குறளில் அடங்கும் ஹிந்து தத்துவங்கள் தாமல் ராமகிருஷ்ணன் பேச்சு
ராஜபாளையம்; ராமாயணம் உட்பட 18 ஹிந்து புராணங்களின் தத்துவங்களும் ஏதாவது ஒரு திருக்குறளில் அடங்கி இருக்கும்" என சொற்பொழிவாளர் தாமல் ராமகிருஷ்ணன் பேசினார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோதண்டராமசுவாமி கோயிலில் நேற்று பட்டாபி ராமர் எனும் தலைப்பில் அவர் பேசியதாவது: சுந்தர காண்டத்தில் ராமாயணத்தை அனுமன் சீதைக்கும், வானவ சேனைக்கும் கூறியதால் அதைக்கேட்டால் ராமாயணம் முழுவதும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும். ராம மந்திரத்தை உச்சரித்தால் தன்னையே கொடுப்பார் ராமர் என கம்பர் கூறுகிறார். அனைவரையும் அரவணைப்பது தான் ராமாய ணத்தின் தர்மம். ராமாயணத்திற்கு சரணாகதி காவியம் என்றும் ராமருக்கு சரணாகதி ரட்சகன் என்றும் பெயர். ராமாயணம் உட்பட 18 ஹிந்து புராணங் களின் தத்துவங்களும் ஏதாவது ஒரு திருக்குறளில் அடங்கி இருக்கும். நாம் வாழும் காலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதை பார்க்கும் பேறு பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.