160 ஆண்டுகள் பழமையான கோயில் தெப்ப குளத்தை துார்வாரும் பணி துவங்கம்
விருதுநகர்: விருதுநகர் நகரின் மையத்தில் அமைந்துள்ள 160 ஆண்டுகள் பழமையான கோயில் தெப்ப குளத்தை துார்வாரும் பணி துவங்கி உள்ளது.
1866ல் தெப்ப குளம் கட்டும் பணி 2.200 ஏக்கர் பரப்பில் துவங்கியது. இதன் ஆழம் 21 அடி. தண்ணீர் கொள்ளளவு 5 கோடி லிட்டர். தெப்ப குளத்தை பராமரிப்பை விருதுநகர் ஹிந்து நாடார்கள் பலசரக்கு கடை மகமையினர் செய்கின்றனர்.
தெப்ப குளத்தில் நீரோட்டம் இருக்க வேண்டி வடமலைக்குறிச்சி ரோட்டில் கவுசிகா நதி நீரோட்ட பாதையில் வரும் நீரை சேமிக்க ஒரு இடம் வாங்கி குட்டை அமைத்து அங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள தெப்ப குளத்திற்கு மோட்டார் பம்பு வைத்து நீரை நிரப்பி வருகின்றனர்.
தெப்ப குளத்தின் நான்கு திசைகளிலும் ஹிந்து நாடார்கள் தேவஸ்தானத்தின் வெற்றி விநாயகர், சொக்கர் மீனாட்சி, ஞானதண்டாயுதபாணி, சனீஸ்வரர் உள்ளிட்ட 8 கோயில்கள் அமைந்துள்ளன. தெப்ப குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதும் மக்கள் குடிநீர் பிடித்து கொள்ள வசதியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.