விக்கிரவாண்டி ஆடிப்பூர திருவிழா; ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்
ADDED :11 hours ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ,சுற்று பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு ஆடிப்பூர திருவிழா நடந்தது.
விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து ஆண்டாளுக்கு பச்சை சார்த்தி சிறப்பு மலர் களாலும்,வளையல்களாலும் அலங்கரித்து மகாதீப ஆராதனை நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் முத்தாம்பிகை உடனுறை முண்டீஸ்வரன் கோவிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்துசிறப்பு மலர் களாலும்வளையல்களாலும் அலங்காரம் செய்து மகா தீப ஆராதனை நடந்தது அப்பகுதியிலுள்ள பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.