உடுமலை கோவில்களில் சிறப்பு பூஜை; பக்தர்கள் தரிசனம்
ADDED :8 hours ago
உடுமலை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், வெஞ்சமடை வாஞ்சிநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில், ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு மகா அபிேஷகம் நடந்தது. அதே போல், மடத்துக்குளம், பாப்பான் குளத்தில் உள்ள ஞான தண்டாயுதபாணி கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.