செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :7 hours ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சாமியார் மடம், செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது.
சதய நட்சத்திர தினமான நேற்று கோவிலின் ஓதுவார்கள் காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, பன்னிரு சைவத் திருமுறைகளில் 8ம் திருமுறையாக உள்ள திருவாசகத்தின் 51 பதிகங்கள், அதிலுள்ள 658 பாடல்கள் முழுதையும் படித்தனர்.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாடுகள் திருநாவுக்கரசு நாயனார் உழவாரத் திருக்கூட்ட தலைவர் நாச்சியப்பன் தலைமையில் நடந்தது.