sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

12

முந்தைய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 896

வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கலா என விசாரணை? 1 Crore Sezied | Trichy | Election 2024

வீடியோ: அரசியல்

12-Apr-2024

அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் அருளும், எதையும் சாதித்திடும் சக்தியும் கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சனி, செவ்வாயுடன் பிறக்கும் இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்களில் இருந்து விடுதலை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். உடலில் ஏற்பட்ட நலிவுகள் உங்களை விட்டு விடைபெறும். இதுவரையில் ஏதோ ஒரு சங்கடத்துடன் இருந்த நிலை மாறி ஆரோக்கியமாக செயல்பட ஆரம்பிப்பீர்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். பூர்வ புண்ணியாதிபதி உங்கள் ராசியில் உச்சம் பெறுவதால் செல்வாக்கு உயரும். இதுவரையில் தொழில், வியாபாரம், வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் விலகும். அரசுவழி முயற்சிகள் ஆதாயம் தரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஏப்.27அதிர்ஷ்ட நாள்: ஏப்.16,18, 25. மே 7, 9பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை வழிபட வாழ்வு வளமாகும்.பரணி: சகோதர தைரிய வீரிய காரகனான செவ்வாய், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு உங்கள் முன்னேற்றத்தின் மீது எப்போதும் அக்கறை இருக்கும். மற்றவர்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வதில் முதன்மையானவராக  இருப்பீர்கள். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை வழங்கும் மாதமாக இருக்கப் போகிறது. உங்கள் நட்சத்திரநாதன் மாதம் முழுவதும் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். வருமானத்தை அதிகரிப்பார். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் குருபகவான் தனஸ்தானத்திற்கு செல்வதால் இதுவரையில் இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள் லாபம் தரும். வம்பு, வழக்குகள் உங்களை விட்டு விலக ஆரம்பிக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் உடல்நிலையில் இருந்த அச்சம் விலகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வந்து சேரும். விவசாயிகளின் விருப்பம் பூர்த்தியாகும். ஆதாயம் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். பெண்கள் நிலையில் இருந்த சங்கடம் விலகி முன்னேற்றம் ஏற்படும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியில் இருந்த நெருக்கடி விலகி எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: ஏப்.28.அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,18,24,27, மே 6,9 பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு முல்லைப்பூ சார்த்தி வழிபட விருப்பம் நிறைவேறும். கார்த்திகை 1 ம் பாதம்: ஆன்ம காரகன், ஆற்றல் காரகனான சூரியன், தைரிய பராக்கிரமக் காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு செல்வாக்கு எப்போதும் நிலைத்திருக்கும். மற்றவருக்கு தலைமை தாங்கிடக் கூடியவர்களாக இருப்பீர்கள். பிறக்கப்போகும் சித்திரை மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் ராசிக்குள் உச்சம் பெறுவதால் இதுவரையில் இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். பணியில் சந்தித்து வந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் வந்து சேரும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எதிர்ப்பு விலகி செல்வாக்கு மேம்படும். வழக்குகள் விவகாரத்தில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகி லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் முன்னேற்றம் அடையும். அரசாங்கத்தில் இருந்து எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். லாபச் சனியின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உடல்நலனில் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மதிப்பு உயரும். கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் எதிர்பார்ப்பு நிறைவேறும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை அமையும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது. சந்திராஷ்டமம்: ஏப்.29.அதிர்ஷ்ட நாள்: ஏப்.18, 19, 27, 28, மே 1, 9, 10பரிகாரம் சூரிய பகவானை வணங்கி வழிபட வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றிலும் நிதானித்து செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்ளும் சக்தி இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்கும் மாதமாக இருக்கும். மாதத்தின் முற்பகுதியில் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் பிற்பகுதியில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரிக்கிறார். அதன் காரணமாக வேலைப்பளு அதிகரித்தாலும் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். குழந்தை பாக்கியம், திருமண யோகம், சொத்து சேர்க்கை என நன்மை அதிகரிக்கும். சித்திரை 10 முதல் செவ்வாய்பகவான் லாப ஸ்தானத்தில் ராகுவுடன் இணைவதால் வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்.  உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் நிலவிய சங்கடங்கள் தீரும். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பிப்பீர்கள். இதுவரை இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். சங்கடங்கள் நீங்கும். சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் சில சிரமங்கள் தோன்றும். செய்து வரும் தொழிலில் சங்கடங்கள் இருக்கும் என்றாலும் அதை சமாளிக்கும் சக்தியும் உங்களுக்கு உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்களின் கல்விக்கனவு நிறைவேறும்.சந்திராஷ்டமம்: ஏப்.29அதிர்ஷ்ட நாள்: ஏப்.15, 19, 24, 28, மே 1,6, 10பரிகாரம்: வராகியம்மனை வழிபட்டால் சங்கடங்கள் விலகும்.ரோகிணி: கலைக்காரகன், அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரன், மனக்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு மற்றவர்களை வழிநடத்தும் திறமை எப்போதும் இருக்கும். நீங்கள் ஈடுபடும் செயலில் வெற்றி அடையும் வரை உழைத்துக் கொண்டிருப்பீர்கள். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் எல்லாவிதமான நன்மைகளையும் அடையும் மாதமாக இருக்கப் போகிறது. லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ராகு பகவானுடன் செவ்வாயும் இணைவதால் தைரியமாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த லாபத்தை அடையும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் குருபகவான் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரித்தாலும் குடும்பத்திலும், உங்கள் வாழ்விலும் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தம்பதியருக்குள் இருந்த சங்கடங்கள் விலகும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சில நேரங்களில் உடலில் அசதி ஏற்பட்டாலும் உங்கள் செயல்களை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். இளைஞர்கள் முன்னேற்றம் காண்பர். வெளிநாட்டு முயற்சிகள் யோகத்தை உண்டாக்கும். பெண்களுக்கு வழக்கத்தை விட இந்த மாதம் யோக மாதமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். பிள்ளைகளால் நன்மை காண்பீர்கள்.  விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: ஏப்.30, மே 1அதிர்ஷ்ட நாள்: ஏப்.15, 20, 24, 29, மே 2, 6, 11பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டால் சிரமங்கள் தீரும்.மிருகசீரிடம் 1,2 ம் பாதம்: தைரிய பராக்கிரம காரகனான செவ்வாய், அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்தவொரு செயலிலும் வேகத்துடன் விவேகமும் இருக்கும். அதனால் உங்கள் முயற்சிகள் எப்போதும் வெற்றியாகும். பிறக்கும் சித்திரை மாதத்தில் உங்கள் நட்சத்திர நாதனின் சஞ்சார நிலையால் குறைகள் எல்லாம் நீங்கும். விருப்பங்கள் நிறைவேறும் மாதமாக இருக்கும். வம்பு, வழக்குகள் என்ற நிலைகள் மாறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும்.  உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி நிறைவேறும். விரய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மாதத்தின் பிற்பகுதியில் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். அதன் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தின் காரணமாக நீண்ட துாரப் பயணம் செல்வீர்கள்.  குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். கணவருடன் இணக்கமான சூழல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சுய தொழில் செய்யும் பெண்கள் எதிர்பார்த்த லாபத்தை காண்பர். அரசியல்வாதிகள் நிதானமாக செயல்படுவதால் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைய முடியும். விவசாயிகளின் நிலை உயரும். பொருளாதார நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: மே1, 2அதிர்ஷ்ட நாள்: ஏப்.15, 18, 24, 27. மே. 6, 9பரிகாரம்: குன்றில் குடியிருக்கும் முருகனை வழிபட குறைகள் விலகும்.

மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சாதுரியமும் நினைத்ததை சாதித்திடும் திறமையும் எப்போதும் இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப் போகிறது. ஆற்றல்காரகன் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் தடைபட்ட முயற்சிகள் இப்போது லாபமாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரம், தொழில் சீராக இருக்கும். பணம் பலவழிகளிலும் வரும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்கள், சிறு தொழில் செய்து வருவோரின் நிலை உயரும். குருபகவான் மே 1 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவுகள் அதிகரிக்கும். சனி பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். தெய்வ அருள் உண்டாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகி நிம்மதியான நிலை உண்டாகும். சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் மேற்கல்வி முயற்சி வெற்றியளிக்கும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். விவசாயிகளுக்கு விருப்பங்கள் நிறைவேறும். மாணவர்களுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.சந்திராஷ்டமம்: மே 2.அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,18,23,27, மே 5,9.பரிகாரம்: பைரவரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.திருவாதிரை: வித்யாகாரகனான புதன், யோக, போக காரகனான ராகுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எண்ணியதை அடைகின்ற சக்தி இயல்பாகவே இருக்கும். தேவையானதை சாதித்துக் கொள்ளக் கூடிய திறமை படைத்த உங்களுக்கு பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாக இருக்கப் போகிறது. குரு பகவான் மாதத்தின் முற்பகுதியில் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார். செல்வாக்கை அதிகரிப்பார். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகளை அகற்றுவார். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். சட்டப் பிரச்னைகள் சாதகமாகும். வம்பு, வழக்குகளில் இருந்து வெளியில் வருவீர்கள். வெளிநாடு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் ஆதாய மாதமாக இருக்கும். கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவானால் உங்கள் குறைகள் யாவும் தீரும். தைரியமுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். அனைத்திலும் லாபமான நிலை ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பெண்களுக்கு இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் விருப்பம் நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் அமையும். சிலருக்கு புதிய வேலை அமையும். சுயதொழில் செய்பவர்களுக்கு லாப நிலை ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் உண்டாகும். விவசாயிகள் விருப்பம் நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். மாணவர்களின் வெளிநாட்டுக் கனவு பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: மே 2,3அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,22,23, மே 4,5,13பரிகாரம்: துர்கையை வழிபட வாழ்க்கை வளமாகும்.புனர்பூசம் 1,2,3 ம் பாதம்: ஞான, அறிவுக்காரகனான குரு, புத்திகாரகனான புதன் பகவான் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றலும், விரும்பியதை அடையும் சக்தியும் இயல்பாகவே இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்வில் சிறப்பான மாதமாக இருக்கப் போகிறது. உங்கள் மூன்றாம் அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் எல்லாம் இல்லாமல் போகும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். பட்டம், பதவி, பொறுப்பு என்று உங்களைத் தேடி வரும். அரசியல்வாதிகளின் எண்ணம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும். மாதம் முழுவதும் தொழில்காரகன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். குருபகவான் மாதத்தின் முற்பகுதியில் யோகத்தை வழங்கினாலும் பிற்பகுதியில் செலவுகளை அதிகரிப்பார். புதிய வாகனம், இடம் என்று வாங்க வைப்பார். பிள்ளைகளின் கல்வி, புதிய வீடு கட்டுதல் என்று செலவுகள் நீளும். பெண்கள் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமாக இருப்பர். விருப்பங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். சிலருக்கு புதிய பொறுப்பு, விரும்பிய இட மாற்றம் ஏற்படும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். திறமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பணியாளர்களின் நிலை உயரும். மாணவர்களின் விருப்பம் பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: மே 3.4.அதிர்ஷ்ட நாள்: ஏப்.14, 21, 23, 30,மே 3,5,12.பரிகாரம்: குருபகவானுக்கு முல்லைப்பூ சார்த்தி வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்த ஒன்றையும் திட்டமிட்டு செய்து அதில் வெற்றி பெறக்கூடிய சக்தி இயல்பாகவே இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் யோகமான மாதமாக அமைய இருக்கிறது. இதுநாள் வரையில் நீங்கள் அடைந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக இக்காலத்தில் விலகப் போகிறது. உங்கள் தன, குடும்பாதிபதி ஜீவன ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் இருந்த நெருக்கடிகள் விலகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். மாதத்தின் முற்பகுதியில் குருபகவான் உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கினாலும் மே 1 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் நிலையை உயர்த்திட இருக்கிறார். வருவாயை வழங்கிட இருக்கிறார். இனி தைரியம், தன்னம்பிக்கை எல்லாம் உங்களுக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தோரின் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வந்து சேரும். மொத்தத்தில் இந்த மாதத்தில் இருந்து உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகப் போகிறது. இருந்தாலும் அஷ்டம ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரித்து வருவதால் உடல் நிலையில் எப்பொழுதும் கவனம் செலுத்தி வருவது நன்மையை உண்டாக்கும். கவுரவம், மரியாதை போன்றவற்றில் பாதகம் உண்டாக வாய்ப்பிருப்பதால் எந்த ஒரு தவறான வழியிலும் செல்லாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பிப்பார். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சுக்கிர பகவானின் அருளால் கனவுகள் பூர்த்தியாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். விவசாயிகள் விவசாயப்பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். பணியாளர்களின் நிலை உயரும் மாணவர்களின் விருப்பம் பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: மே 4.அதிர்ஷ்ட நாள்: ஏப்.20,21,29,30, மே 2,3,11,12பரிகாரம்: பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட இன்னல் தீரும். பூசம்: உடலுக்கும் மனதிற்கும் காரகனான சந்திரன், கர்மகாரகனான சனிபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்ளக் கூடிய வல்லமை இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து வரும் கேது பகவானால் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். உபயோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். பணியாளர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். வழக்குகள் உங்களுக்கு வெற்றியாகும். அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரன் மாதத்தின் முற்பகுதியில் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் விருப்பங்கள் பூர்த்தியாகும் மாதமாக இருக்கும். சுய தொழில் செய்பவர்களின் நிலை உயரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொறுப்பு வந்து சேரும். திருமண வயதினருக்கு நல்ல வரன் அமையும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, எதிர்பார்த்த பதவி வரும். விவசாயிகள் இந்த மாதம் விளைச்சலில் கவனம் செலுத்த வேண்டும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  மாணவர்களின் மேற்படிப்பு கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: மே 4,5அதிர்ஷ்ட நாள்: ஏப். 17,20,26,29, மே 2,8,11பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட வாழ்க்கை வளமாகும்.ஆயில்யம்: மனக்காரகன், உடல் காரகனான சந்திரன், வித்யா காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு அறிவாற்றலும், மற்றவர்களை வழிநடத்தும் திறனும், திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடையும் சக்தியும் எப்போதும் இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் யோகத்தை உண்டாக்கும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் மாதத்தின் பிற்பகுதியில் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய சொத்து வாங்குதல், புதிய ஒப்பந்தங்கள் என்று கையெழுத்திடுவீர்கள். தொழில்  ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சிகள் வெற்றி பெறும். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். செய்யும் தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியில் முன்னேற்றம் உண்டாகும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். உங்களின் தனித்திறமை வெளிப்படும். தைரியமாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்படும். புதிய சொத்து சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகள் கவனமாக செயல்படுவதால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மாணவர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும்.சந்திராஷ்டமம்: மே 5,6அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,20,23,29, மே 2,11.பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.

மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு தெய்வ அருள் எப்போதும் இருக்கும். மற்றவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்புகள் தானாகவே உங்களை வந்துசேரும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் நிலையில் மாற்றங்களை உண்டாக்கும் மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் திடீரென சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வியாபாரம், தொழிலை விரிவு செய்யும் முயற்சியை மேற்கொள்வீர்கள். வெளியூரில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள்; அதன் காரணமாக குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும். இதுவரையில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குருபகவான் உங்களுக்கு பாதுகாப்பாக இருந்து எல்லாவிதமான சங்கடங்களில் இருந்தும் விடுவிக்கும் நிலையில் மே1, 2024 முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் பணியாளர்கள் கவனமாக செயல்படுவது அவசியம். வியாபாரம், தொழிலில் கூடுதல் கவனம் தேவை. புதிய முதலீடுகள் செய்யும் முன் பலமுறை யோசிக்க வேண்டும். சனிபகவான் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணையுடன் சங்கடங்கள் ஏற்படும். நட்புகள் வட்டத்திலும் தேவையற்ற பிரச்னைகள் உருவாகும். கேதுபகவான் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதன் மூலம் சங்கடங்கள் தீரும். சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பணவரவு திருப்தி தரும். புத பகவானின் சஞ்சார நிலையால் சிலருக்கு புதிய சொத்து சேரும். பெண்கள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது நன்மையாகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் நெருக்கடி நீங்கும். நட்பு விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். வார்த்தைகளில் கவனம் தேவை. இல்லையென்றால் வார்த்தைகள் வழியே தேவையற்ற பிரச்னைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. விவசாயிகள் இக்காலத்தில் விளைச்சலில் கவனம் செலுத்துவதால் எதிர்பார்த்த வருமானம் வரும். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு இழுபறியாகும். இக்காலத்தில் ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்படுவது நன்மை தரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்கள் குலதெய்வ வழிபாட்டுடன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். சந்திராஷ்டமம்: மே 6,7அதிர்ஷ்ட நாள்: ஏப்.16,19,25,28, மே 1, 10பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்த சங்கடம் தீரும். பூரம்: களத்திரகாரகன், கலைக்காரகன், அதிர்ஷ்டகாரகனான சுக்கிரன், ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் எப்போதும் இருக்கும். எடுத்த காரியங்களை வெற்றியாக்கும் வல்லமை இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் எதிர்பார்த்த நன்மைகளை தரும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதனின் சஞ்சார நிலைகளாலும், ராசிநாதன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். புதிய முயற்சி வெற்றி பெறும்.  வெளியூர் பயணம் லாபத்தில் முடியும் என்றாலும், பணியாளர்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. சிலர் மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாக நேரலாம். மாதத்தின் பிற்பகுதியில் குரு பகவானும் இடம் மாறுவதால் நெருக்கடி அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகள் தோன்றும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத பிரச்னைகள் உங்களைத் தேடி வரும். கும்ப சனியால் குடும்பம், நண்பர்கள் மூலம் சங்கடங்கள் தோன்றும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். நன்றாக பழகி வந்தவர்களும் உங்களை விட்டு விலகிச் செல்வர். தொழில், வியாபாரத்தில் தடைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு மாதத்தின் முற்பகுதி சாதகமாகும். பிற்பகுதியில் பொருளாதார நெருக்கடி தோன்றும் என்றாலும், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உடலில் இருந்த சங்கடம் விலகும். நோய்கள் சிகிச்சையால் சரியாகும். அரசியல்வாதிகள் இக்காலத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வதுடன் எதிர்மறை சிந்தனைக்கு இடம் தர வேண்டாம். விவசாயிகள் விவசாயப் பணியில் கவனம் செலுத்துவது நல்லது. கலைஞர்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். மாணவர்களுக்கு மேற்படிப்பு கனவு நிறைவேறும்.சந்திராஷ்டமம்: மே 7,8அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,19,24,28, மே 1,6,10பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட மனக்கவலை தீரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.உத்திரம் 1 ம் பாதம்: பெருமைக்கும் பேரொளிக்கும் அனைத்து சக்திகளுக்கும் காரகனான சூரியனின் நட்சத்திரத்திலும் ராசியிலும் பிறந்த உங்களுக்கு செல்வாக்கு என்பது எப்போதும் இருக்கும். பிறக்கும் சித்திரை மாதத்தில் நட்சத்திர, ராசிநாதன் பாக்ய ஸ்தானத்தில் உச்சம் அடைவதால் கடந்த மாதங்களில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணியாளர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். மாதத்தின் முற்பகுதியில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். விருப்பங்கள் பூர்த்தியாகும் என்றாலும், பிற்பகுதியில் குருபகவான் ஜீவன ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உண்டான நெருக்கடிகள் குருபகவானின் பார்வையால் விலகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இக்காலத்தில் குடும்பத்தினர், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது அவசியம். அரசியல்வாதிகளுக்கு வார்த்தைகளில் கவனம் தேவை. இதுவரையில் இருந்த செல்வாக்கில் மாதத்தின் பிற்பகுதியில் மாற்றம் ஏற்படும். பெண்கள் எந்த ஒரு செயலிலும் அவசரம் காட்டுவது சங்கடத்தை ஏற்படுத்தும். சப்தம ஸ்தான சனியால் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். புதிய முயற்சிகளில் யோசித்து அதன் பிறகே ஈடுபட வேண்டும். பணியாளர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். உடன் பணிபுரிபவர்கள் எதிராக மாறலாம் எச்சரிக்கை அவசியம். விவசாயிகளுக்கு விளைபொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைப்பதில் இழுபறி ஏற்படும். மாணவர்கள் மேற்படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: மே 8,9அதிர்ஷ்ட நாள்: ஏப்.19,28, மே1,10பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட விருப்பம் நிறைவேறும். வாழ்வு வளமாகும்.

உத்திரம் 2,3,4 ம் பாதம்: ஆற்றலுக்கும் வெற்றிக்கும் காரகனான சூரியன், வித்தைகளுக்கு காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு வாழ்க்கையின் நெளிவு சுளிவு அனைத்தும் தெரிந்திருக்கும். நினைத்த இலக்கை அடைந்திடும் சக்தி உங்களுக்கு இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் மாதமாக இருக்கும். ஜென்ம ராசிக்குள் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரித்தாலும் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் சங்கடங்களை எல்லாம் விலக்கி வைப்பார். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தொழில், பணி, வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.  எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகுவதுடன் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். மே 1 முதல் குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் நெருக்கடி விலகி, உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்ததை சாதிக்கும் சக்தி உண்டாகும். பாதிப்பு, நெருக்கடி யாவும் கட்டுப்படும். அந்நியரால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். மாதத்தின் முற்பகுதியில் செவ்வாய் பகவானும் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் இரட்டிப்பு யோகம் உண்டாகும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும். பெண்களுக்கு இதுவரையில் இருந்த நெருக்கடி தீரும். மாதத்தின் பிற்பகுதியில் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். திருமண வயதினருக்கு வரன் வரும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் தரும். விவசாயிகளுக்கு கடந்த மாதம் இருந்த நெருக்கடி விலகும். கலைஞர்களுக்கு மாத பிற்பகுதியில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாணவர்களின் விருப்பம் நிறைவேறும். சந்திராஷ்டமம்: மே. 8,9.அதிர்ஷ்ட நாள்: ஏப். 14,19,23,28. மே. 1,5,10.பரிகாரம்: குலதெய்வ வழிபாடு குறைகளைப் போக்கும்.அஸ்தம்: மனதிற்கும், மகிழ்ச்சிக்கும், புகழுக்கும் காரகனான சந்திரன், கல்விக்கும் அறிவுக்கும் காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு சாதுரியமாக செயல்படும் அறிவாற்றல் இருக்கும். உங்கள் வாழ்க்கையில் எந்தநிலை வந்தாலும் சோர்ந்து போகாமல் செயல்படக் கூடியவர்கள் நீங்கள். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்வில் புதிய திருப்பத்தை உண்டாக்கும் மாதமாக இருக்கும். இதுவரையில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் மே 1 முதல் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு யோகத்தை ஏற்படுத்த இருக்கிறார். உங்கள் ராசிக்கும் குருபகவானின் பார்வை உண்டாவதால் இனி உங்களுக்கு மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். மாதம் முழுவதும் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் சங்கடங்களை விரட்டுவார். பிரச்னைகளில் இருந்து விடுவிப்பார். தைரியமாக செயல்பட்டு வெற்றி அடையக் கூடிய நிலையை ஏற்படுத்துவார். தொழில், வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு சிலருக்கு உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் கனவு நனவாகும். பெண்கள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம் விலகும். மேற்கல்வி வேலை போன்ற எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தைரியமாக செயல்படும் நிலை ஏற்படும். விவசாயிகள் கடந்த காலத்தில் சந்தித்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகள் வாழ்வில் எதிர்பார்த்த நன்மை ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி தரும். கலைஞர்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். மாணவர்களின் மேற்படிப்பு முயற்சி வெற்றி பெறும்.சந்திராஷ்டமம்: மே 9,10அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,20,23,29, மே 2,5,11பரிகாரம்: சந்திரபகவானை திங்கட்கிழமையில் வழிபட வாழ்க்கை வளமாகும்.சித்திரை 1,2 ம் பாதம்: ரத்தக்காரகன், யுத்தகாரகன், பராக்கிரம காரகனான செவ்வாய், கல்விக்காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை அடையும் சக்தி இருக்கும். சித்திரை மாதம் யோகமான மாதமாக இருக்கப் போகிறது. நட்சத்திரநாதன் ஆறாமிடத்தில் செவ்வாய், சனி பகவானும் சஞ்சரிக்கும் நிலையில் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். தடைபட்ட முயற்சி இனி நிறைவேறும். தடைபட்ட செயல்களில் லாபம் ஏற்படும். வம்பு, வழக்குகள் என்ற நிலை மாறி செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். நண்பர்கள், வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ஜென்ம கேதுவால் ஏற்பட்ட குழப்பங்கள் மே 1 முதல் விலகும். பாக்கிய குருவால் உங்கள் வாழ்வு முன்னேற்றத்தை நோக்கி செல்லும்.  இதுவரை நீங்கள் சந்தித்த பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படும்/ புதிய இடம், வாகனம் வாங்க யோகமுண்டு. சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர்களின் நிலை உயரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். பெண்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். திருமண வயதினருக்கு நல்ல தகவல் வரும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகி சுமூகமான நிலை ஏற்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்பர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகளின் விருப்பம் பூர்த்தியாகும். கலைஞர்களுக்கு வருமானம் கூடும். மாணவர்களின் கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: மே 10,11அதிர்ஷ்ட நாள்: ஏப். 14,18,23,27, மே 5,9பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.

சித்திரை 3,4 ம் பாதம்: தைரிய பராக்கிரம காரகனான செவ்வாய், அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எப்பொழுதும் எதிர்காலம் பற்றிய சிந்தனையே இருக்கும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேகம் இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்களுக்கு புதிய வழியினைக் காட்டப்போகிறது. சப்தம குருவின் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாவதால் தொழில், உத்தியோகம் போன்றவற்றில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய வேலை அமையும் என்றாலும், மே 1 முதல் குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் செயல்களில் சங்கடங்கள் தோன்றலாம். அதே நேரத்தில் உங்கள் நட்சத்திரநாதன் ஏப். 22 முதல் ஆறாமிடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் ஆற்றல் வெளிப்படும். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்ப்புகள் இல்லாத நிலை உருவாகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உங்கள் ராசிநாதன் மாதம் முழுவதும் எதிர்மறையாக சஞ்சரிப்பதால் எதிர்பாலினரிடம் எச்சரிக்கை அவசியம். யாரையும் நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். அது சங்கடத்தில் முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். விருப்பங்கள் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். புதிய நண்பர்களிடம் ரகசியங்களை சொல்ல வேண்டாம். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் மேற்படிப்பு பற்றிய சிந்தனை மே 7 க்கு பிறகு நிறைவேறும்.சந்திராஷ்டமம்: மே 10,11அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,18,24,27, மே 6,9பரிகாரம்: கருமாரியம்மனை வழிபட்டால் குறையனைத்தும் தீரும். சுவாதி: அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், யோகக்காரகன் ராகுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகமாகவே இருக்கும். அதனால் உங்கள் வழி என்பது தனி வழியாக இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்களுக்கு அதிர்ஷ்ட மாதம் என்றே சொல்ல வேண்டும். உங்கள் நட்சத்திரநாதன் ராகு பகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். எதையோ இழந்தது போல் நடமாடிய நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். செயல்கள் யாவும் வெற்றியாகும். உடலில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வழக்கு, விவகாரங்களில் முடிவு உங்களுக்கு சாதகமாகும். அரசியல்வாதிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். மாதத்தின் முற்பகுதியில் குருபகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் முடிவிற்கு வரும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். விவசாயிகள்  முன்னேற்றம் காண்பர். மாணவர்களுக்கு மேற்கல்வி முயற்சி வெற்றி பெறும். சந்திராஷ்டமம்: ஏப். 14, மே 11,12அதிர்ஷ்ட நாள்: ஏப். 15,22,24, மே 4,6பரிகாரம்: காளிகாம்பாளை தினமும் வழிபட்டால் வாழ்வு வளமாகும்.விசாகம் 1,2,3 ம் பாதம்: தன, புத்திர, ஞானக்காரகனான குரு, அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்த ஒன்றையும் கண்டறிந்து அதில் வெற்றி அடையும் ஆற்றல் இயல்பாகவே இருக்கும். செல்வமும் செல்வாக்கும் உங்களை வந்து சேரும். பிறக்கும் சித்திரை மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதம் என்றே சொல்ல வேண்டும். உங்கள் நட்சத்திரநாதன் ஏப். 30 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் நிலையில் முன்னேற்றம் அளிப்பார். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும்.  சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், இடமாற்றமும் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். ராகு பகவான் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். நீண்ட நாளாக தடைபட்ட முயற்சிகள் இப்போது வெற்றியாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இக்காலத்தில் பின்வாங்கி செல்வார்கள். அந்த அளவிற்கு உங்களுடைய செல்வாக்கு உயரும். பொருளாதாரம் மேம்படும். வியாபாரம், தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். மே 7 முதல் புத பகவானின் சஞ்சார நிலையால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சொத்து சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு திருமணம் நடந்தேறும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் உண்டாகும். விவசாயிகள் நிலையில் இருந்த சங்கடம் விலகும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் எண்ணம் நிறைவேறும்.சந்திராஷ்டமம்: ஏப். 15, மே 12,13.அதிர்ஷ்ட நாள்: ஏப். 21,24,30, மே, 3,6.பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டால் குறையனைத்தும் விலகும்.

விசாகம் 4 ம் பாதம்: தைரிய வீரிய காரகனான செவ்வாய், விவேகத்திற்கும் வித்தைகளுக்கும் காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு துணிச்சலும் தன்னம்பிக்கையும் தைரியமும் மன உறுதியும் பிறவி சொத்தாகும். பிறக்கும் சித்திரை மாதம் உங்களுக்கு புத்தொளி வழங்கும் மாதமாக இருக்கப் போகிறது. உங்கள் நட்சத்திர நாதன் ஒரு வருடமாக ஆறாம் இடத்தில் சஞ்சரித்து வரும் நிலையில் மே. 1 முதல் 7 ம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வாரத்தை இப்போது உங்கள் வாழ்க்கையில் மெய்ப்பட போகிறது. இது நாள் வரையில் உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகப் போகிறது. உங்கள் வாழ்க்கையில் அந்தஸ்தும் கௌரவமும் உண்டாகப் போகிறது. பொருளாதார சங்கடங்களில் இருந்து விடுபட போகிறீர்கள். புதிய வேலை வாய்ப்பு, புதிய தொழில் தொடங்குதல், செய்து வரும் தொழிலில் முன்னேற்றம்,  புதிய சொத்து சேர்க்கை என்ற கனவெல்லாம் உங்களுக்கு நனவாக போகிறது. கேது பகவானும் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வருமானத்தை அதிகரித்திட இருக்கிறார். எல்லா வகையிலும் இந்த மாதம் உங்களுக்கு ஒரு யோகமான மாதமாக இருக்கப் போகிறது. வெளிநாட்டு முயற்சிகள், கூட்டுத் தொழில்கள் யாவற்றிலும் இனி வெற்றி என்றே சொல்ல வேண்டும். வருமானம் பல வகையிலும் வர ஆரம்பிக்கும். சங்கடங்கள் விலகும். உடலில் இருந்த பாதிப்புகள் உங்களை விட்டு விலகும். பெண்களுக்கு உடல்நிலை சீராகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில், பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். புதிய பதவி பொறுப்பு வந்து சேரும். கலைஞர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களின் மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும்சந்திராஷ்டமம்: ஏப். 15. மே. 13.அதிர்ஷ்ட நாள்: ஏப். 18,21,27,30. மே. 3,9,12.பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை அதிகரிக்கும். அனுஷம்: ஆயுள்காரகன், தொழில்காரகன், கர்மக்காரகனான சனி, ரத்த யுத்த சகோதர காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு யோசித்து செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய சக்தி இருக்கும். எந்தவொரு செயலைக் கையில் எடுத்தாலும் அதை முடிக்கின்ற வலிமை இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் யோக மாதமாக இருக்கப் போகிறது. நட்சத்திர நாதன் சனிபகவான் 4ம் இடத்தில் சஞ்சரிப்பதுடன் அவருடைய 10ம் பார்வையும் உங்கள் ராசிக்கு ஏற்பட்டிருப்பதால் உடல், மனம், தொழில், உத்தியோகம், வருவாய் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை நீங்கள் அடைந்து வந்த நிலையில் இந்த மாதம் முழுவதும் தொழில் ஸ்தானாதிபதி சூரியன் 6 ல் உச்சம் பெறுவதால் நெருக்கடிகள் விலகும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் நீங்கும்.  தொழிலில் உண்டான தடைகள் விலகும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். அரசாங்க ரீதியாக எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். புதிய பதவி பொறுப்பு வந்து சேரும். கடந்த கால சங்கடங்களுக்கு முடிவு ஏற்படும். வராமல் இருந்த பணம் வந்து சேரும். மாதத்தின் பிற்பகுதியில் குருபகவான் சப்தம ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால் சங்கடங்கள் யாவும் விலகும். நீண்ட நாள் கனவு நனவாகும். செல்வாக்கு உயரும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். உடல் நிலையும் மனநிலையும் சீராகும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். புதிதாக இடம் வாங்குவது வாகனம் வாங்குவது என விருப்பம் பூர்த்தியாகும். விவசாயிகள் விளைபொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கப் பெறுவர். மாணவர்களின் கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 16, மே 13அதிர்ஷ்ட நாள்: ஏப். 17,18, 26, 27, மே 8,9பரிகாரம்: நவக்கிரக வழிபாட்டால் நன்மை அதிகரிக்கும். கேட்டை: கல்விக்கும், வித்தைக்கும் காரகனான புதன், ரத்த காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு ஒரு பக்கம் வேகம் மறுபக்கம் விவேகம் இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பவர்கள் நீங்களாக இருப்பீர்கள். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்களை உண்டாக்கும்.  இதுவரையில் நீங்கள் அடைந்த சங்கடம் அனைத்தும் தீரும். லாப ஸ்தானத்தில் கேது, 6ம் இடத்தில் சூரியன் என இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சூரியனும் கேதுவும் நன்மைகளை வழங்க உள்ள நிலையில், மே1 முதல் குருபகவானும் 7ம் இடத்தில் சஞ்சரித்து உங்களுக்கு யோகத்தை வழங்க உள்ளார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற நிலையின்படி இனி உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கடிகள் விலகும். தொழில், உத்தியோகம், வியாபாரத்திலிருந்த தடைகள் நீங்கும். வருமானம் உயரும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.. உடலில் இருந்த சங்கடங்கள் தீரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். மாதத்தின் பிற்பகுதியில் நட்சத்திரநாதன் புதனின் சஞ்சார நிலையால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். பெண்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஊதிய உயர்வு, புதிய பொறுப்பு வந்து சேரும். சுயதொழில் செய்து வருபவர்களின் நிலை உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பர்.  சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் அதிர்ஷ்ட மாதம் என்றே சொல்ல வேண்டும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும். விவசாயிகள் கவனமாக செயல்படுவதன் மூலம் லாபம் காண முடியும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வந்து சேரும். மாணவர்களின் மேற்கல்வி கனவு நிறைவேறும்.சந்திராஷ்டமம்: ஏப். 17,18.அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,23,27, மே 5,9பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நன்மை பன்மடங்காகும்.

மூலம்: தன புத்திர காரகனான குரு, ஞான மோட்சக்காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு வாழ்க்கையின் சூட்சுமங்கள் முழுமையாக தெரிந்திருக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனைகள் கூறி வழி நடத்துவதில் முதலானவராக இருப்பீர்கள். பிறக்கும் சித்திரை மாதம் உங்களுக்கு திருப்பங்களை உண்டாக்கும். உங்கள் நட்சத்திர நாதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். உங்கள் ராசிநாதன் இதுவரையில் உங்களுக்கு முன்னேற்றத்தையும் செல்வாக்கையும் வழங்கி வந்த நிலையில், மே 1 முதல் 6 ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதனால் முற்பகுதி உங்களுக்கு யோகமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி அடையலாம். திருமண வயதினருக்கு மாத முற்பகுதியில் நன்மையும், அதன் பின் தடைகளும் தாமதமும் ஏற்படும்.  மாதத்தின் முற்பகுதியில் செவ்வாய் பகவான் 3ல் சஞ்சரிப்பதால்  சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். தடைபட்ட முயற்சிகள் வெற்றியாகும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். பிற்பகுதி கவனமுடன் செயல்படுவது நல்லது.  பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டி வரும். மாதம் முழுவதும் சுக்கிர பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். விவசாயிகள் மாதத்தின் பிற்பகுதியில் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்கள் மேற்படிப்பிற்காக செய்யும் முயற்சி வெற்றி பெறும். சந்திராஷ்டமம்: ஏப்.18, 19அதிர்ஷ்ட நாள்: ஏப்.16,21,25,30, மே 3,7,12பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட விருப்பம் நிறைவேறும். பூராடம்: அந்தஸ்திற்கும் செல்வாக்கிற்கும் காரகனான குரு, அதிர்ஷ்டத்திற்கு காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு செல்வமும் செல்வாக்கும், அந்தஸ்தும் ஆற்றலும் இயல்பாகவே இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்களை சிந்திக்க வைக்கும் மாதமாக இருக்கும். ஏப்.30 வரையில் உங்கள் ராசிநாதன் 5ல் இருப்பதால் விருப்பம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும். ஏப். 26 முதல் நட்சத்திர நாதன் சுக்கிரனால் வரவு அதிகரிக்கும். தடைபட்ட முயற்சி வெற்றியாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சிலர் வாகனம் வாங்குவீர்கள். மே 1 முதல் குருபகவான் 6ல் சஞ்சரிப்பதால் அனைத்திலும் விழிப்புணர்வு தேவைப்படும். அரசியல்வாதிகள் தங்கள் விருப்பங்களை மாதத்தின் முற்பகுதியில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும். மாதத்தின் முற்பகுதியில் எண்ணம் நிறைவேறும். சிலருக்கு புதிய வேலை அமையும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். விவசாயிகளுக்கு விருப்பம் நிறைவேறும். பணியாளர்களின் நிலை உயரும். மாணவர்களின் எண்ணம் நிறைவேறும்.சந்திராஷ்டமம்: ஏப். 19,20அதிர்ஷ்ட நாள்: ஏப். 15,21,24,30. மே. 3,6,12.பரிகாரம்: ரங்கநாதரை வெள்ளிக்கிழமைகளில் வழிபட வாழ்வு செழிக்கும். உத்திராடம் 1 ம் பாதம்: ஆன்மக்காரகன், ஆற்றல் காரகனான சூரியன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படும் ஆற்றல் இருக்கும். அதில் வெற்றி அடையக் கூடிய திறனும் இயல்பாகவே இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் நிலையில் மாற்றங்களை உண்டாக்கிடும் மாதமாக இருக்கும். 5ல் சஞ்சரிக்கும் ராசிநாதனுடன் நட்சத்திர நாதன் சூரியனும் இணைவதால் அறிவாற்றல் விசாலமாகும். திட்டமிட்டு செயல்படக் கூடிய சக்தி அதிகரிக்கும். மாதம் முழுவதும் 3ல் சனி சஞ்சரிப்பதால் முயற்சி நிறைவேறும். தடைகள் விலக ஆரம்பிக்கும். தொழில்,  உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும். வெளிநாடு செல்லும் முயற்சி யோகம் தரும். கூட்டுத்தொழிலில் இருந்த சங்கடம் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றி பெறும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதம். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலோடு செயல்படக்கூடிய ஆற்றல் ஏற்படும். வேலைத் தேடுபவர்களுக்கு நல்ல தகவல் வரும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் விலகும். பணியாளர்கள் நிர்வாகத்தின் பாராட்டைப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். விவசாயிகள் கவனமாக செயல்பட்டால் நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த பயம் விலகும்.சந்திராஷ்டமம்: ஏப். 20,21அதிர்ஷ்ட நாள்: ஏப்.19,28,30, மே 1,3,10,12 பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

உத்திராடம் 2,3,4 ம் பாதம்: ஆயுள்காரகன், கர்மக்காரகனான சனிபகவான், ஆத்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எல்லாவற்றிலும் தனி ஆற்றல் இருக்கும். மற்றவர்களை உங்களுடன் இணைத்துக் கொண்டு செயல்பட வைக்கும் சாமர்த்தியம் இருக்கும். பிறக்கும் சித்திரை மாதத்தில் உங்கள் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட இருக்கிறது. ராகு 3ல் இருப்பதால் நன்மை பெற்று வரும் உங்களுக்கு, தொடர்ந்து மற்ற கிரகங்களும் ஆதரவாக சஞ்சரிக்க உள்ளனர். ஏப். 22 முதல் செவ்வாய் பகவானும் 3ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார் இதனால் இரட்டிப்பு யோகம் உண்டாகப் போகிறது. ஒரு பக்கம் ராகுவும், மறுபக்கம் செவ்வாயும் யோகம் வழங்க இருக்கிறார்கள். நினைத்த செயலை செய்து முடிக்கும் ஆற்றல் இப்போது உங்களுக்கு உண்டாகும். தொட்டதில் எல்லாம் வெற்றி என்ற நிலை ஏற்படும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். வேலை தேடுவோருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் சுபிட்ச நிலை ஏற்படும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். பெண்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். முயற்சி யாவும் வெற்றியாகும். தடை, தடுமாற்றம் விலகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்னைகள் விலகும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் வரும். விவசாயிகளுக்கு யோகமான காலகட்டம். மாணவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 20,21அதிர்ஷ்ட நாள்: ஏப். 17,19,26,28, மே 1,8,10பரிகாரம்: சிவபெருமானை வழிபட சங்கடம் யாவும் விலகும். திருவோணம்: நிலைத்த புகழுக்கும் ஆயுளுக்கும் காரகனான சனிபகவான், உடலுக்கும் மனதிற்கும் காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு மற்றவர்களின் ஆதரவு என்பது குறைவாகவே இருக்கும். அதே நேரத்தில் எந்த ஒரு செயலையும் தனித்து நின்று செய்து அதில் வெற்றியடையும் சக்தி உங்களுக்கு இருக்கும். பிறக்கும் சித்திரை முன்னேற்றம் தரும் மாதமாக அமையப் போகிறது. இது வரையில் 4ல் சஞ்சரித்த குருபகவான் மே1 முதல் 5ல் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் உங்களுக்கிருந்த சங்கடம் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து யாவும் உயரும். தொழிலில் இருந்த தடைகள், பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். முடியாமல் இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். விலகிப் போன உறவுகளும் உங்களைத் தேடி வரும் நிலை ஏற்படும். இக்காலத்தில் குலதெய்வ அருள் முழுமையாக உங்களுக்கு கிடைப்பதால் எல்லாவித சங்கடங்களில் இருந்தும் வெளிவருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்ட மாதம் என்றே சொல்ல வேண்டும். பொது வாழ்வில் ஈடுபடுவோருக்கு புதிய பொறுப்பு, பதவி வந்து சேரும். வேலைத் தேடி வருவோரின் முயற்சி பலிதம் ஆகும். திருமண வயதினருக்கு நல்ல வரன் வரும். 3ல் சஞ்சரிக்கும் ராகுவால் முயற்சி யாவும் வெற்றியாகும். பெண்களுக்கு இக்காலம் யோகமான காலமாகும். ரிஷப குரு உங்கள் குறைகளை நீக்குவார். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். வாழ்வில் எதிர்பார்த்த மாற்றங்களை ஏற்படுத்துவார். பொன், பொருள், பூமி சேர்க்கையும் உண்டாக்குவார். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். மாணவர்களின் முயற்சி யாவும் வெற்றி பெறும். சந்திராஷ்டமம்: ஏப். 21,22அதிர்ஷ்ட நாள்: ஏப். 17,20,26,29, மே 2,8,11பரிகாரம்: மூன்றாம் பிறையன்று சந்திரனை வழிபட வாழ்வு வளமாகும்.அவிட்டம் 1,2 ம் பாதம்: தைரிய, வீரிய காரகனான செவ்வாய், ஆயுள் காரகனான சனியின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்த ஒரு செயலிலும் தைரியத்துடன் ஈடுபட்டு வெற்றி பெறும் ஆற்றல் இருக்கும். பிறக்கும் சித்திரை விருப்பங்கள் நிறைவேறும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் ஏப்.22 முதல் 3ல் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ராகுவும் அங்கே சஞ்சரிப்பதால் லாப நிலை அதிகரிக்கும். நிலுவை பணம் வந்து சேரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரம், தொழிலில் புதிய பாதை தெரியும். புதிய முதலீடுகளால் லாபம் காண்பீர்கள். மே 1 முதல் குரு பகவானும் அதிர்ஷ்டங்களை தர இருப்பதால் முன்னேற்றம் அதிகரிக்கும். இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலகும். அலுவலகப்பணியில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். தொழிலாளிகளுக்கு ஊதியம் அதிகரிக்கும். மதிப்பு உயரும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பல வழிகளிலும் பணம் வர ஆரம்பிக்கும். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் உண்டான கவலைகள் விலகும். திருமண வயதினருக்கு வரன் வந்து சேரும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் அளிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும்.  சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். அரசியல்வாதிகளின் விருப்பம் நிறைவேறும். விவசாயிகள் எதிர்பார்த்த வருமானத்தை அடைவர். மாணவர்களுக்கு முயற்சி வெற்றி பெறும். சந்திராஷ்டமம்: ஏப்.22,23அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,18,26,27, மே. 8,9பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமனை வழிபட அல்லல் தீரும்.

அவிட்டம் 3,4 ம் பாதம்: சர்வ சக்திக்கும் காரகனான சனி, உடல் உறுதிக்கும் மன உறுதிக்கும் தைரியத்திற்கும் காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு துணிச்சலும் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகபட்சமாக இருக்கும். எந்த ஒரு செயலையும் தைரியமாக செய்து முடிப்பதில் வல்லவர்கள் நீங்கள். பிறக்கும் சித்திரை மாதம் இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடியை நீக்கி வைக்கும் மாதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் மாதம் முழுவதும் சஞ்சரிக்கும் சூரிய பகவான் உங்கள் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார்.  தடைபட்ட செயல்களை லாபமாக்குவார். அரசு ரீதியிலான முயற்சிகளில் ஆதாயத்தை ஏற்படுத்துவார் என்றாலும், ஜென்ம சனியால் வாழ்க்கைத் துணையுடனும், நட்புகளுடனும் சங்கடம் தோன்றலாம். குழப்பங்கள் உருவாகலாம் என்பதால் கவனமாக செயல்படுவதால் இழப்பு ஏற்படாமல் போகும். அரசியல்வாதிகள் எந்த ஒன்றிலும் அவசரம் காட்டாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பதால் விருப்பம் நிறைவேறும். பணியாளர்களுக்கு இதுவரை இருந்த சங்கடங்கள் நீங்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வாக்கு ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். வரவு, செலவுகளில் எச்சரிக்கை வேண்டும். பெண்களுக்கு இந்த மாதம் விருப்பம் நிறைவேறும் மாதமாக இருக்கும். ஆனால் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதுடன் தங்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். போராட்டமான நிலை இருக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயார் செய்வது நன்மை தரும். சந்திராஷ்டமம்: ஏப். 22,23அதிர்ஷ்ட நாள்: ஏப். 17,18,25,27, மே 8, 9பரிகாரம்: காளியை வழிபட முயற்சி அனைத்தும் வெற்றியாகும்.சதயம்: யோகத்திற்கும், போகத்திற்கும் காரகனான ராகு, ஆயுள் காரகனான சனி பகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு உழைப்பின் மீது அதிகமான அக்கறை இருக்கும். எந்த ஒன்றிலும் வெற்றி அடைய வேண்டும் என போராடுவீர்கள். பிறக்கும் சித்திரை மாதத்தில் வழக்கமான செயல்களிலும் நீங்கள் கவனமாக ஈடுபட வேண்டும். உங்கள் நட்சத்திர நாதன் குடும்ப ஸ்தானத்திலும், ராசிநாதன் ஜென்மத்திலும், அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம், வருவாய் என்று எல்லாவற்றிலும் இழுபறிகள் இருக்கும். போட்டியாளர்களால் நெருக்கடி அதிகரிக்கும். முதலீடு தேக்கமடையும். பணியாளர்கள் இந்த மாதம் கவனமாக செயல்படுவதால் எதிர்பார்த்த நன்மையை அடையலாம். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் மாதம் முழுவதும் உங்கள் செயல்களை வெற்றியாக்குவார். நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். அரசு விவகாரங்களில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். உங்களுக்கு எதிராக சிலர் மறைமுகமாக செயல்படுவார்கள் என்பதால்  விழிப்புணர்வு அவசியம். உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத் துணை, நண்பர்களுடன் அனுசரித்துச் செல்வதால் சுமூகமான நிலை நீடிக்கும். இல்லையெனில் பிரச்னைகள் உருவாகலாம். பெண்கள் இந்த மாதம் நிதானமாக செயல்பட வேண்டும். அவசரப்பட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உடல் நிலையிலும், வாழ்க்கைத் துணையின் உடல் நிலையிலும் கவனம் வேண்டும்.  குலதெய்வ வழிபாட்டால் நெருக்கடி விலகி நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் யோகமாக இருந்தாலும் தலைமையிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. விவசாயிகள் தங்கள் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். மாணவர்கள் மேற்படிப்பிற்குரிய முயற்சியில் அக்கறை செலுத்துவர். சந்திராஷ்டமம்: ஏப்.23,24அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,22,26, மே 4,8பரிகாரம்: மூகாம்பிகையை மனதில் நினைத்து வழிபட்டால் நன்மை பெருகும். பூரட்டாதி 1,2,3 ம் பாதம்: தனகாரகன், ஞானக்காரகனான குரு, ஆயுள் காரகனான சனி பகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்பட்டு வெற்றி அடையும் திறன் இருக்கும். சமூகத்தில்  மரியாதை இருக்கும். பிறக்கும் சித்திரை மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் மாதத்தின் பிற்பகுதியில் 4 ம் இடத்திற்கு பெயர்ச்சியாவதால் அவருடைய பார்வைகள் உங்களுக்கிருந்த சங்கடங்களை விலக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். உடல் நலக்குறைவு அகலும். விரயங்கள் கட்டுப்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சூரியன் 3 ல் உச்சம் பெறுவதால் முயற்சிகள் வெற்றியாகும். லாபநிலை உண்டாகும். அதே நேரத்தில் ஜென்ம சனியும், வாக்கு ஸ்தான ராகுவும், அஷ்டம ஸ்தான கேதுவும் சஞ்சரிப்பதை மனதில் கொண்டு விழிப்புடன் செயல்பட்டால் சங்கடங்கள் குறையும். புதிய முயற்சிகளை இக்காலத்தில் தள்ளி வைப்பது நல்லது. வழக்கமான செயல்களில் மட்டும் ஈடுபடுவதால் இழப்பு குறையும். வியாபாரம், தொழிலில் இக்காலத்தில் கவனம் அவசியம். உத்தியோகம், பார்த்துவரும் பணிகளில் விழிப்புணர்வு தேவை. பெண்களுக்கு வெற்றியும் சங்கடமும் கலந்த மாதமாக இருக்கும். நிதானமாக செயல்பட்டால் நன்மை அடையலாம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகள் குறையும். யாரிடமும் கோபதாபம், அந்தரங்க ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். அதனால் பிரச்னைகள் அதிகரிக்கும். உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவார்கள் என்பதால் விழிப்புணர்வு அவசியம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வரும். விவசாயிகள் சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் எதிர்காலத்தை யோசித்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். சந்திராஷ்டமம்: ஏப்.24அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,21,26,30,மே 3,8,12பரிகாரம்: வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட வாழ்வு வளமாகும்.

பூராட்டாதி 4 ம் பாதம் : ஞானம், அந்தஸ்திற்கு காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு மற்றவர்களை வழி நடத்துகின்ற சக்தி இருக்கும். மற்றவர்களின் முன்பு நீங்கள் உயர்வான இடத்தில் இருப்பீர்கள். பிறக்கும் சித்திரை மாதம் உங்களுக்கு அனுபவங்களை உண்டாக்கும் மாதமாக இருக்கும். ஏப். 30 வரை உங்கள் ராசிநாதன் குருவால் சுபிட்சங்கள் அதிகரிக்கும். நினைப்பது நடக்கும். தொழில், உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். மே 1 முதல் குருபகவான் 3ம் இடத்திற்கு செல்வதால் இந்த நிலையில் மாற்றம் உண்டாகும். உங்களுடன் இருந்தவர்கள் உங்களுக்கு எதிராக மாறிடக்கூடிய வாய்ப்பு ஏற்படும். உங்களிடம் தொழில் கற்றவர்கள் உங்களுக்கு எதிராக தொழில் தொடங்கும் நிலையும் ஏற்படும். உத்தியோகத்தில் சிறுசிறு சங்கடங்கள் வரும். என்றாலும் மாதம் முழுவதும் அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரனும், வித்தைக்காரகனான புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவுகள் இருக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு புதிய இடம் வாங்கும் நிலை உண்டாகும். ஜென்ம ராசிக்குள் ராகு, 7ல் கேது, 2ல் சூரியன் என்று சஞ்சரிக்கும் நிலை உங்களுக்கு எதிர்பாராத சங்கடங்களை ஏற்படுத்தும். பொருளாதார ரீதியாக, உடல் ரீதியாக, குடும்ப ரீதியாக நெருக்கடிகள் தோன்றும். குலதெய்வ வழிபாடும், இஷ்டதெய்வ வழிபாடும் உங்களைப் பாதுகாக்கும். குடும்பத்தினருடன் முடிந்தவரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். அரசியல்வாதிகள் நிதானமாக செயல்படுவதால் நன்மைகள் காணலாம். விவசாயிகளுக்கு மாதத்தின் தொடக்கத்தில் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பிற்பகுதியில் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தினர், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் பெண்கள் நெருக்கடியில் இருந்து தப்பலாம். ஜென்ம ராகு ஆசையை அதிகரிப்பார் என்பதால் ஒவ்வொன்றிலும் நிதானம் தேவை. குடும்ப கவுரவத்திற்கு மாறான செயல்கள் இக்காலத்தில் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரியவர்களின் வழிகாட்டுதல்படி நடப்பது அவசியம்.  மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.சந்திராஷ்டமம்: ஏப். 24அதிர்ஷ்ட நாள்: ஏப். 21,30, மே 3,12பரிகாரம்: துர்கையை வழிபட்டால் துன்பம் அனைத்தும் தீரும். உத்திரட்டாதி: ஆயுள்காரகன், கர்மக்காரகனான சனி, ஞானக்காரகன், தனக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு நினைப்பதை சாதித்திடும் சக்தி இருக்கும். பிறக்கும் சித்திரை உங்கள் நிலையில் மாற்றங்களை உண்டாக்கும் மாதமாக இருக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் பல வழிகளிலும் செலவுகளை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையை உருவாக்குவார். பணவரவில் தடைகளை ஏற்படுத்துவார் என்றாலும் ஏப். 30 வரை உங்கள் ராசிநாதன் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மாதத்தின் முற்பகுதி உங்களுக்கு யோகமாக இருக்கும். பிற்பகுதியில் விரய சனி, சப்தம கேது, குடும்ப ஸ்தானத்தில் சூரியன் என்று உங்கள் நிலையில் குழப்பங்களை அதிகரிப்பார்கள். தேவையற்ற பிரச்னைகளில் தலையிட்டு அதன் வழியாக சங்கடங்களை சந்திக்க நேரலாம் கவனம்.   தொழில், வியாபாரம் போன்றவற்றில் நெருக்கடி ஏற்படும். நண்பர்களும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். புதிய நட்புகளால் சங்கடம் தோன்றலாம். அரசியல்வாதிகள் சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவது அவசியம். பெண்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்து நடக்க வேண்டிய நிலை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகும். தேவையற்ற நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் இக்காலத்தில் மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் உங்கள் விருப்பப்படி செயல்படுவதால் சங்கடங்கள் இல்லாமல் போகும். குலதெய்வ வழிபாடு உங்களை எல்லா சங்கடங்களில் இருந்தும் பாதுகாக்கும். விவசாயிகள் முடிந்தவரை நிதானமாக செயல்படுவது நல்லது.  மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி சாதகமாக இருக்கும். பிற்பகுதியில் சில சோதனைகள் தோன்றும்.சந்திராஷ்டமம்: ஏப்.25அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,21,26,30, மே 3,8,12பரிகாரம்: மீனாட்சியம்மனை வழிபாடு வாழ்க்கையை வளமாக்கும். ரேவதி: கல்விக்காரகன் வித்தைக்காரகனான புதன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, எந்த ஒரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டு வெற்றி அடையும் சக்தி உண்டு. பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்கும் மாதமாக இருக்கும். இந்த மாதம் முழுவதும் உங்கள் நட்சத்திரநாதன் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதுடன் அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனும் யோகத்தை வழங்கிட இருப்பதால் நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். பொன் பொருள் வரவு இருக்கும். செலவிற்கேற்ற வரவு உண்டாகும் இருந்தாலும் மே 1 முதல் உங்கள் ராசிநாதன் 3 ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் அடைந்து வந்த நன்மைகளில் மாற்றம் ஏற்படும். கவனமாக செயல்பட வேண்டியதாக இருக்கும். மற்றவர்களை அனுசரித்துப் போவதால் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கும். உங்கள் ஜென்ம ராசிக்குள் ராகு பகவான் சஞ்சரிப்பதால் ஆசைகள் அதிகரிக்கும். பொன் மீது பொருள் மீது ஆசை உண்டாகும். அதன் காரணமாக குறுக்கு வழியில் செல்ல முயற்சிப்பீர்கள். இக்காலத்தில் குறுக்கு வழி செயல்பாடுகள் சங்கடத்தை ஏற்படுத்தும். பிரச்சினையை உருவாக்கும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களையும் நட்பு வட்டத்தையும் அனுசரித்துச் செல்வது மிகவும் அவசியம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம்  வாக்கு வாதங்கள் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும். புதிய முயற்சிகளை இக்காலத்தில் தவிர்ப்பது நன்மையாகும். பெண்கள் கவனமாக செயல்பட வேண்டும் 7 ம் இடத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணையிடமும் நட்புகளிடமும் கவனம் வேண்டும். பேச்சு, செயல் எல்லாவற்றிலும் நிதானம் வேண்டும். இல்லையெனில் தேவையற்ற சங்கடங்கள் தோன்றும். அரசியல்வாதிகள் வார்த்தைகளில் நிதானம் காக்க வேண்டும். இல்லையெனில் சட்ட சிக்கல்களுக்கு ஆளாக வேண்டிய நிலைவரும். விவசாயிகள் கவனமாக செயல்படுவதால் நஷ்டங்கள் இல்லாமல் போகும். மாணவர்களுக்கு மேற்படிப்பின் மீது கவனம் தேவை.சந்திராஷ்டமம்: ஏப். 26.அதிர்ஷ்ட நாள்: ஏப். 14,17,23. மே. 5,8.பரிகாரம் பெருமாளை வழிபட பிரச்சினைகள் விலகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement


    • Dinamalar Events


    Dinamalar