உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் ஆடிக்கார்த்திகை படி பூஜை

குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் ஆடிக்கார்த்திகை படி பூஜை

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு நேற்று படிபூஜை நடந்தது.


ஆடி மாதத்தின் முக்கிய நாளாக ஆடி கிருத்திகை கடைபிடிக்கப்படுகிறது. ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் பல்வேறு தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். ஆடி கார்த்திகையை முன்னிட்டு சண்முகநாதப் பெருமானுக்கு காலையில் சந்தன திருமுழுக்காட்டு நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் படிபூஜை பூச்சொரிதல் நடந்தது. குன்றக்குடியின் அடிவாரத்தில் படி பூஜை தொடங்கி படி முழுவதும் சூடம் ஏற்றி பூக்கள் வைத்து பூஜை நடந்தது. படி பூஜையின் போது திருமுறை இன்னிசை , மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !