நெகமம் வீரமல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நெகமம்; நெகமம், வீரமல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
நெகமம், வீரமல்லம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதியன்று, முகூர்த்தக்கால் போடும் நிகழ்வுடன் ஆரம்பமானது ஜூலை, 1ம் தேதி, தீர்த்தம் கொண்டுவரும் நிகழ்ச்சி நடந்தது. 4ம் தேதி, மங்கள இசை, திருவிளக்கு ஏற்றுதல், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, சக்தி விநாயகர் கோவிலில் இருந்து திருத்தம் கொண்டுவருதல், முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து மாலையில், சங்கல்பம், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, கும்ப அலங்காரம் மற்றும் கேல் கடிகை கொண்டு வருதல், முதற்கால யாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், எந்திர ஸ்தாபனம் உள்ளிட்டவைகள் நடந்தது. இன்று 5ம் தேதி, இரண்டாம் கால யாக பூஜை மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், நெகமம் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் இருந்து மக்கள் பலர் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் தச தரிசனம், தீபாராதனை நடந்தது.