ஆனைமலை அகத்தீஸ்வரருக்கு ருத்ராட்ச பந்தல்
ADDED :21 hours ago
ஆனைமலை: ஆனைமலை அருகே, அங்கலகுறிச்சி கால்வாய் மேட்டில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், ஒரு லட்சத்து, எட்டு ருத்ராட்சங்கள் கொண்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை அருகே, அங்கலகுறிச்சி கால்வாய் மேட்டில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 18 சித்தர்கள், பாலாம்பிகை விநாயகர், நாகர் முருகர் சன்னதிகள் உள்ளன. கோவிலில், அகத்தீஸ்வரருக்கு ருத்ராட்ச பந்தல் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, நேபாளத்தில் இருந்து ஒரு லட்சத்து, எட்டு ருத்ராட்சங்கள் கொண்டு வரப்பட்டு, அவற்றை அங்குள்ள அடியார்கள் வாயிலாக செம்பு கம்பியால் கோர்த்து அகத்தீஸ்வரருக்கு ருத்ராட்ச பந்தல் அமைக்கப்பட்டது. ருத்ராட்ச பந்தலை பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர். மேலும், பந்தலை, 1.75 லட்சம் ருத்ராட்சங்களாக மாற்றுவதற்கான பணிகள் நடக்கிறது.