உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 விளக்கு பூஜை

விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 விளக்கு பூஜை

விழுப்புரம்: ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு, ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 விளக்கு பூஜை செய்து பெண்கள் வழிபாடு செய்தனர். விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள வாலாம்பிகை உடனுறை ஆதிவாலீஸ்வரர் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவர் ஆதிவாலீஸ்வரர் மற்றும் வாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதையடுத்து, இரவு 7:00 மணிக்கு 1008 விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !