம்மனுக்கு விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள், அலகு குத்தி ரதம் இழுத்தும், கிரேனில் அந்தரத்தில் தொங்கியவாறும் நெடுஞ்சாலையில் வலம் வந்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கன்னியம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !