உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் புஷ்பயாகம்; ஆடிப்பூர விழா நிறைவு

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் புஷ்பயாகம்; ஆடிப்பூர விழா நிறைவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழா நேற்று புஷ்பயாகத்துடன் நிறைவு பெற்றது. இக்கோயிலில் ஆக.6ல் கொடியேற்றத்துடன் ஆடிப்பூர திருவிழா துவங்கியது. ஆக.10 காலையில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவில் ஐந்து கருட சேவையும், ஆக.12ல் ஆண்டாள், ரெங்கமன்னார் சயனசேவையும், ஆக.14ல் முக்கிய நிகழ்வான தேரோட்டமும் நடந்தது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலை வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள்,ரெங்கமன்னார் எழுந்தருள, பல்வேறு மலர்களால் பூக்கோலமிடப்பட்டு புஷ்ப யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !