உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி பூரம்; வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த அன்னபூரணி ஸ்வரி

ஆடி பூரம்; வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த அன்னபூரணி ஸ்வரி

கோவை; கோவை ஆர் எஸ் புரம் அன்னபூரணி ஸ்வரி கோவிலில் மூலவர் சிறப்பு வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் 


ஆடி பூரம் என்பது அம்மனின் பிறந்த நாளாக கொண்டாட படுகிறது மக்களை காக்க உமாதேவி சக்தியாக உருவெடுத்த தினம் ஆண்டாள் அவதாரம் வைணவ கோவில்களில் தேவி ஆண்டாளாக அவதரித்த நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி கண்ணாடி வளையல் சாற்றி வழிபடும் சிறப்பு வைபவம் அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூரம்  நாளில் நடைபெறும் வளையல்களை திருமணம் ஆகாத பெண்கள் அணிந்தால் அவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம் அதேபோன்று சுமங்கலி பெண்கள் அணிவதால் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும் வளையல் மாலை அலங்காரம்  மற்றும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறும் ஆடிப்பூரம் அன்று  ஆண்டாள் அருளிய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடல்கள் பாடுவது வழக்கமாக உள்ளது  இதையொட்டி கோவை ஆர் எஸ் புரம் அன்னபூரணி ஸ்வரி கோவிலில் மூலவர் சிறப்பு வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !