sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

"தமிழ் நாடு அரசு விருது பெற்ற அமெரிக்க தமிழ் எழுத்தாளர்"

/

"தமிழ் நாடு அரசு விருது பெற்ற அமெரிக்க தமிழ் எழுத்தாளர்"

"தமிழ் நாடு அரசு விருது பெற்ற அமெரிக்க தமிழ் எழுத்தாளர்"

"தமிழ் நாடு அரசு விருது பெற்ற அமெரிக்க தமிழ் எழுத்தாளர்"


ஜன 11, 2025

ஜன 11, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்காவின் அட்லாட்ண்டா நகரில் வசிக்கும், கணினித் துறையில் பணிபுரியும், மயிலாடுதுறையைச் சேர்ந்த ராம்பிரசாத் கணிணியில் பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். ஆனாலும், இவர் எழுத்தின் மீது அதீத பற்று கொண்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் புனைவுகள் எழுதி வருகிறார். 2009லிருந்து கவிதை, கட்டுரை, எழுதத் தொடங்கிய இவர் தற்போது தமிழ் இலக்கிய உலகில் கணிதப்புனைவுகள், அறிவியல் புனைவுகளைத் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிறார்.

2020ல் வெளியான இவரது 'வாவ் சிக்னல்' விஞ்ஞானப் புனைவுச் சிறுகதைகள் தொகுதி நூலுக்குத் தமிழ் நாடு அரசு 'சிறந்த சிறுகதை நூல்' விருது அளித்துச் சிறப்பித்திருக்கிறது. அவரைத் தொடர்புகொண்டு அவரின் எழுத்துப் பணியின் வளர்ச்சியையும் அவர் சக எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் என்ன செய்தியைப் பகிர்கிறார் என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.


அமெரிக்காவில், வணிக சிந்தனையில் நேரத்தைச் செலவழித்தால், பணம் சம்பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், தமிழ் மக்கள் பலர் கவிதைகள், நாவல்கள், கதைகள் என எழுதுவதில் பேரார்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எழுதுதல் பகுத்தறிவு சிந்தனையைத் தூண்டுவதற்கும் சிறந்த முடிவெடுப்பதற்கும் ஒரு நீண்ட கால நல்வாழ்க்கைக்கும் உதவியாக இருக்கும்.

புதிதாக, பலர் நூல்கள் எழுத ஆரம்பித்துப் பல நூல்களை வெளியிடுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் எழுத்து நிலை அனைவர் பாராட்டும் படியாக ஓர் அங்கீகார விருதுகளைப் பெறக்கூடிய எட்டும் நிலையை அடைய புது எழுத்தாளர்கள் எவ்வாறு ஒரு சீராக முயல வேண்டும் என்பதைப் பற்றி விவாதித்தோம். ராம்பிரசாத்தின் அனுபவத்தையும், காலப்போக்கில் அவருடைய எழுத்துக்கள் எவ்வாறு கூர்மையடைந்தன என்பதையும் அவருடன் கலந்தாலோசித்தேன்.


கணினித் துறையையோ அல்லது ஏதேனும் ஒரு தொழிலில் பணிபுரிபவர்கள் தமிழில் எழுதும்போது அவர்களின் சிந்தனைப் பெருகி தொழில் ரீதியாகப் பல வகைகளில் பயனடைவர். எழுதுவதால் யோசனைகளின் செய்தியைத் தெளிவாகவும், கருத்துகளைச் சுலபமாகவும் வலியுறுத்த முடியும். தமிழில் அறிவியல் புனைவுகள் எழுவது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை. ஒரு எழுத்தாளராக, தொழில்நுட்பக் கருத்துகளைக் குறிப்பாகத் தமிழில் பேசுபவர்களுக்குச் சுலபமாக விளக்க ஆங்கிலச் சொற்களைத் தேடித் தேடி தமிழில் புரியும்படி எழுத வேண்டும்.

இது தொழில்முறையில் தமிழை மேம்படுத்தப் பெரிதும் உதவும். எழுதுவது படைப்பாற்றலின் ஒரு வெளிப்பாடு. அதுவும் உலக வளர்ச்சி சார்ந்து எழுதுவது தமிழ் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். ஒரு தமிழ் எழுத்தாளராக, சிக்கல்களைத் தீர்க்கவும், புதிய அமைப்புகளை வடிவமைக்கவும் புதிய கோணங்களில் சிந்திக்கவும் உதவும். இயற்கை மொழி செயலாக்கமும் (NLP), AI நுட்பங்களும் முன்னேறியுள்ளதால், தமிழ் மொழி எழுத்துத்திறனுடன் கூடிய பகுப்பாய்வாளர்கள் தமிழில் மொழிபெயர்ப்புக் கருவிகள் அல்லது குரல் உதவியாளர்களைப் போன்ற தமிழ் பயனாளர்களுக்கான திட்டங்களில் ஈடுபட வித்திடும். தமிழில், குறிப்பாக அறிவியல் சார்ந்து உள்ளூர் அம்சங்களை எழுதுவதன் மூலம் நமது பண்பாட்டு அறிவு மொழியியலோடு அதிகரிக்கும்.


இது தமிழ் பேசும் சமூகங்களுக்குப் பயன்படக்கூடிய தரவுப் பகுப்பாய்வையும் தமிழில் புதிய சொற்களை உருவாக்கவும் உதவும். தமிழில் தொழில்நுட்ப ஆவணங்களுக்குப் பெருகிவரும் தேவை உள்ளது. ஒரு தமிழ் எழுத்தாளராக, மென்பொருள் தொழில்நுட்பத்தின் பகுப்பாய்வு வழிகாட்டிகள், பயனர் கையேடுகள், பயிற்சி ஆவணங்களைத் தமிழில் உருவாக்கிப் பரந்த வாசகர்களை அடையலாம்.

ஆரம்பநிலை எழுத்தாளர்கள் தன் நண்பர்களுடனும் சுற்றாருடனும் தன் எழுத்துக்களைப் பகிர்வதைத் தாண்டி இலக்கியப் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி அவர்களின் ஆலோசனைகளையும் பெறலாம். இது ஒருவரின் எழுத்து நிலையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லப் பெரிதும் உதவும். இலக்கியப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அதில் பதிப்பிக்கப்படும் எழுத்தாளர்களாகத் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு எழுத்தாளரின் தேடல் என்பது ஒரு வரையறைக்குள் அடங்கிவிடக்கூடாது.


ராம்பிரசாத் முதலில் சமூகம் சார்ந்து எழுதத் தொடங்கி இப்போது அறிவியல் புனைவு எழுதுவதில் வல்லவராக உள்ளார். தமிழக இதழ்களில் இவரது கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. இப்போது ஆங்கிலத்தில் Aphelion SF&F, Metastellar, Alternate Reality, Literary Yard, Readomania, Boston Literary Magazine, Madswirl, QuailBell Magazine, L. Ron Hubbard, Allegory ஆகிய தளங்களில் இவரது சிறுகதைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இவரின் படைப்புகள் மூலம் தமிழில் அறிவியல் புனைவுகள் படிக்கும் வாசகர்கள் வளரக்கூடும். தமிழில் அறிவியல் புனைவுகள் எழுதுபவர் இங்கு ஒரு சிலரே. இவரின் படைப்பு நூல்கள் பின்வருபவன: தமிழ் நூல்கள்: ஒப்பனைகள் கலைவதற்கே (2014), உங்கள் எண் என்ன? (2016), இரண்டு விரல்கள் (2017), அட்சயபாத்திரா (2017), வரதட்சணா (2018), ஏஞ்சலின் மற்றும் சிலர் (2018), வதுவை (2019), வாவ் சிக்னல் (2020), மரபணுக்கள் (2024). ஆங்கில நூல்கள்: Inexhaustible (2018), Those Faulty Journeys (2018), MeT App (2020), Fancy Nuptials(2021)


ராம்பிரசாத்தின் விஞ்ஞானப் புனைவுச் சிறுகதைகள் வரும் காலங்களில் காணொலிகளாக வெளிவந்தால் இன்னும் அதிக மக்களைச் சென்று சேர வழி வகுக்கும். அமெரிக்க மண்ணில் வசித்துக்கொண்டு தமிழ் வாசகர்களுக்கு எழுத்து விருந்தளிக்கும் ராம்பிரசாத்தின் எழுத்துப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்







      Dinamalar
      Follow us