/
கோயில்கள் செய்திகள் / தன்வந்திரி அலங்காரத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள்; வரும் 14 ம்தேதி அருள்பாலிப்பு
தன்வந்திரி அலங்காரத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள்; வரும் 14 ம்தேதி அருள்பாலிப்பு
ADDED :1 days ago
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 14 ம்தேதி ஆனிமாத அமாவாசை முன்னிட்டு மூலவர் பெருமாள் ஸ்ரீதன்வந்திரி பெருமாளாக அருள்பாலிக்கிறார். விழாவையொட்டி அன்று காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம். 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:30 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடாகி திருகண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடிபூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது. அன்று மூலவர் ஸ்ரீதன்வந்திரி பெருமாள் அலங்காரம் முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் தன்வந்திரி மகா பிரசாதமாக பலவகை மூலிகைகள் கொண்டு தயாரித்த லேகியம் வழங்கப்பட உள்ளது.