உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி நான்காம் வெள்ளி; அம்மனை வழிபட சகல துன்பங்களும் நீங்கும்!

ஆடி நான்காம் வெள்ளி; அம்மனை வழிபட சகல துன்பங்களும் நீங்கும்!

ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.  ஆடி மாதத்தில் அன்னை பராசக்தி பூமிக்கு வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதிகம். நான்காவது வெள்ளியன்று அம்மனை மனதார வேண்டிக்கொள்ள சகலவிதமான துன்பங்களும் நீங்கும். அருகில் உள்ள மாரியம்மன், காளியம்மன் அல்லது சக்தி ஸ்தலங்களுக்குச் சென்று அம்மனுக்குச் செய்யப்படும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்கலாம். அம்மனுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் மற்றும் மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்குவது நன்மைகளைத் தரும். ஆடி நான்காவது வெள்ளியன்று பக்தியுடன் செய்யும் வழிபாடுகள் வீட்டில் லட்சுமி கடாட்சத்தையும், மன அமைதியையும், நிலையான செல்வ வளத்தையும் பெற்றுத் தரும்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !