உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் பவுர்ணமி பவித்திர உற்ஸவம்

அழகர்கோவில் பவுர்ணமி பவித்திர உற்ஸவம்

அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு 5 நாள் பவித்திர உற்ஸவம் ஆக., 27 வரை நடக்கிறது.

முதல் நாளான நேற்று மூலவர் சன்னதி முன்புள்ள சுந்தரபாண்டியன் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய உற்ஸவர் சுந்தரராஜ பெருமாளுக்கு புதிய வஸ்திரங்கள் அணிவித்து 108 கலச திருமஞ்சனம் நடந்தது.

பட்டுநுாலால் ஆன பவித்திர மாலை அணிவிக்கப்பட்டது.

ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !