உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரையில் எழுந்தருளிய திருக்கூடல்மலை நவநீத பெருமாள்

மானாமதுரையில் எழுந்தருளிய திருக்கூடல்மலை நவநீத பெருமாள்

மானாமதுரை: திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீத பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து மலையில் இருந்து கிளம்பிய சுவாமிகள் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி மானாமதுரை ஆகிய ஊர்களின் வழியே 24 நாள்கள் வலம் வந்து பின்னர் திருக்கூடல் மலைக்கு சென்றடைவார்.வழியில் அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் அலங்காரத்துடன் எழுந்தருளும் நவநீத பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெற உள்ளன. இன்று முத்தனேந்தலில் உள்ள பேச்சியம்மன் சேம்பர் வளாகத்தில் உள்ள கற்பக விநாயகர் கோயில், மானாமதுரையில் குலாலர் தெருவில் உள்ள முருகன் கோயில், அலங்கார குளம் அருகே உள்ள அய்யனார் சோனையா சுவாமி கோயில்களில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளுக்கு எழுந்தருளிய சுவாமிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !