sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

15

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 979

No online classes for schools: Minister Anbil Mahesh

Kalvimalar News

15-Oct-2024

மேஷம்: அசுவினி..  முயற்சியில் உறுதியாக இருந்து வெற்றி பெறக்கூடிய ஆற்றல் பெற்ற உங்களுக்கு, இந்த மாதத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடலில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி இருந்த இடம் தெரியாமல் போகும். வழக்குகள் சாதகமாகும். அரசு பணியாளர்கள் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். குரு பகவனால் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் வருமானமும் கூடும். குடும்பத்தில் சுபிட்சமான பலன் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு சொத்து சேரும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். கோயில் வேண்டுதல் நிறைவேறும். பெரியோரின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். ராசிநாதன் அக். 24 முதல் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலை பளு அதிகரிக்கும்,  உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள்.  தாயாரின் உடல் நிலையில் அக்கறை தேவை. வருமானம் ஒரு பக்கம் அதிகரிக்கும் என்றாலும் மறுபுறம் சனிபகவானின் பார்வையால் உங்கள் நிலையில் சங்கடம் உண்டாகும். ஒரு நேரம் இருப்பதுபோல் மறுநேரம் இருக்க முடியாமல் போகும். மறைமுக எதிரிகளால் சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். ஒவ்வொரு செயலில் கவனமுடன்  ஈடுபடுவதும் மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவதும் நன்மை பயக்கும்.சந்திராஷ்டமம்: நவ 2, 3அதிர்ஷ்ட நாள்: அக் 18, 25, 27. நவ 7,9, பரிகாரம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும். நன்மை அதிகரிக்கும்.பரணி : எதையும் எதிர்கொண்டு வெற்றி அடையக்கூடிய ஆற்றலுடைய உங்களுக்கு ஐப்பசி மாதம் முழுவதும் யோகமான பலன் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகி கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். சூரியனால் சில மாற்றங்களை சந்திக்க வேண்டி வரும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வியாபாரம் செய்பவர் தங்கள் நிறுவனத்தை விரிவு செய்வீர். பொதுவாக வருமானத்திற்காக உழைப்பீர். அதன் காரணமாக உடல் நிலையிலும் சங்கடம் ஏற்படும். தாய்வழி உறவுகளால் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சனி பகவானின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் கவனம் தேவை. பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு உதவியாக இருப்பர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் எச்சரிக்கை. புதன் பகவான் ராசிநாதனின் வீட்டில் சஞ்சரிப்பதால் ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்கள் கனவு நனவாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி நிறைவேறும். வங்கியில் கேட்ட பணம் கைக்கு வரும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும். சூழ்நிலை  சாதகமாகும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும்.சந்திராஷ்டமம்: நவ 3, 4அதிர்ஷ்ட நாள்: அக் 18, 24, 27. நவ 6, 9, 15.பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மை அதிகரிக்கும்.கார்த்திகை 1 ம் பாதம்: வாழ்வின் முன்னற்றத்தை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். நட்சத்திர நாதன் ராசியைப் பார்ப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பும் அதன் காரணமாக உழைப்பும் அதிகரிக்கும். வியாபாரிகள் நிலையில் மாற்றம் ஏற்படும். தொழில் முன்னேற்றம் அடையும். லாப சனியால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். பணியாளர் ஒத்துழைப்பாக இருப்பர். அக். 26 முதல் புதன் பகவானால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர். தடைபட்டிருந்த வேலை எளிதாக நடந்தேறும். சனி பகவானின் பார்வை, ராசி நாதனாலும் உடல் நிலையில் கவனமாக இருப்பது உங்களுக்கு நல்லது. சிறு சிறு தொந்தரவு ஏற்பட்டு மருத்துவச் செலவு ஏற்படும். விரய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வரவு செலவில் கவனமாக இருப்பதுடன், சட்டத்திற்கு விரோதமான வருமானத்தை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளை ஏற்பதும், கோயில் வழிபாடு திருப்தி தரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது.சந்திராஷ்டமம்: நவ 5.அதிர்ஷ்ட நாள்: அக் 18,19,27,28. நவ 1,9,10பரிகாரம்: குலத்தெய்வத்தை வழிபட வாழ்வில் நன்மை அதிகரிக்கும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்.. பிறருக்கு வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு, இம்மாதம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் ஆற்றலை வழங்கும் 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் தடைபட்ட  வேலைகள் எல்லாம் எளிதாக நடக்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும். வியாபாரப் போட்டி விலகும். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.செல்வாக்கு உயரும். வழக்கு என சங்கடப்பட்டவர்களின்  நிலையில் மாற்றம் ஏற்படும். உழைப்பாளிகளின் நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை விலக ஆரம்பிக்கும். உடலில் இருந்த சங்கடம் தீரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். நீங்கள் எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் அதிகரிக்கும். லாப ஸ்தான ராகுவால் வருமானம் அதிகரிக்கும். மேலை நாட்டு முயற்சி சாதகமாகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ராசி நாதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நட்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் ஆலோசனை இக்காலத்தில் உங்களைப் பாதுகாக்கும். உங்கள் வேலைகளில் மட்டும் இக்காலத்தில் கவனம் செலுத்துவதும் நன்மையை வழங்கும். செவ்வாய் பகவானால் எடுக்கிற முயற்சி எல்லாம் வெற்றி அடையும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு இருந்த சங்கடம் விலகும். வாழ்க்கையில் புதிய பாதைத் தெரியும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். வரவு அதிகரிக்கும். கடன் கேட்ட இடத்தில் பணம் வரும். நவ 4 முதல் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் செய்துவரும் வேலையில் அக்கறை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய தொழில் அமையும்.சந்திராஷ்டமம்: நவ 5.அதிர்ஷ்ட நாள்: அக் 19, 24, 28. நவ 1, 6, 10, 15.பரிகாரம்: சூரிய பகவானை வழிபட சுபிட்சம் உண்டாகும்.ரோகிணி : திட்டமிட்டு வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலைக்கு சென்று கொண்டிருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். நட்சத்திரநாதனால் மேற்கொள்ளும் முயற்சி யாவும் வெற்றியாகும். இதுவரை தடைபட்ட வேலை முடிவிற்கு வரும். உங்கள் திறமையும் செல்வாக்கும் வெளிப்படும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு விலகும். நீண்ட காலமாக விற்க முடியாமல் இருந்த இடத்தை விற்கவும், வாங்க நினைத்த இடத்தை வாங்கவும் முடியும். வருமானம் அதிகரிக்கும். குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் இதுவரை இருந்த அலைச்சல் குறையும், விலகி இருந்தவர்களுக்கு இனி குடும்பத்துடன் இருக்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கும். நெருக்கடி நீங்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பொருளாதாரம் விரைவாக முன்னேற்றம் அடையும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். தினப்பணியாளர்கள், ஊழியர்களுக்கு உயர்வு உண்டாகும். இதுவரை இருந்த சங்கடம் விலகும். நெருக்கடி மாறும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். சுய தொழில் செய்து வருவோருக்கும், கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும்.சந்திராஷ்டமம்: நவ 6அதிர்ஷ்ட நாள்: அக் 20, 24, 29. நவ 2, 11, 15.பரிகாரம்:  நடராஜர் வழிபட்டால் வெற்றி உண்டாகும்.மிருகசீரிடம் : நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். இழுபறியாக இருந்த வேலை எல்லாம் நடக்கும். புதிய முயற்சி லாபமாகும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சூரியன் உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை குறைப்பார். வீட்டில் நிலவிய குழப்பமான சூழலுக்கு ஒரு மாற்றத்தை உண்டாக்குவார். உங்கள் திறமை வெளிப்படும் காலம். வழக்கு சாதகமாகும். தொழில் நிறுவனங்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். செய்து வரும் தொழிலில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். இருந்தாலும், அனைத்தையும் சமாளித்திடும் சக்தி  ஏற்படும். அதிகாரி உங்களுக்கு உதவியாக இருப்பார். பதவி உயர்வை எதிர்பார்ப்பவர்களுக்கு  நல்ல தகவல் வரும். தினப்பணியாளர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் குறையும். நெருக்கடி தானாக நீங்கும் காலம் இது. சகோதரர்கள் வழியில் ஒற்றுமை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.சந்திராஷ்டமம்: நவ 7.அதிர்ஷ்ட நாள்: அக் 18, 24, 27. நவ 6, 9, 15.பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்; மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்..மனதில் துணிவும் செயலில் நிதானமும் கொண்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாக இருக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் வக்ரமடைந்திருப்பதால் செலவு கட்டுப்படும். அலைச்சல் குறையும். செயல்களில் ஏற்பட்ட போராட்ட நிலை மாறும். நவ 4 முதல் உங்கள் ராசிக்குரிய பாக்யாதிபதி சனி வக்கிர நிவர்த்தி அடைந்து ஆட்சியாக சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். தெய்வ அனுகூலமும் பெரியோர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும். இதுவரை ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அக் 25 முதல் உங்கள் ராசிநாதன் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் பூமி சம்பந்தமான விவகாரம் முடிவிற்கு வரும். ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர். வரவு பல வகையிலும் அதிகரிக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றடையும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். தொழிலாளர்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதித்திடும் நிலை ஏற்படும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்துவதால் நினைத்த இலக்கை அடைய முடியும்.சந்திராஷ்டமம்: நவ 7.அதிர்ஷ்ட நாள்: அக் 18, 23, 27. நவ 5, 9, 14.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் தீரும்.திருவாதிரை: எந்த ஒன்றிலும் தனித்துவத்துடன் செயல்பட்டு யோகத்தை அடைந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்தில் கேந்திரமாக சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும் பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருந்து லாபத்தை உண்டாக்குவர். அக் 25 முதல் உங்கள் ராசிநாதன் எண்ணங்களை பூர்த்தியாக்குவார். புதிய முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்ப்புகள் இல்லாத நிலையை உருவாக்குவார். கையில் எடுக்கின்ற முயற்சிகளில்  எல்லாம் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வம்பு வழக்குகள் என்றிருந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். புதிய ஒப்பந்தம் உங்கள் கைக்கு வரும். வெளிநாட்டு தொடர்புடைய முயற்சி பலிக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் செலவு  கட்டுப்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். நண்பர்களால் லாபம் உண்டாகும். உறவுகள் உங்களுக்கு உதவியாக இருப்பர். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு உங்களை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும். தினப் பணியாளர்கள் நிலையில் உயர்வு தோன்றும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: நவ 8அதிர்ஷ்ட நாள்: அக் 22, 23, 31. நவ 4, 5, 13, 14பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடம் நீங்கும்புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்:  பிறரை அனுசரித்துச் செல்லும் குணமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த நிலையில் வக்ரம் அடைந்திருப்பது உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தும். பொருளாதார ரீதியாக இருந்த சங்கடம் படிப்படியாக குறையும். நவ 4 முதல் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்டு வந்த முயற்சி வெற்றியாகும். நினைப்பதை எல்லாம் நடத்திக் கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். தைரியமாக செயல்பட்டு உங்கள் பணியில் லாபம் காண்பீர். உத்யோகத்தில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். உடலை பாதித்துக் கொண்டிருந்த நோய் நொடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் மதிப்பு அதிகரிக்கும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் எச்சரிக்கை இருப்பது அவசியம். உங்கள் முன்னேற்றத்திற்காக ஓய்வு உறக்கமின்றி உழைப்பீர்கள். அரசியல் வாதிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். உங்கள் முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை இக்காலத்தில் காண முடியும். புதிய இடம் வாங்கும் முயற்சி, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். நவீன பொருட்களின் சேர்க்கை ஒரு சிலருக்கு உண்டாகும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி லாபமாகும். வெளிநாட்டுக்கு சென்று வர நினைத்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: நவ 9.அதிர்ஷ்ட நாள்: அக் 21, 23, 30. நவ 3, 5, 12, 14.பரிகாரம்: நவக்கிரக குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.

கடகம்; புனர்பூசம் 4 ம் பாதம்.. தெளிவான சிந்தனையுடன் பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய  மாதம். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நன்மைகளை வழங்கி வந்த குரு பகவான், மாதம் முழுவதும் வக்ரம் அடைவதால் பொருளாதார நிலையில் தடையும், முயற்சியும், இழுபறியும் உண்டாகும். சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் உடல் நிலையில் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது. பெண்கள் குடும்பத்தலைவர் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. சில வேலைகள் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது பகவான் உங்களைக் கவசம்போல் பாதுகாப்பார்.எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். சுக்கிரனால் முன்னேற்றம் உண்டாக்கும். பொன் பொருள் சேர்க்கைக்கு வழி வகுப்பார். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகளை நீக்கி வைப்பார். பணியாளர்கள் சிலருக்கு உழைப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஏற்படும். எடுத்த வேலை சில நேரங்களில் இழுபறி ஆனாலும் வருமானம் தடையின்றி வரும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். வரவு செலவில் இருந்த சங்கடம் விலகும். எடுக்கின்ற ஒவ்வொரு வேலையிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.  அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதும், முதலாளிகள் பேச்சைக் கேட்டு செயல்படுவதும் சங்கடங்களை அண்ட விடாமல் செய்யும். குடும்பத்திலும் பிறர் வார்த்தைக்கு மதிப்பளித்து செயல்படுவது இக்காலத்தில் அவசியம். உடல் நிலையில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.சந்திராஷ்டமம்: நவ 9.அதிர்ஷ்ட நாள்: அக் 20, 21, 29, 30. நவ 2, 3, 11, 12.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.பூசம் :  நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு வாழும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். நவம்பர் 4 ம் தேதி முதல் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்கிடக் கூடிய சனிபகவான் சில நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உண்டு. உடல், மனரீதியாக சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும்.உங்களுக்கு குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் தெளிவில்லாமல் செயல்பட வேண்டிய நிலைக்கு ஆளாவீர். பதட்டம், பரபரப்பு எல்லாம் பற்றிக் கொள்ளும். தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைத்து அதனால் சங்கடங்களை சந்திக்க வேண்டிய நிலை வரும்.  உங்கள் முயற்சி எல்லாம் வெற்றியாகும். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் முயற்சிக்கேற்ப லாபம் காண முடியும். வரவில் எந்த ஒரு தடையும் இருக்காது. வார்த்தைகளில் நிதானம் தேவை. வரவு செலவில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்கள் எச்சரிக்கையாக இருப்பதும், வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை கொள்வதும்  அவசியம். விட்டுக் கொடுத்து செயல்படுவது நன்மையை உண்டாக்கும். ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். தொழிலை விருத்தி செய்வதற்கு மேற்கொண்ட  முயற்சி லாபத்தை உண்டாக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: நவ 10அதிர்ஷ்ட நாள்: அக் 17, 20, 26, 29.பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானை வழிபட சங்கடம் தீரும்.ஆயில்யம் : உலக அறிவும், செயல்களில் தெளிவும், நிதானமாக ஒவ்வொன்றையும் நடத்தி முடிக்கும் ஆற்றலும் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் பிறரை அனுசரித்துச் சென்று ஆதாயம் காணும் மாதமாக இருக்கும். அக் 25 வரை புத பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த வரவு இருக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். செய்து வரும் வியாபாரத்தை விரிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். நெருக்கடிகளை சமாளிக்கின்ற அளவிற்கு வருமானம் வரும். அதே நேரத்தில் வழக்கத்தைவிட வேலை பளு கூடுதலாகும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடி ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர் மாற்றம்  ஏற்படும்.  சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் உடல்நலையில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது நல்லது. சூரியனால் அலைச்சலும் உழைப்பும் இருந்து கொண்டே இருக்கும். மூன்றாம் இடத்து கேது நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். வருமானத்திற்குரிய வழியை உண்டாக்குவார்.  வெற்றி அடைய வேண்டிய மாதம். எந்த ஒன்றையும் ஒரு முறைக்கு இருமுறை கவனமாக யோசித்து அதன் பிறகு செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.சந்திராஷ்டமம்: நவ 11அதிர்ஷ்ட நாள்: அக் 20, 23, 29, நவ 2, 5, 14.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.

சிம்மம்: மகம்..எதிலும் முதன்மையாக இருக்கும் திறனும் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். நீங்கள் எடுக்கிற வேலை எல்லாம் லாபத்தில் முடியும். இதுவரை இருந்த சங்கடம் முடிவிற்கு வரும். அரசு வழி முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். அரசியல்வாதி்கள் செல்வாக்கு உயரும். பணியாளர்களின் கனவு நனவாகும். வியாபாரம், தொழிலில் இருந்த தடை விலகும். உழைப்பவர்கள் நிலையில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் உங்களுக்கு நன்மைகளை வழங்குவார். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நவ 4 முதல் ஆயுள் காரகன் சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் உடல் நலனில் எப்போதும் கவனமாக இருப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கை அவசியம். சிறிய நோய்கள் உண்டானாலும் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நன்மையை ஏற்படுத்தும். அக் 25 முதல் புதனின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் விருப்பம் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: நவ 11, 12.அதிர்ஷ்ட நாள்: அக் 19, 25. நவ 1, 7, 10.பரிகாரம்: விநாயகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.பூரம்: நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாக இருக்கும். செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இடம் வாங்குவதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். விவசாயிகளுக்கு லாபம் கூடும். அதன் பிறகு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் விற்பனையாகாமல் இருந்த இடம் விற்பனையாகும்.  சூரியனால் அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி, சலுகை கிடைக்கும். தொழிலில் இருந்த தடை நீங்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். உங்கள் நீண்ட நாள் முயற்சி இப்போது வெற்றியாகும். செயல்களில் இருந்த தடை விலகும். நவ 4 முதல் ஏழாமிடத்தில் சனி வக்ர நிவர்த்தி ஆவதும், அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் உடல் ரீதியாகவோ, அல்லது பொருளாதார ரீதியாகவோ சில சங்கடங்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தும். எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். எந்த ஒன்றையும் நன்கு ஆராய்ந்து செயல்படக்கூடிய ஆற்றல் பெறுவீர். உறவினர் உங்களுடைய செயல்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அதனால் சங்கடம் விலகும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: நவ 12, 13அதிர்ஷ்ட நாள்: அக் 19, 24, 28. நவ 1, 6, 10, 15.பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.உத்திரம் 1 ம் பாதம்: நினைத்ததை சாதிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதம். நீங்கள் எடுக்கின்ற முயற்சி ஒவ்வொன்றும் வெற்றியாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். வரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். ஒரு சிலருக்கு புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும். எந்த ஒன்றையும் திட்டமிட்டு செயல்பட்டு அதில் லாபம் காணும் நிலை ஏற்படும். மாதத்தின் முற்பகுதியில் பூமி காரகன் செவ்வாயால் நீங்கள் எடுக்கும் முயற்சி லாபத்தை உண்டாக்கும். உங்கள் திறமை வெளிப்படும். அக் 25 முதல் எந்த ஒன்றையும் ஆராய்ந்து செயல்படக்கூடிய நிலைக்கு வருவீர்கள். அதன் காரணமாக நெருக்கடி உங்களை நெருங்காமல் போகும். இருந்தாலும் நவ 4 முதல் சனி வக்ர நிவர்த்தி அடைவதும், அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் ஆரோக்கியத்தில் சில சங்கடம் ஏற்படுத்தும்.  பொருளாதார ரீதியாக பாதிப்பை உண்டாக்கும் என்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் இம்மாதத்தில் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: நவ 13.அதிர்ஷ்ட நாள்: அக் 19, 28. நவ 1, 10.பரிகாரம்: சூரிய பகவானை வழிபட சங்கடம் விலகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்:..சூழ்நிலை அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி யாவும் லாபத்தில் முடியும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர். சிலருக்கு புதிய சொத்து சேரும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மருத்துவம் போன்ற துறையினருக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து ஆட்சியாக சஞ்சரிப்பதால் ஆற்றல் வெளிப்படும். எதிர்ப்பு இல்லாமல் போகும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். போட்டியாளர் விலகிச் செல்வர். வழக்கு விவகாரம் சாதகமாகும். உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு திருப்தியாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தம் ஒரு சிலருக்கு கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். சிலருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு இருந்த நெருக்கடி விலகும். பணவரவு திருப்தி தரும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: நவ 14.அதிர்ஷ்ட நாள்: அக் 19, 23, 28. நவ 1, 5, 10.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட வளம் உண்டாகும்.அஸ்தம் ; எப்போதும் குழப்பமின்றி செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி, பிரச்னை ஒவ்வொன்றாக விலகும். குரு பகவான் வக்ரம் அடைந்திருந்தாலும் செவ்வாயும், சனியும் உங்கள் நெருக்கடியை குறைப்பர். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. செல்வாக்கு உயரும். எதிர்ப்புகள் நீங்கும். போராட்ட நிலை முடிவிற்கு வரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி இல்லாமல் போகும். எல்லாவற்றிலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். செவ்வாய் பகவான் அக் 26 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் பூமி யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் அக் 25 வரை நீங்கள் எடுக்கின்ற முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரத்தினால் வருமனம் உயரும். நவீன பொருட்கள் சேரும். கணவன் மனைவிக்குள் இருந்த இடைவெளி குறையும். எதிர்பார்ப்பு உடனுக்குடன் பூர்த்தியாகும். நினைத்ததை சாதித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இந்த நேரத்தில் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு வருமானம் கூடும்.சந்திராஷ்டமம்: அக் 18, 19. நவ 15.அதிர்ஷ்ட நாள்: அக் 20, 23, 29. நவ 2, 5, 11, 14.பரிகாரம்: கபாலீசுவரரை வழிபட சங்கடம் விலகும்சித்திரை 1, 2 ம் பாதம்: துணிச்சலும் மனவலிமையும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதம். உங்கள் ராசி அதிபதியும் நட்சத்திராதிபதியும் போட்டி போட்டு யோகத்தை  வழங்குவர். அக் 24 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் எடுக்கும் முயற்சி யாவும் லாபமாகும். விவசாயம், உணவகம், ரியல் எஸ்டேட்,  பில்டர்ஸ், கெமிக்கல், மருத்துவம், காவல்துறை, தீயணைப்புத்துறை, பெட்ரோலியம் போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சகோதரர்கள் வழியில் ஏற்பட்டிருந்த பிரச்னை விலகும்.வருமானம் அதிகரிக்கும். தினப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை இருக்கும். சுக்கிரனின் சஞ்சார நிலையினால் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வருமானம் கூடும். நவீன பொருட்கள் வாங்க முடியும். இந்த நேரத்தில் குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும் நட்புகள் வழியாக உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் பின் விளைவுகள் பற்றி நன்றாக யோசித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும். விவசாயிகள் நிலை உயரும்.சந்திராஷ்டமம்: அக் 19அதிர்ஷ்ட நாள்: அக் 18, 23, 27. நவ 5, 9, 14.பரிகாரம்: முருகனை வழிபட உங்கள் நிலை உயரும்.

துலாம்: சித்திரை 3, 4 ம் பாதம்: எதையும் துணிச்சலாக செய்யும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் நினைத்ததை சாதிக்கும் மாதம்.  ராசிநாதன் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் திறமை வெளிப்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். தடைபட்ட வரவு கிடைக்கும். ஒரு சிலருக்கு பொன் பொருள், வாகனச்சேர்க்கை உண்டாகும். நினைத்ததை சாதி்க்கும் அளவிற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குரு பகவானின் வக்ரத்தினால் இதற்கு முன்பிருந்த நெருக்கடி இனி இருக்காது. செயல்களில் தெளிவு இருக்கும். ஒவ்வொன்றையும் யோசித்து செயல்படக்கூடிய எண்ணம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் காண்பதற்கு திட்டம் தீட்டுவீர். வரவு செலவில் நிதானம் அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. வித்யா காரகனால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். ராசிக்குள் லாபாதிபதி சஞ்சரிப்பதால் விருப்பம் நிறைவேறும். உழைப்பில் தீவிர கவனம் செல்லும். அதன் காரணமாக ஒரு சிலருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். இந்த மாதம் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கடந்த மாதத்தை விட வருவாய் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். அக் 24 முதல் செவ்வாய் பத்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும்.சந்திராஷ்டமம்: அக் 20அதிர்ஷ்ட நாள்: அக் 18, 24, 27. நவ 6, 9, 15.பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட நன்மை அதிகரிக்கும்.சுவாதி:  உங்கள் விருப்பப்படியே செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்ட மாதம். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். எதிர்வரும் சோதனைகளை இல்லாமல் செய்வீர். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி இல்லாமல் போகும். உத்தியோகத்தில் எதிராக செயல்பட்டவர் பலவீனம் அடைவர். இக்காலத்தில் உங்கள் திறமை வெளிப்படும். ராசிநாதன் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் வாழ்க்கைத் துணையின் ஆதரவு  கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். லாப முயற்சி வெற்றியாகும். நவ 4 முதல் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் ஒவ்வொன்றிலும் அக்கறை செலுத்த வேண்டி வரும். குழந்தைகளை இக்காலத்தில் கவனித்து வழிநடத்துவது அவசியம். அதிவேக வாகனங்களால் அவர்களுக்கு சங்கடம் உண்டாகும்.  இழுபறியாக இருந்த பூர்வீக சொத்து விவகாரம் ஒரு முடிவிற்கு வரும். ஏற்றுக்கொள்வது நல்லது. வியாபாரம் தொழிலில் ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களுக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும்.  தினப்பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும்.சந்திராஷ்டமம்: அக் 20, 21.அதிர்ஷ்ட நாள்: அக் 22, 24, 31. நவ 4, 6, 13, 15.பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வளம் உண்டாகும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்: நினைத்த வேலைகளை நினைத்தபடி முடிக்கும் திறனும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதம். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் இதற்கு முன் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். 6 ம் வீட்டில் சஞ்சரிக்கும் ராகு யோகத்தை அதிகரிப்பார். நினைத்த வேலைகளை முடித்திடக்கூடிய வழிகளை உண்டாக்குவார். எதிர்ப்பு, பிரச்னை என்றிருந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். இழுபறியான வழக்கு சாதகமாகும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதனின் சஞ்சாரத்தால் நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர். ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் பதட்டம் அதிகரிக்கும். வேகமாக செயல்படுவீர். உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். நவ 4 முதல் சனி பகவான் ஐந்தாமிடத்தில் வக்ர நிவர்த்தி அடைவதால் அனைத்திலும் கவனம் தேவை. குடும்பத்தினரை இக்காலத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் ஆலோசனை கேட்டு செயல்படுவதால் நெருக்கடி இல்லாமல் போகும். பண வரவு தடையில்லாமல் வரும். அதனால், எல்லா பிரச்னைகளையும் சமாளித்திடக்கூடிய சக்தி ஏற்படும். வெளிநாட்டு தொடர்பு உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: அக் 21அதிர்ஷ்ட நாள்: அக் 24, 30. நவ 3, 6, 12, 15.பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்.. நினைத்ததை சாதிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம்.  உங்கள் நட்சத்திர நாதன் வக்ரம் பெற்றிருப்பதால் இதுவரை அவரால் கிடைத்த நற்பலன் கிடைக்காமல் போகும். சுலபமான வேலை கூட இப்போது இழுபறி ஆகும். எதிரிகள், வியாபார போட்டியாளர் கை மேலோங்கும். உங்கள் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். பிறரை நம்பி எந்தவொரு வேலையினையும் வழங்க வேண்டும். சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லாவற்றிலுமே ஒருவித நெருக்கடி இருக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். அரசு வழியில் சிலர் அபராதம் கட்ட நேரும். கவனமாகவும் நேர்மையாகவும் செயல்பட்டால் மட்டும்தான் அனைத்தையும்  சமாளிக்க முடியும். அனைத்து விவகாரங்களிலும் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலை பளுவிற்கு ஆளாவர். வரவேண்டிய பணம் இழுபறியாகும். எதிர்பார்த்த விவகாரம் தள்ளிப் போகும். என்றாலும், இந்த நேரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களைப் பாதுகாப்பார். நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுப்பார். நன்மைகளை அதிகரிப்பார். தெய்வ சிந்தனையும், கோயில் வழிபாடும் இந்த மாதத்தில் உங்களைப் பாதுகாக்கும். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்த வேண்டும். பணியாளர் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மாணவர்களுக்கு அக் 25 முதல் படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: அக் 22அதிர்ஷ்ட நாள்: அக் 18, 21, 27, 30. நவ 3, 9, 12.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.அனுஷம்:  நீதி நேர்மை நியாயம் என அனைத்திலும் யோசித்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சவாலான மாதம். சுக்கிரனால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். என்றாலும், செயல்பாட்டில் நெருக்கடி ஏற்படும். நவ 4 முதல் உங்கள் நட்சத்திரநாதன் வக்ர நிவர்த்தி அடைவதுடன் அவருடைய 10 ம் பார்வையால் உங்கள் ராசியையும் பார்க்கிறார். அதன் காரணமாக உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் கவனமாக செயல்படுவது மட்டுமே இக்காலத்தில் சங்கடங்களில் இருந்து  விடுபட முடியும். அரசு வழி விவகாரம் இழுபறியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர் மாற்றம் உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர் பிறரை அனுசரித்துச் சென்று செயல்படுவது அவசியம். தேவையற்ற சங்கடங்களும் நெருக்கடிகளும் இக்காலத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு மட்டுமே உங்கள் பலமாக இருக்கும். விவசாயிகள் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கவனம் சிதறும் பிற்பகுதி யோகமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: அக் 22, 23.அதிர்ஷ்ட நாள்: அக் 18, 26, 27. நவ 8, 9, பரிகாரம்: சனீஸ்வர வழிபாட்டால் சங்கடம் நீங்கும்.கேட்டை:  எளிதில் வெற்றிபெறும் சக்தி கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் உழைப்பால் முன்னேற்றம் அடையும் மாதம். எதிர்பாராத செலவுகள் தோன்றும். ராசிநாதன் மாதத்தின் முற்பகுதியில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்த ஒன்றிலும் போராடி வெற்றிபெற வேண்டிய நிலை உண்டாகும். உறவுகள் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். எதிர்பார்த்த பணம் வருவதில் இழுபறியாகும். வரவேண்டிய ஒப்பந்தம் தள்ளிப்போகும். அரசு வழி முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும். சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால், உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கை அவசியம். இதுவரை சுமூகமாக சென்று கொண்டிருந்த ஒவ்வொரு வேலையும் இப்போது நெருக்கடியை உண்டாக்கும். மனம் குழப்பம் அடையும். கேது வியாபாரம் தொழிலில் இருந்த நெருக்கடிகளை நீக்கி லாபத்தை வழங்குவார். ஜென்ம ராசிக்குள்ளும், தன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் சுக்கிர பகவான் உங்கள் நிலையை உயர்த்துவார். வரவை அதிகரிப்பார். சந்தோஷத்திற்கு ஆளாக்குவார். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் மனம் தெளிவடையும். ஐந்தாம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் பிள்ளைகள் நலனில் இக்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது நல்லது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: அக் 23, 24.அதிர்ஷ்ட நாள்: அக் 18, 27. நவ 5, 9, 14.பரிகாரம்: பைரவரை வழிபட பயம் போகும்.

தனுசு: மூலம்.. உதவுவதில் முன்னிலை வகிக்கும் குணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். இதுவரை இருந்த நெருக்கடி எல்லாம் இந்த மாதத்தில் உங்களை விட்டு விலகும். உங்கள் ராசிநாதன் 6 ம் இடத்தில் வக்ரம் அடைந்திருப்பதால் குடும்பத்தில் இனி நிம்மதி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்ப்பு நீங்கும். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர் விலகுவர். 3 ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் இனி உங்கள் முயற்சி எல்லாம் வெற்றியாகும். உத்தியோகம், தொழிலில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பொருளாதார வரவு திருப்தி தரும். விலகிச் சென்ற உறவினர் உங்களைத்தேடி வருவர். வழக்கு விவகாரம் சாதகமாகும். சுக்கிரன் சஞ்சாரத்தினால் வரவு திருப்தி தரும். மாதத்தின் முதல் வாரத்தில் சில நெருக்கடி ஏற்படும். விவசாயிகள் தங்கள் முயற்சியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழிலில் இருப்பவர்கள் இக்காலத்தில் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு அக் 25 வரை யோகமாக இருக்கும் அதன் பிறகு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த நெருக்கடி விலகி லாபம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: அக் 24, 25அதிர்ஷ்ட நாள்: அக் 21, 30. நவ 3, 7, 12, விநாயகருகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை உண்டாகும்.பூராடம்: உங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதிலும், பிறருக்கு வழிகாட்டுவதிலும் முதன்மையானவராக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி எல்லாம் விலக ஆரம்பிக்கும். உங்கள் நட்சத்திர நாதன் மாதம் முழுவதும் யோக பலன்களை வழங்கிட இருப்பதால் பல வகையிலும் வரவு உண்டாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பொன் பொருள், புதிய வாகனம் சேரும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர். குடும்பத்திலிருந்த நெருக்கடி விலகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் அரசு வழி முயற்சி லாபத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த பணம் வரும். அனுமதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவு  உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு திறமைக்கேற்ற முன்னேற்றமும் ஊதிய உயர்வும் கிடைக்கும். விவசாயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத் துணை இக்காலத்தில் உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருப்பார்.  நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் அக்கறையும் பிற்பகுதியில் அலட்சியமும் ஏற்படலாம். இந்த நேரத்தில் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: அக் 25, 26.அதிர்ஷ்ட நாள்: அக் 15, 21, 24, 30. நவ 3, 6, 12, 15.பரிகாரம்: மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட வளம் உண்டாகும்.உத்திரம் 1 ம் பாதம்: பிறருக்கு வழிகாட்டும் திறமையும் பெற்ற உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி எல்லாம் விலக ஆரம்பிக்கும். லாப ஸ்தானத்தில் உங்கள் பாக்யாதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் அரசு வழி முயற்சி எல்லாம் ஆதாயத்தை ஏற்படுத்தும். சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஒரு சிலருக்கு இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு விருப்பம் பூர்த்தியாகும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக் காரகனின் சஞ்சார நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கையும் புதிய வாகனம் வாங்கும் முயற்சியும் வெற்றியாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் இனி நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செயல்களில் இருந்த தடை  விலகும். உடல்நிலை முன்னேற்றமடையும். சுறுசுறுப்பாக செயல்படுவீர். வாழ்க்கைத் துணை உங்கள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார். பிள்ளைகள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உறவினரிடம் இருந்த மனக்கசப்பு விலகும். எதிர்பார்ப்பு எதிர்பார்த்தபடி பூர்த்தியாகி சந்தோஷம் அடைவீர். மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: அக் 26அதிர்ஷ்ட நாள்: அக். 19, 21, 28, 30. நவ 1, 3, 10, 12.பரிகாரம்: காலையில் சூரிய நமஸ்காரம் செய்ய நன்மை உண்டாகும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்: நீதி நேர்மை நியாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் செயல்களில் நிதானம் தேவை. முன்புபோல், எல்லாம் எளிதாக நடந்து விடும். உங்கள் முயற்சி எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு  பலன்கள் கிடைக்கும். ராகு மாதம் முழுவதும் உங்களுக்கு யோகமான நிலையினை உண்டாக்குவார். செவ்வாய் சஞ்சரிப்பதால் அதுவரை உங்கள் செயல்கள் வெற்றியாகும். எதிர்ப்பு இல்லாமல் போகும்  சக்தி வெளிப்படும். வம்பு வழக்கு என்றிருந்த நிலை  சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது அவசியம். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். இயந்திரப் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். மாதம் முழுவதும் சூரியன் 10 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளித்துக் கொள்ளக்கூடிய சக்தி ஏற்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். இக்காலத்தில் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது மிகவும் அவசியம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும்.சந்திராஷ்டமம்: அக் 26, 27.அதிர்ஷ்ட நாள்: அக் 19, 26. நவ 1, 8, 10.பரிகாரம்: வராகியை வழிபட வளம் உண்டாகும்.திருவோணம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் சக்தி பெற்ற உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். இதுவரை உங்களுக்கு நன்மைகளை வழங்கி வந்த குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் இதற்கு முன்பிருந்த நிலையில் மாற்றம் உண்டாகும். மிக எளிதாக நடைபெற்ற வேலை கூட இப்போது கடும் முயற்சியால் தான் முடிவிற்கு வரும். மாதத்தின் முதல் வாரத்தில் நினைத்த வேலைகளை உங்களால் நடத்திக் கொள்ள முடியும். பூமி சம்பந்தப்பட்ட விவகாரம் சாதகமாகும். அதன் பிறகு சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும் என்பதால் அதற்குள் அனைத்தையும் முடித்துக் கொள்வது நல்லது. மாதம் முழுவதும் சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். முழு நேரமும் தொழில் பற்றிய சிந்தனையே உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இந்த நேரத்தில் 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்களுக்கு யோகப் பலன்களை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பார். நீங்கள் எடுக்கும் முயற்சியின் அளவிற்கு உங்களுக்கு லாபம் ஏற்படும்.  ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரை இக்காலத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. இதற்கு முன்பு எளிதாக இருந்த வரவில் இப்போது தடையும் தாமதமும் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். இயந்திரப் பணியில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனத்தை இயக்கும்போது கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை இக்காலத்தில்  நன்மை தரும். நன்றாக பழகி வந்தவர்களும் உங்களை விட்டு விலகிச் செல்லக்கூடிய நிலைமை உண்டாகும். இதுவரை கிடைத்து வந்த முன்னேற்றம் அந்தஸ்தில் சில பின்னடைவுகள் தோன்றக்கூடும் ஒவ்வொன்றிலும் நிதானமாகவும் கவனமாகவும் செயல்படுவது இக்காலத்தில் அவசியமானதாகும். பெரியவர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவதும், அவசர செயல்களை தவிர்ப்பதும் சங்கடங்களில் இருந்து விடுவிக்கும். தினப்பணியாளர்கள், சிறு வியாபாரிகள் எந்த ஒன்றிலும் அவசரப்பட வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது அவசியம்.சந்திராஷ்டமம்: அக் 27, 28அதிர்ஷ்ட நாள்: அக் 20, 26, 29. நவ 2, 8, 11.பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட வளம் உண்டாகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திர நாதனால் உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அதன் பிறகு கவனமாக செயல்படுவது அவசியம். மாதம் முழுவதும் முயற்சி ஸ்தானமான 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், தொழில் ஸ்தானமான 10 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும் உங்களுக்கு நன்மைகளை வழங்கிட உள்ளனர். எந்த அளவிற்கு நீங்கள் முயற்சிகளை மேற்கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு ஆதாயம் கிடைக்கும். தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். புதிய ஒப்பந்தம் வரும். வேலை வாய்ப்புக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அங்கீகாரம் உண்டாகும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை, பணவரவு என்பது இருக்கும். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் குடும்பத்தில் சிறு சலசலப்பு உண்டாகும். பணவரவில் தடை, தாமதம் என்ற நிலை ஏற்படும், உடல்நிலையில் ஏதேனும் சங்கடம் இருந்து கொண்டே இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அளவிற்கு சூழ்நிலை மாறும். எல்லாவற்றிலும் கவனமாக செயல்படுவது மட்டும் தான் இக்காலத்தில் உங்களுக்கு நன்மையாக இருக்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும் அவரின் ஆலோசனைக்கு மதிப்பளிப்பதும் அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்: அக் 28அதிர்ஷ்ட நாள்: அக் 18, 26. நவ 8, 9.பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட நன்மை உண்டாகும்.

கும்பம்: அவிட்டம் 3, 4 ம் பாதம்:எந்த ஒரு நிலையிலும் சங்கடப்படாமல் தொடர்ந்து முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சிந்தித்து செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம சனியின் தாக்கம் உங்களுக்கு ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை உண்டாகும். உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். நண்பர்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்லக்கூடிய நிலை ஏற்படும். அஷ்டம கேதுவின் சஞ்சாரம் உங்கள் நிலையில் சில சங்கடங்களை ஏற்படுத்தும். உங்கள் உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி  நீங்கும். போட்டியாளர்கள் பலமிழப்பர். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குடும்ப உறவுகளை இக்காலத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. வார்த்தைகளில் கவனம் தேவை. வரவு செலவில் எச்சரிக்கை அவசியம். புதன் பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. தலைமையை அனுசரித்துச் செல்வதால் நல்லது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் நிதானமாக செயல்பட வேண்டும்.  ஒரு சிலருக்கு தேவையற்ற பிரச்னை தேடிவர வாய்ப்பிருப்பதால் அமைதியாக, வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்தி வருவது மட்டுமே இக்காலத்தில் நன்மை அளிக்கும்.சந்திராஷ்டமம்: அக் 29, 30.அதிர்ஷ்ட நாள்: அக் 18, 26, 27. நவ 8, 9பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட இன்னல் தீரும்.சதயம்: நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திட்டமிட்டு செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு குழப்பம் ஏற்படும். வருமானத்தில் தடையும் தாமதமும் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சங்கடம் தோன்றும். உங்களுடைய செல்வாக்கிற்கும் அந்தஸ்திற்கும் குறைவு ஏற்படுகிற நிலை உண்டாகும். இந்த நேரத்தில் நவ 4 ல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் செய்து வரும் தொழிலில் நெருக்கடி உண்டாகும். உங்களுக்கு பக்க பலமாக இருந்தவர்கள் விலகிச் செல்லும் நிலை உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் எப்போதும், ஏதாகிலும் ஒரு பிரச்னை உண்டான படி இருக்கும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி ஏற்படும். எல்லாவிதமான சங்கடங்களையும், நெருக்கடிகளையும் வெற்றி கொள்ள முடியும். பிரச்னை எதுவாக இருந்தாலும் அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அக் 25 முதல் புதன் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் தடைபட்ட முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். நவ 8 முதல் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.சந்திராஷ்டமம்: அக் 30, 31அதிர்ஷ்ட நாள்: அக் 22, 26. நவ 4, 8, 13.பரிகாரம்: காளியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: நீதி நேர்மை நியாயத்தையும் மனதில் கொண்டு வாழும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் உங்கள் வாழ்வில் புதிய பாதையைக் காட்டும் மாதம். உங்கள் நட்சத்திரநாதன் 4 ம் இடத்தில் வக்ரம் அடைந்திருப்பதால் அவருடைய பார்வைகளின் பலன்களும் இந்த நேரத்தில் உங்களுக்கு கிடைக்காமல் போகும். அதே நேரத்தில் அக் 24 முதல் ஆற்றல் காரகனான செவ்வாய் பகவான் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளித்திடக்கூடிய சக்தி ஏற்படும். எந்த ஒன்றையும் எதிர்கொண்டு செயல்படுவீர்கள். உங்கள் உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி, போட்டி விலகும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர் பலமிழப்பார். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு ஏதாகிலும் ஒரு வகையில் நெருக்கடியை வழங்கிக் கொண்டிருப்பர். பொருளாதார ரீதியாக தடை உண்டாகும். சனி வக்ர நிவர்த்தி அடைவதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். செய்துவரும் தொழிலில் எதிர்பாராத தடை ஏற்படும். எதை நீங்கள் பலமாக நினைத்து செயல்பட்டு வந்தீர்களோ அவற்றில் பின்னடைவு உண்டாகும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் சங்கடம் உண்டாகும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி தோன்றும்.  புதன் உங்களைப் பாதுகாப்பார். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: அக் 31அதிர்ஷ்ட நாள்: அக் 21, 26, 30. நவ 3, 8, 12.பரிகாரம்: வீரட்டேஸ்வரரை வழிபட வளம் உண்டாகும்.

மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம் ..வாழ்க்கையை புரிந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் சிந்தித்து செயல்பட வேண்டிய மாதம். ராசிநாதன் வக்ரமடைந்திருப்பதால் இதற்கு முன்பிருந்த சங்கடங்கள் இல்லாமல் போகும். நெருக்கடி நீங்கும். மனக்குழப்பம் விலகும். அதே நேரத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு எதிர்மறையாக இருக்கும். ஒவ்வொரு செயலிலும் நிதானமாக, யோசித்து அடி எடுத்து வைக்க வேண்டும். ஜென்மத்தில் சஞ்சரிக்கும் ராகு தவறான பாதைக்கு அழைத்துச் செல்லலாம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது நட்புகளால் குடும்பத்தில் குழப்பங்களை உண்டாகும். சூரியனால் நெருக்கடி அதிகரிக்கும். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் செலவு அதிகரிக்கும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும். பணிபுரியும் இடத்தில் வேலையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க கூடாது. குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வது இக்காலத்தில் நன்மையாக இருக்கும். தவறான நட்புகளை விட்டு விலகுவது பெரும் சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியாகும். நவ 8 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வரவு அதிகரிக்கும். எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது இந்த நேரத்தில் அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.சந்திராஷ்டமம்: அக் 31அதிர்ஷ்ட நாள்: அக் 21, 30. நவ 3, 12.பரிகாரம்: முன்னோரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரட்டாதி: நீதி நேர்மை நியாயம் அந்தஸ்து கௌரவம் என்ற வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் உங்கள் நட்சத்திர நாதன் சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் செலவுகள் பல வழியிலும் அதிகரிக்கும். அதனால் வரவு செலவில் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் ராசிநாதன் வக்ரம் அடைந்திருப்பதால் சிந்திக்காமல் செயல்படக்கூடிய நிலை ஏற்படும். அதன் காரணமாக நெருக்கடிக்கு ஆளாக நேரும். கேதுவால் வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்படும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். ஒரு சிலரை சட்டத்திற்குப் புறம்பான வேலைகளிலும் ஈடுபட வைப்பார். செவ்வாய் சாதகமாக இல்லாததால் எதிர்பார்த்த இடத்தில் இருந்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் நிலையில் சங்கடம் தோன்றும். தேவையற்ற பிரச்னை தேடி வரும். சூரியன் சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழிலில் பின்னடைவு ஏற்படும். ஒரு சிலருக்கு அரசு வழியில் அபராதம் கட்ட நேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளால் சங்கடம் தோன்றும். வேலையில் பிரச்னை அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களும் எதிராக மாறக்கூடிய நிலை ஏற்படும். பெரும்பாலான கிரகம் இந்த மாதத்தில் எதிர்மறையாகவே கிரகம் சஞ்சரிப்பதால் நிதானம் அவசியம். புத பகவானால் எந்த ஒன்றிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதித்துக் கொள்வீர். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கேட்டிருந்த இடத்திலிருந்து பணம் வரும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். உங்கள் எண்ணம் ஈடேறும். மாணவர்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: அக் 31. நவ 1.அதிர்ஷ்ட நாள்: அக் 21, 26, 30. நவ 3, 8, 12.பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் நீங்கும்.ரேவதி:சூழ்நிலை அறிந்து செயல்படும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். பெரும்பாலான கிரகம் இந்த மாதத்தில் எதிர்மறையாக சஞ்சரிப்பதால் இதுவரை எளிதாக நடந்து வந்த வேலை கடும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். புத பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைப்பது நடந்தேறும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலை விரிவு செய்யும் வேலையில் ஒரு சிலர் ஈடுபடுவீர். சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். பண வரவு அதிகரிக்கும். இருந்தாலும், ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு உங்கள் மனதில் ஆசைகளை உண்டாக்குவார். அதன் காரணமாக சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரித்து வருவதால் தம்பதிகளுக்குள் நெருக்கடி உண்டாகும். வீண் பிரச்னை பெரிதாகும். பிற நபர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் ஏற்படும். தேவையற்ற நபர்களை உங்கள் நட்பில் இருந்து விலக்கி வைப்பது நல்லது. சூரியனால் உடல் ரீதியாக சில சங்கடம் தோன்றலாம். இக்காலத்தில் அனைத்திலும் கவனம் அவசியம். செய்து வரும் தொழிலில், பார்த்து வரும் உத்தியோகத்தில் எதிர்பாராத நெருக்கடி, சட்ட சிக்கல் உண்டாவதற்கு வாய்ப்புண்டு.  சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் வீண் செலவும் தேவையற்ற அலைச்சலும் உண்டாகும். இக்காலகட்டங்களில் நேரம் காலம் அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: நவ 1, 2.அதிர்ஷ்ட நாள்: அக் 21, 23, 30. நவ 3, 5, 12, 14.பரிகாரம்: திருப்பதி பெருமாளை வழிபட வளம் உண்டாகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us