சக்தி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்
கமுதி; கமுதி அருகே கருங்குளத்தில் சக்தி மாரியம்மன் கோயிலில் வினோதமான முறையில் சேத்தாண்டி வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோயில் 26ம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது.இதனை முன்னிட்டு கடந்தவாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது.கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.அக்கினிசட்டி, கரும்பாலை தொட்டில் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.பின் வினோதமான முறையில் உடல் ஆரோக்கியம் பெற வேண்டி பக்தர்கள் களிமண்,சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு கிராமத்தின் முக்கிய விதியில் ஊர்வலமாக நடனமாடி பக்தர்கள் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பால்குடம் ஊர்வலம் நடந்தது. சக்திமாரியம்மனுக்கு பால்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்தனர்.