குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
கோவை; மேட்டுப்பாளையம் அருகே பழமை வாய்ந்த குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா அரோகரா கோஷத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பழமைவாய்ந்த குமரன் குன்று அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மகா மண்டபம்,அர்த்த மண்டபம் போன்ற பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அப்பணிகள் முடிவுற்று மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 25 ஆம் தேதி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் முதல்கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன பின்னர் பல்வேறு புனித நதிகள் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைத்து மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை மேளதாளத்துடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க மூலவர் சன்னதியில் உள்ள விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அண்ணதானம் வழங்கப்பட்டது