உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் துணை கோவில்களில் பாலாலயம்

திருப்போரூர் துணை கோவில்களில் பாலாலயம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவில்களில் நேற்று, பாலாலயம் விமரிசையாக நடந்தது.

திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது.

அதன்படி, கோவிலின் துணைக்கோவில் களான வேம்படி விநாயகர் கோவில், வேண்டவராசி அம்மன், முள்ளச்சி அம்மன் கோவில்களில் நேற்று பாலாலயம் நடத்தப்பட்டன. கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு காலை 7:30 மணி முதல், சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !