sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

14

முந்தைய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 965

மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 14-11-2025 | District News | Dinamalar

வீடியோ: செய்திச்சுருக்கம்

14-Nov-2025

அசுவினிதெய்வ அருளும் திட சிந்தனையும் கொண்ட உங்களுக்கு கார்த்திகை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஞான மோட்சக்காரகன் கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கலாம். உறவுகளுக்குள் பிரச்னைகளை அதிகரித்தாலும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், சனியும் வருமானத்தை அதிகரிப்பர். முடங்கிக் கிடந்த தொழிலும் இனி முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து, வாகனம் என வாங்கும் கனவு நனவாகும். நீண்ட நாளாக உங்களை வாட்டி வதைத்த சங்கடங்கள் மறையும். உங்கள் செல்வாக்கு உயரும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு தொடர்புகள் சாதகத்தை ஏற்படுத்தும். நவ.27 வரை உங்கள் சப்தமாதிபதி சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அதுவரை எதிர்பாலினரிடம் எச்சரிக்கையாக இருப்பது நன்மையாகும். உங்கள் வேலையில் மட்டும் கவனமாக இருப்பது இந்த நேரத்தில் மிக அவசியம். உங்கள் தொழிலில் எந்த அளவிற்கு அக்கறை செலுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு ஆதாயத்தை அடைய முடியும். ஞானக்காரகன் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் புதிய வேலைகளை கையில் எடுக்கும்போது பின்விளைவு பற்றி யோசித்து மேற்கொள்வது நல்லது. விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருக்க வேண்டும். அரசு பணியாளர்கள் அதிகாரிகளின் ஆலோசனையின்படி செயல்படுவது நன்மை தரும்.சந்திராஷ்டமம்: நவ. 20, 21அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 25, 28. டிச. 7, 9பரிகாரம் கணபதியை வழிபட குறை நீங்கும். நன்மை நடக்கும்.பரணிநினைத்ததை சாதிக்கும் அதிர்ஷ்டம் கொண்ட உங்களுக்கு, கார்த்திகை மகிழ்ச்சியான மாதமாகும். நவ. 27 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் நட்புகள் வழியே ஆதாயத்தையும் சந்தோஷத்தையும் உண்டாக்குவார். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு அந்நியரால் சில பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். ஆத்ம காரகன் சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சிகளில் நிதானமும் கவனமும் தேவை. அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவது அவசியம். எந்தவொரு வேலையிலும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். ராசிநாதன் செவ்வாயும் டிச.6 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதில் இனம் புரியாத குழப்பமும் பயமும் இருக்கும். வேலையில் தடைகளும் தாமதமும் நெருக்கடியும் ஏற்படும். சிலருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும் என்றாலும் அனைத்தையும் சமாளிக்கும் பலத்தை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் உண்டாக்குவர். தேவைக்கேற்ற வருமானம் வந்து கொண்டிருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.சந்திராஷ்டமம்: நவ. 21, 22அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 24, 27. டிச. 6, 9, 15பரிகாரம் கோமதி அம்மனை வழிபட சங்கடம் விலகும். நினைப்பது நடக்கும்.கார்த்திகை 1 ம் பாதம்ஆத்ம பலமும் துணிவும் கொண்ட உங்களுக்கு, கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் திடீர் நெருக்கடிகளை ஏற்படுத்துவார். மனதில் குழப்பம் அதிகரிக்கும். வேலைகளில் தடையும் தடுமாற்றமும் ஏற்படும். அரசுவழி முயற்சிகள் இழுபறியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு திடீர் இடமாற்றம். மேலதிகாரியின் அதிருப்தி என்ற நிலை ஏற்படும். டிச. 6 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார். மறைந்த புதன் நிறைந்த செல்வங்களை தருவார் என்ற சொல்லுக்கேற்ப பொருளாதார நிலை உயரும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உறவினர் வழியில் ஆதாயம் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் மாதம் முழுவதும் உங்களைப் பாதுகாப்பர். கடன் கொடுத்திருந்த பணம் பலமுறை கேட்டும் வராமல் இருந்த நிலையில் இந்த நேரத்தில் வீடு தேடி வரும். வியாபாரத்தில் முதலீட்டிற்கேற்ப ஆதாயம் உண்டாகும். சப்தம ஸ்தானத்தில் நவ. 27 வரை ஆட்சியாக சஞ்சரிக்கும் சுக்கிரன் சிலரை தடுமாற வைப்பார். அவசர வேலைகளிலும் ஈடுபட முடியாத அளவிற்கு நட்புகள் வழியே உங்கள் நிலையை மாற்றுவார் என்பதால் எதிர்பாலினரிடம் விலகி இருப்பது நல்லது. விவசாயிகள் மாதம் முழுவதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: நவ. 22அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 19, 27, 28. டிச. 1, 9, 10பரிகாரம் சூரியனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். நினைப்பது நடந்தேறும்.

கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும் எடுக்கும் வேலைகளை முடிக்கும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு,  கார்த்திகை நன்மையான மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சொந்த வீட்டில் குடியேறும் நிலை ஏற்படும். சிலர் வசிக்கும் ஊரை விட்டு வெளியூர் செல்ல வேண்டிய நிலை உண்டாகும். டிச.6 வரை 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் புதன் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தித் தருவார். கடன் கேட்டும் கிடைக்காமல் இருந்த நிலையை மாற்றுவார். கையில் பணப்பழக்கத்தை ஏற்படுத்துவார். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்க வைப்பார். புதிய இடம், வீடு வாங்கும் கனவை நிறைவேற்றி வைப்பார். ராசிநாதன் சுக்கிரன் நவ.27 வரை உடல்நிலையில் சிறிய சங்கடங்களை ஏற்படுத்தலாம். அதன் பிறகு நட்பு வட்டத்தால் உங்கள் நிலையில் திடீர் மாற்றத்தை உண்டாக்கலாம். சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது தாய்வழி உறவுகளின் வழியே பிரச்னை, நெருக்கடியை ஏற்படுத்தலாம். சிலருக்கு உழைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு வரலாம் என்பதால் இந்த மாதத்தில் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.சந்திராஷ்டமம்: நவ. 22, 23அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 24, 28. டிச. 1, 6, 10, 15பரிகாரம் அனுமனை வழிபட அல்லல்கள் நீங்கும். நன்மை சேரும். ரோகிணிஎந்த நிலையில் பிறந்திருந்தாலும் வாழ்வில் முன்னேற்றத்தை அடையும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மங்களகாரகன் குரு மூன்றாம் இடத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் அவர் முன்பு சஞ்சரித்த இரண்டாம் வீட்டின் பலனை இப்போது கொடுப்பார் என்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். ஜீவன ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரித்து வருவதால்  தொழிலில் எதிர்பாராத நெருக்கடி, பிரச்னைகள் உருவாகும். பணியாளர்கள் கவனக்குறைவின் காரணமாக மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாக வேண்டி வரும். சிலர் உங்கள் மீது புகாரும் அளிக்கலாம் அதன் காரணமாக இடமாற்றமும் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. சுயதொழில் செய்பவர்கள் பிறரை நம்பாமல் அனைத்திலும் நேரடி பார்வையை செலுத்துவது அவசியம். உங்கள் விரயாதிபதி செவ்வாய் டிச.6 வரை சப்தம ஸ்தானத்திலும் அதன் பின் அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் சிலருக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படலாம். உடல் பாதிப்பும் உண்டாகலாம். புதிய இடம் வாங்கும் முயற்சியில் சங்கடத்திற்கு ஆளாகலாம் என்றாலும் டிச.6 வரை 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் புதன் உங்களைப் பாதுகாப்பார். வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை அளிப்பார். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை நீக்குவார். வங்கியில் கேட்டிருந்த பணம் கையில் வருகின்ற நிலையை உண்டாக்குவார். நவ.27 முதல் சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்ப்பாலினர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இந்த மாதத்தில் நன்மையை உண்டாக்கும். சங்கடத்தை போக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் நெருக்கடி விலகும்.சந்திராஷ்டமம்: நவ. 23, 24அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 24, 29. டிச. 2, 6, 11, 15பரிகாரம் லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்மனதில் தைரியமும் செயல்களில் வேகமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ரத்தக்காரகன், சகோதரக்காரகன் செவ்வாய் டிச.6 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற சிக்கல்களில்  மாட்டிக் கொள்ளலாம் கவனம்.  அதனால் சட்டரீதியான பிரச்னைகளை சந்திக்கும் நிலை இருப்பதால் ஒவ்வொரு வேலையிலும் பின் விளைவு பற்றி யோசித்து செயல்படுவது நல்லது. பிறருக்கு ஜாமின் கொடுப்பது, முன்நிற்பது போன்ற வேலைகளிலும் ஈடுபட வேண்டாம். உங்கள் ராசிக்கு சுகாதிபதியான சூரியன் மாதம் முழுவதும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் திடீர் மாற்றங்களை சந்திக்கும் நிலை சிலருக்கு ஏற்படும். பணியாளர்கள் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். அதன் காரணமாக இடமாற்றம் ஏற்படலாம் என்பதால் ஒவ்வொன்றிலும் கவனமாக இருப்பது அவசியம். ஜீவன ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிப்பதும் பணியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். தவறு செய்வோருக்கு சிக்கலை உண்டாக்கும். வியாபாரிகள்  தடை, பிரச்னையை சந்திக்கலாம்.  உங்கள் தன, குடும்பாதிபதி புதனின் சஞ்சாரம் டிச. 6 வரை சாதகமாக இருப்பதால் நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளிக்க முடியும். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். உறவினரால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து நடந்து கொள்வர். சுயதொழில் செய்பவர்கள் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் லாபம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் யாரையும் வேலையை விட்டு நீக்க வேண்டாம். அது உங்களுக்கு எதிர்மறையான நிலையை உண்டாக்கும். 3 ம் இடத்தில் உள்ள குரு வக்கிரம் அடைந்திருப்பதால் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வார்த்தையில் தெளிவு இருக்கும் என்றாலும், உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விவசாயிகள் இந்த மாதத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.சந்திராஷ்டமம்: நவ. 24, 25அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 27. டிச. 6, 9, 15பரிகாரம் முருகனை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடந்தேறும்.

மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்விவேகமுடன் செயல்பட்டு வெற்றி பெறும் உங்களுக்கு, கார்த்திகை யோகமான மாதமாகும். டிச. 6 வரை தைரிய, வீரிய காரகனான செவ்வாய் சத்ரு, ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். துணிச்சல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன்னிப்போம் மறப்போம் என்று எதிரிக்கு கருணைக்காட்டிய நிலை மாறும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். உடல் பாதிப்பு விலகும். நீண்ட நாள் கனவுகள் இந்த மாதத்தில் நனவாகும். நவ. 27 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகி நிம்மதி ஏற்படும். டிச. 6 முதல் ராசிநாதன் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு இருந்த நெருக்கடி விலகும்.சந்திராஷ்டமம்: நவ. 25, 26.அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 23, 27. டிச. 5, 9, 14.பரிகாரம் நன்மை தருவாரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.திருவாதிரைநினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் ராகுவும், சனியும் சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களைத் தேடி வரும். கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடி விலகும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபம் தரும்.  தன்னம்பிக்கை அதிகரிக்கும். வம்பு, வழக்கு என்றிருந்த நிலை மாறும். உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டவர்களும் தேடி வந்து சமாதானம் பேசுவர். என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று பயந்து கொண்டிருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.  தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசு வழி முயற்சிகள் வெற்றியாகும். ரியல் எஸ்டேட், உணவகம், மருந்து, கெமிக்கல், டிரான்ஸ்போர்ட், செங்கல், விவசாய உற்பத்தி பொருட்கள் வியாபாரம் முன்னேற்றம் பெறும்.  வரவேண்டிய பணம் வரும். புதிய முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு மருந்து மாத்திரை என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். ராசிநாதன் புதன் டிச. 6 முதல் முன்னேற்றத்தை தருவார். பொருளாதார நிலையை உயர்த்துவார். நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றுவார். நெருக்கடியில் இருந்து விடுவிப்பார். உறவினர் மத்தியில் செல்வாக்காக நடைபோட வைப்பார். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறையை உண்டாக்குவார்.சந்திராஷ்டமம்: நவ. 26, 27அதிர்ஷ்ட நாள்: நவ. 22, 23. டிச. 4, 5, 13, 14பரிகாரம் காளியை வழிபட வாழ்வில் இருந்த சங்கடம் விலகும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்அறிவாற்றலும் பிறருக்கு வழிகாட்டும் திறனும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை நன்மையான மாதமாகும். குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு நவ.18 முதல் வக்கிரம் அடைவதால் இதற்கு முன் அவர் சஞ்சரித்த உங்கள் ராசிக்குரிய பலன்களையே இப்போது வழங்குவார். ஒரு பக்கம் உழைப்பு, மறு பக்கம் வருமானம் என்ற நிலை ஏற்படும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் நன்மை உண்டாகும். கணவர், மனைவிக்குள் இருந்த விரிசல் விலகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும் வகையில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். மாதம் முழுவதும் உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியான சூரியன், சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு மேலும் உயரும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தொண்டர்களின் பலம் அதிகரிக்கும். ஆறாம் அதிபதியான செவ்வாயும் டிச.6 வரை ஆறாம் இடத்திலேயே ஆட்சி பெறுவதும், டிச.6 முதல் புத ஆதித்ய யோகம் உண்டாவதும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பொன், பொருள், வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டி, தொல்லை விலகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். நோய் நொடி மாறும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கையில் பணம் புரளும். நவ.27 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களின் சிறப்பு வெளிப்படும். எடுத்த வேலை வெற்றியாகும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். திட்டமிட்ட வேலை நடந்தேறும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: நவ. 27அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 23, 30. டிச. 3, 5, 12, 14பரிகாரம் சிவனை வழிபட புதிய முயற்சி வெற்றியாகும்.

புனர்பூசம் 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் பின்விளைவு பற்றி யோசித்து செயல்படும் உங்களுக்கு கார்த்திகை  முன்னேற்றமான மாதம். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் முன்பிருந்த நெருக்கடி குறையும். எடுத்த வேலைகளை முடித்திடக் கூடிய நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு பஞ்சமாதிபதியும், ஜீவனாதிபதியுமான செவ்வாய் 5 ம் இடத்தில் டிச.6 வரை ஆட்சியாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்ச நிலை உண்டாகும். நீண்ட நாள் விருப்பம் பூர்த்தியாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். டிச. 6 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். உங்கள் அந்தஸ்து உயரும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் பிரச்சனைகள் முடிவிற்குவரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் சனி ராகு சேர்க்கை பெற்றிருப்பதால் அனைத்திலும் கவனமும் நிதானமும் தேவை. உடல் ரீதியாகவோ, வாழ்க்கை ரீதியாகவோ ஒரு சிலருக்கு சங்கடங்கள் ஏற்படலாம், நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கலாம் என்பதால் ஒவ்வொரு வேலையிலும் பின்விளைவு பற்றி யோசித்து முடிவு எடுப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இந்த மாதத்தில் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை ஏற்படும்.சந்திராஷ்டமம்: நவ. 27அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 21, 29, 30. டிச. 2, 3, 11, 12பரிகாரம் வேதகிரீஸ்வரரை வழிபட நினைத்தது நடந்தேறும்.பூசம்எடுத்த வேலையில் உறுதியாக இருந்து வெற்றி பெறும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ராசிக்கு தன குடும்பாதிபதியான சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எடுத்த வேலையை முடித்திடக் கூடிய அளவிற்கு சூழல் சாதகமாகும். சட்ட ரீதியான பிரச்னைகள், அரசு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். டிச.6 வரை புதன் உங்கள் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவார். எந்த வேலையை எப்படி முடிக்க வேண்டும் என்பதை அறிந்து ஒவ்வொரு வேலையையும் நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம்வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்வதற்காகவும் வீடு கட்டுவதற்காகவும் வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். கடந்த கால நெருக்கடி விலகும் என்றாலும், நட்சத்திராதிபதி சனி அஷ்டம ஸ்தானத்தில் ராகுவுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால் எதிரிகளால் மறைமுக தொல்லை ஏற்படும். உங்களுக்கு எதிராக அவதுாறு பரப்புவர் என்பதால் அனைவரிடமும் அளவாக பழகுவது நல்லது.  உழைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்து நடந்தால்  அவர்களை நல்ல வழிக்கு கொண்டுவர முடியும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். விவசாயம் செழிப்படையும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: நவ. 28அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 20, 26, 29 பரிகாரம் பைரவரை வழிபட சங்கடம் விலகும். வேண்டுதல் நிறைவேறும்.ஆயில்யம்புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். வித்யாகாரகன் புதன் டிச.6 வரை சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். நினைத்ததை நடத்திக் கொள்ளும் அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் செல்வாக்கு உயரும். பலமுறை முயற்சி செய்தும் நடைபெறாமல் இருந்த வேலை இப்போது நடந்தேறும். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரும். வரவு, செலவு சுமூகமாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சிலர் புதிய இடம், வீடு என்று வாங்குவீர்கள். டிச. 6 முதல் தைரியக்காரகன் செவ்வாய் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்களின் வலிமை அதிகரிக்கும். எடுத்த வேலைகளை முடித்திடக் கூடிய நிலை உண்டாகும். எதிர்ப்பு, போட்டி, பிரச்னை என்ற நிலை மாறும். குடும்பத்திற்குள் இருந்த குழப்பம் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூர்வீகச் சொத்து விவகாரத்தில் சாதகமான நிலை ஏற்படும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தினாலும் டிச.6 வரை சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் உங்களை சந்தோஷமாகவும், ஆரோக்யமாகவும் வைத்திருப்பார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். டிச.6 முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் உடல்பாதிப்பு விலகும். எதிர்ப்பு நீங்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். விவசாயம் செழிப்படையும்.  முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: நவ.29அதிர்ஷ்ட நாள்: நவ.20, 23. டிச. 2, 5, 11, 14பரிகாரம் வெங்கடேசரை வழிபட நினைத்தது நடந்தேறும். நன்மை அதிகரிக்கும்.

மகம்நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். எடுக்கும் வேலைகளில் இழுபறி உண்டாகும். உங்கள் விருப்பத்திற்கு மாறாக உடன் இருப்பவர்கள் செயல்படுவார்கள். குடும்பத்திலும் எதிர்பாராத நெருக்கடி வந்து போகும். உலகையும் உறவினர்களையும் புரிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் புதிய நட்புகளால் பிரச்னைகளை ஏற்படுத்துவர். சட்டத்திற்குப் புறம்பான வேலைகளிலும் உங்களையும் அறியாமல் ஈடுபடக்கூடிய நிலை ஏற்படும். அதன் காரணமாக வழக்கு, நெருக்கடி ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையே விரிசல், குடும்பத்தில் ஒருவர் விட்டு ஒருவருக்கு நோய் ஏற்படும் என்றாலும், உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வராமல் இருந்த பணம் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: நவ. 29, 30அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 25, 28. டிச. 1, 7, 10பரிகாரம் கோணியம்மனை வழிபட குறை தீரும். நன்மைகள் நடக்கும்.பூரம்முயற்சியை மேற்கொண்டு முன்னேறுவதில் ஆர்வம் கொண்ட உங்களுக்கு, கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். நவ.27 வரை சுக்கிரன் நெருக்கடிகளில் இருந்து உங்களை மீட்டெடுப்பார். எதிர்பார்த்த பணம் வரும். ஆடை, ஆபரணம், நவீன பொருட்கள் சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். டிச.6 வரை சுகம், பாக்ய ஸ்தானங்களின் அதிபதியான செவ்வாய் சுக ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தாய் தந்தையரின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.  அதே நேரத்தில் உழைப்பு அதிகரிக்கும். வேலை, அலைச்சல் காரணமாக உடலில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். மருத்துவச் செலவு ஏற்படும். விவசாயிகளுக்கு வேலைப்பளு உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள்   விழிப்புடன் செயல்படுவது அவசியம். வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்கு முன்பு  நன்கு யோசிக்க வேண்டும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் இல்லாத விஷயங்களில் ஆர்வம் காட்ட வேண்டாம். சப்தம சனி ராகு சஞ்சாரத்தால் கூட்டுத் தொழிலில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். பணியில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு நிலைமை மாறும்.  சிலருக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகள் தோன்றும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு. மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.  புதியவர்களிடம் விலகி இருப்பதால் சங்கடம் ஏற்படாமல் போகும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: நவ.30, டிச.1அதிர்ஷ்ட நாள்: நவ.19, 24, 28, டிச. 6, 10, 15.பரிகாரம் செல்வ விநாயகரை வழிபட சங்கடம் தீரும். பணப்புழக்கம் ஏற்படும்.உத்திரம் 1ம் பாதம்வாழ்வில் எப்போதும் தனித்துவமாக செயல்படும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிநாதன் சூரியன் சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால் பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், நெருக்கடியும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு இழுபறியாகும். நேற்றுவரை நன்றாகச் சென்று கொண்டிருந்த வேலைகளிலும் பின்னடைவு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பணியாளர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இந்த நேரத்தில் ஜென்ம ராசிக்குள் கேது, சப்தம ஸ்தானத்தில் சனி ராகு, சுக ஸ்தானத்தில் செவ்வாய் என்ற சஞ்சார நிலை ஒவ்வொன்றிலும் போராடி வெற்றி பெற வேண்டிய நிலையை உண்டாக்கும். புடம் போட்ட தங்கமாக உங்களை மாற்றும். நண்பர் யார்? எதிரி யார் என்பதைப் புரிந்து கொள்ளும் நிலை உண்டாகும். குடும்பத்திற்குள் வீண் பிரச்னைகள் தலைதுாக்கும். டிச.6 முதல் உங்கள் ராசிக்கு தன குடும்பாதிபதியான புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எல்லாவற்றையும் புத்திசாலித்தனத்துடன் சமாளிப்பீர்கள். எதைச் செய்வது எதைத் தவிர்ப்பது என்ற புத்தி ஏற்படும். வீண் விவகாரங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும்.  சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகள், வியாபாரிகள் மாதம் முழுதும் கவனமுடன் செயல்படுவது நல்லது. சந்திராஷ்டமம்: டிச.1அதிர்ஷ்ட நாள்: நவ.19, 28. டிச. 10பரிகாரம் சிவபெருமானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்புத்திசாலித்தனம், தைரியத்துடன் செயல்பட்டு பணிகளில் வெற்றி பெறும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். சகாய ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் வாழ்க்கையில் இருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். காய்ந்து போன நிலத்தில் மழை பெய்வது போல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்த உங்கள் வாழ்வில் வளம் உண்டாகும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிக்கும் நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் பலம் கூடும். தலைமையின் ஆதரவு உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். சகோதரர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 1, 2அதிர்ஷ்ட நாள்: நவ.19, 23, 28. டிச. 5, 10, 14பரிகாரம் நடராஜரை வழிபட வாழ்வில் திருப்பம் உண்டாகும்.அஸ்தம்எடுத்த வேலையை முடிக்கும் ஆற்றலும் தெளிந்த சிந்தனையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான மாதமாகும். சத்ரு, ஜெய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனியும் யோக, போகக்காரகன் ராகுவும் உங்கள் வாழ்க்கைக்கு புதிய பாதையை காட்டுவர். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரம், தொழிலில் தோன்றிய போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் விலகிச் செல்வர். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். துணிச்சல் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு நீண்ட நாள் கனவு நனவாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு, வழக்குகள் என்றிருந்த நிலை மாறும். எடுத்த வேலைகள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை இருக்கும். சிலர் உத்தியோகத்தில் ஏற்பட்ட வழக்கில் இருந்து விடுபடுவர். தடைபட்டிருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். ராசியாதிபதி புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.  மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 2, 3அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 23, 29. டிச. 5, 11, 14பரிகாரம் உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சித்திரை 1, 2 ம் பாதம்மனவலிமையும், புத்தி சாதுரியமும் கொண்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு கார்த்திகை  நன்மையான மாதமாகும். தைரிய வீரிய காரகன் செவ்வாய் டிச. 6 வரை முயற்சி ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரித்து நீங்கள் எடுக்கும் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். புதிய இடம், வீடு வாங்குவது என்பது கனவாக இருந்த நிலையை மாற்றுவார். மருத்துவம், ரியல் எஸ்டேட், உணவகம், கெமிக்கல், பில்டர்ஸ் தொழில்கள் முன்னேற்றம் அடையும். காவல் துறையினரின் செல்வாக்கு, மதிப்பு உயரும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தொழில் நிறுவனம் நடத்தி வருவோருக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் சத்ரு, ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும், மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும் மாதம் முழுதும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர்.  இதுவரையில் இல்லாத செல்வாக்கு இப்போது ஏற்படும். கடந்த கால நெருக்கடிகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உங்கள் ராசிக்கு 2, 9 ம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் நவ. 27 வரை 2ம் வீட்டிலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வேலைகள் திட்டமிட்டபடி நடந்தேறும். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி மறையும்.சந்திராஷ்டமம்: டிச. 3அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 23, 27. டிச. 5, 9, 14பரிகாரம் திருத்தணி முருகனை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.

சித்திரை 3, 4 ம் பாதம்தன்னை நம்பியவரை பாதுகாத்திடும் வலிமை கொண்ட உங்களுக்கு கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ராசிக்கு தன குடும்பாதிபதியும், தைரிய வீரிய காரகனுமான செவ்வாய் தன ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடிகள் விலகும். பேச்சில் தெளிவு இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட மந்தநிலை மாறும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். டிச.6 முதல் 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகளை நீக்குவார். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். இந்த நேரத்தில் மாதம் முழுவதும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி ஆட்சியாக சஞ்சரிப்பதுடன் அவருடன் யோக, போகக்காரகன் ராகுவும் சஞ்சரிப்பதால் பூர்வீகச் சொத்தில் அல்லது குடும்பத்திற்குள் பிரச்னைகளை உண்டாக்கும். பிள்ளைகளை எண்ணி மனம் சங்கடப்படும். வரவிற்கு மீறிய செலவு ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றமும் வரவும் இருக்கும். கணவன், மனைவிக்குள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும்.சந்திராஷ்டமம்: டிச.3அதிர்ஷ்ட நாள்: நவ.18, 24, 27, டிச. 6, 9, 15பரிகாரம் மாசாணி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.சுவாதிஅதிர்ஷ்டத்தை நோக்கி நடை போடும் உங்களுக்கு கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். யோக போகக்காரகன் ராகு, கர்மக்காரகன் சனியுடன் இணைந்து 5 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நன்மையை உண்டாக்கும். புதிய இடம், வீடு வாங்கும் போது மூலப் பத்திரங்களில் கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகளின் நடவடிக்கையைக் கவனிப்பதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் இந்த நேரத்தில் அவசியம்.  பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள், உறவுகளுக்குள் சண்டை சச்சரவு வரலாம். சிலருக்கு இந்த நேரத்தில் பெற்றோரும் எதிராக மாறுவர். உங்கள் திட்டங்களில் மாற்றம் உண்டாகும். வியாபாரம், தொழிலில் ஈடுபட்டிருப்போர் ஒவ்வொரு வேலையையும் தாமே செய்து முடிக்க வேண்டியதாக இருக்கும். உடல்நிலையிலும் அவ்வப்போது பிரச்னை தலையெடுக்கும். மாதம் முழுவதும் உங்கள் ராசியாதிபதி சாதகமாக சஞ்சரிப்பதால் கையில் பணப்புழக்கம் இருக்கும். வரவேண்டிய பணம் வரும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் பாக்யாதிபதி புதனும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட நாள் முயற்சி வெற்றியாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். உங்கள் லாபாதிபதி சூரியன் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பேச்சால் வளம் கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கமிஷன் ஏஜண்ட், தரகர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். மனக்குழப்பத்திற்கு இடம் தராமல் எடுத்த வேலைகளில் உறுதியாக இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.சந்திராஷ்டமம்: டிச.4.அதிர்ஷ்ட நாள்: நவ. 22, 24, டிச. 6, 13, 15.பரிகாரம் பகவதி அம்மனை வழிபட முயற்சியில் வெற்றி கிடைக்கும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்பிறருக்கு நல்லதைச் சொல்லி வழி நடத்தும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதம். தனக்காரகன் குரு அவர் சஞ்சரிக்கும் ராசியில் வக்கிரம் அடையும் போது முன் ராசியின் பலன்களை அளிப்பார் என்பதால் ஜீவன ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்துள்ள குருவால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மேலதிகாரியின் ஆதரவும், எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வும் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பொன், பொருள் சேரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் முதலீட்டிற்கேற்ப லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி தேடி வரும். ஐந்தாம் இடத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிப்பதால் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வது அவசியம். சிலர் தவறான வழியில் செல்லக் கூடும் என்பதால் கண்காணிப்பில் வைத்துக்கொள்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் தனாதிபதி செவ்வாய் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். சிலர் புதிய வாகனம், ஆடை ஆபரணம் வாங்குவர்.  குடும்பத்தினரின் தேவை நிறைவேறும். விவசாயம் செழிப்படையும். பணியாளர்களுக்கு தேவை பூர்த்தியாகும். பெண்களுக்கு கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: டிச. 5அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 24, 30. டிச. 3, 6, 12, 15பரிகாரம் சுப்ரமணியரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

விசாகம் 4 ம் பாதம்நினைப்பதை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிக்கு சுகாதிபதிபதியான சனி சுகஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் நிலையில் யோகக்காரகன் ராகுவும் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். கும்ப சனி உங்கள் குறைகளைத் தீர்ப்பார். வருமானத்தை அதிகரிப்பார். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். புதிய முயற்சிகளில் ஈடுபட வைத்து வெற்றி காண வைப்பார். வீடு, வாகனம் என்ற கனவுகளை நனவாக்குவார். இந்த நேரத்தில் உங்கள் ஜீவனாதிபதி சூரியனும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வாடகை இடத்தில் தொழில் செய்து வந்தவர்கள் சொந்த இடத்திற்கு தொழிலை மாற்றுவர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். சப்தமாதிபதி சுக்கிரன் நவ. 27 வரை உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்வார். கஷ்டம் நஷ்டம் என்ற நிலைகளில் இருந்து உங்களை விடுவிப்பார். கையில் பணப்புழக்கத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியான நிலையை ஏற்படுத்துவார். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார். நவ. 27 முதல் எதிர்பார்த்த பணம் வரும். நீண்டநாள் கனவு நனவாகும். மாணவர்கள் டிச. 6 வரை படிப்பில் கவனமாக இருப்பது நல்லது. சந்திராஷ்டமம்: டிச. 6அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 21, 27, 30. டிச. 3, 9, 12பரிகாரம் வீரபத்திரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.அனுஷம்நிதானமாக செயல்பட்டு எடுத்த வேலையில் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். கர்மக்காரகன் சனி நவ.17 முதல் வக்கிர நிவர்த்தி அடைந்து சுக ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் இதுவரை ஏற்பட்ட குழப்பம் விலகும். பொருளாதார நிலை உயரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். பொன் பொருள் சேரும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். நஷ்டத்தில் இயங்கி வந்த தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் ராசிநாதன் டிச. 6 வரை ராசிக்குள் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழிலில் தோன்றிய எதிர்ப்பு விலகும். உடலில் ஏற்பட்ட நோய் நீங்கும். வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். டிச.6 வரை உங்கள் லாபாதிபதி புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விவகாரத்திலும் எச்சரிக்கை தேவை. வியாபாரம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம், கடன் பத்திரங்களில்  கையெழுத்திடும் முன் நன்றாகப் படிப்பது அவசியம். விவசாயம், மருத்துவம், ரியல் எஸ்டேட், கெமிக்கல், சமையல் எண்ணெய், ஓட்டல் தொழில்கள் சிறப்படையும். மாணவர்களுக்கு மாத பிற்பகுதியில் படிப்பில் அக்கறை ஏற்படும். சிலருக்கு உழைப்பின் காரணமாக உடல்நிலையில்  சங்கடங்கள் வந்து போகும்.சந்திராஷ்டமம்: டிச. 6, 7அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 18, 26, 27. டிச. 8, 9பரிகாரம் கிருஷ்ணரை வழிபட சங்கடம் விலகும். நன்மை அதிகரிக்கும்.கேட்டைவிவேகமாக செயல்பட்டு வேண்டியதை அடையும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ராசிக்கு லாபாதிபதியான புதன் டிச.6 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல வகையில் செலவு அதிகரிக்கும். உங்களை உயர்த்திக் கொள்வதற்காகவும், செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காகவும் தாராளமாக செலவு செய்வீர்கள். சிலர் புதிய இடம் வீடு வாங்குவர். வியாபாரம், தொழில் செய்பவர்கள் அதிகபட்சமாக முதலீடு செய்து அதற்கேற்ற லாபம் இல்லை என வருந்துவர். பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு வசூலில் தடை ஏற்படும்.  சிலர் கடனுக்கு ஆடம்பரப் பொருள் வாங்கி தவணை கட்ட முடியாமல் திணறுவர். ராசிநாதன் டிச.6 வரை ஆட்சியாக சஞ்சரிப்பதும், உங்கள் ஜீவனாதிபதி சூரியன் மாதம் முழுதும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் அக்கறை ஏற்படும். அரசுவழி முயற்சிகளை சாதகமாக்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் திறமைக்கேற்ற உயர்வு ஏற்படும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, சனியால் உழைப்பால் ஆரோக்கிய குறையை ஏற்படுத்துவர். உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் யோகமான மாதம். தலைமையிடம் நல்ல பெயர் கிடைக்கும். எதிர்பார்த்த பொறுப்பு, பதவி சிலருக்கு கிடைக்கும். கையில் எடுத்த வேலையை செய்து முடிக்கும் நிலை உண்டாகும். தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும்.சந்திராஷ்டமம்: டிச. 7, 8அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 23, 27. டிச. 5, 9, 14பரிகாரம் நரசிம்மரை வழிபட நினைத்த வேலை நிறைவேறும்.

மூலம்சுய அனுபவத்தை படிப்பினையாக கொண்டு வாழ்வில் முன்னேறும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் யோகமான மாதம். ராசிநாதன் குரு நவ.18 முதல் வக்கிரம் அடைவதால், வக்கிர குரு முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கக் கூடியவர் என்ற நிலையில் கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடி விலகும்.  எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திடீரென தடுமாற்றத்தை சந்தித்து சங்கடத்திற்கு ஆளாகும் நிலை மாறும். உங்கள் செல்வாக்கு உயரும். மனதிற்கினிய சம்பவம் நடக்கும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி நவ.17 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் எடுக்கும் முயற்சி இனி வெற்றியாகும். நினைத்தது நடந்தேறும். உடலில் இருந்த சங்கடம், பிரச்னைகள் விலகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். பணியாளர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த  இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடக்கும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நோய்நொடி, வம்பு வழக்கு என சங்கடப்பட்ட நிலை மாறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகள் விளைச்சல் மீது கவனமாக இருப்பது நல்லது. சந்திராஷ்டமம்: டிச. 8, 9அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 25, 30. டிச. 3, 7, 12பரிகாரம் ராஜ கணபதியை வழிபட சங்கடம் நீங்கும். நன்மை உண்டாகும்.பூராடம்நெருக்கடி வந்தாலும் அதை சிரித்துக் கொண்டே சமாளிக்கும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் நன்மையான மாதம். லாபாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருவார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். நீண்டநாள் கனவு நனவாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களில் மனநிறைவும் எதிர்பார்த்த ஆதாயமும் கிடைக்கும். மற்றவர் பாராட்டும் வகையில் உங்களின் செயல்பாடு இருக்கும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் பலம் கூடும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு தேடி வரும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ஊழியர் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு திருமணம் கூடி வரும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.  இந்த மாதம் உங்களுக்கு நினைத்தது நிறைவேறும் மாதமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: டிச. 9அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 24, 30. டிச. 3, 6, 12பரிகாரம் ரங்கநாதரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.உத்திராடம் 1 ம் பாதம்இன்றைய வாழ்வை பாடமாக கொண்டு எதிர்காலத்தை சுபிட்சமாக மாற்றும் உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியான சூரியன் விரய ஸ்தானத்தில் மாதம் முழுதும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரும்.  ஆதரவாக இருந்த பெரியவர்களும் இந்த நேரத்தில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போவார்கள். விரயாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் டிச.6 வரை ஆட்சியாக இருப்பதால் இடம், வீட்டை விற்கும் நிலை சிலருக்கு ஏற்படும்.  மருத்துவச் செலவு அதிகரிக்கும் என்றாலும், சகாய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் ஆயுள்காரகன் சனியும், யோக போகக்காரகன் ராகுவும் உங்களைப் பாதுகாப்பர். தொழில் நிறுவனம் நடத்துவோருக்கு எதிர்பார்த்தபடி பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார நெருக்கடி, உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் ஜீவனாதிபதி புதன் டிச.6 வரை லாப ஸ்தானத்தில் இருப்பதால் மன நிம்மதி இருக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். லாபாதிபதி சுக்கிரனும் மாதம் முழுதும் உங்களுக்கு நன்மை வழங்குவார். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். பொன், பொருள் சேரும். என்ன நிலை எதிர் வந்தாலும் அதை சமாளிக்கக் சக்தி உண்டாகும். சிலர் உறவினர் இல்ல நிகழ்வுகளை முன்நின்று நடத்துர்.சந்திராஷ்டமம்: டிச. 10அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 21, 28. டிச. 1, 3, 12பரிகாரம் திருப்பதியை வழிபட வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

உத்திரட்டாதி 2, 3, 4 ம் பாதம்முன்னேற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு வாழும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் அதிர்ஷ்டமான மாதம். ஆத்ம காரகன் சூரியன் லாப ஸ்தானமான 11 ம் இடத்தில் இருப்பதால் உங்கள் நீண்டநாள் கனவு நனவாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். புதிய சொத்து, வாகனம் சேரும்.  தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முதலீடு வழியே லாபம் அதிகரிக்கும். சிறு வியாபாரிகளின் நிலை உயரும். அரசியல்வாதிகள், பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் தாங்கள் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கப் பெறுவர். குடும்பத்தில் நிலவிய பிரச்னை முடிவிற்கு வரும். வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்களை வாங்குவீர்கள். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாளாக முயற்சி செய்தும் முடியாமல் போன வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். சிலர் கோயில் வேண்டுதல்களை நிறைவேற்றி மகிழ்வர். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவும் எதிர்பார்த்த மாற்றமும் கிடைக்கும். புது வியாபாரம், தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பழைய வழக்குகள் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிரமம் குறையும். கணவன், மனைவி உறவு பலப்படும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.சந்திராஷ்டமம்: டிச. 10அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 19, 26, 28. டிச. 1, 8பரிகாரம் பைரவரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். வழக்கு சாதகமாகும்.திருவோணம்மனவலிமையுடன் நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு,  கார்த்திகை மாதம் யோகமான மாதம். உங்கள் பாக்கியாதிபதி புதன் டிச.6 வரை ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும்.  வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். தொழில் நிறுவனங்கள் நடத்துவோருக்கு உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். சிலர் பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டில் குடியேறுவர். இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னை எல்லாம்  இடம் தெரியாமல் போகும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் கேது இருப்பதால் உடல் நிலையில்  கவனம் தேவை. உங்கள் வளர்ச்சியைக் கண்டு சிலர் பொறாமையின் காரணமாக உங்களைப் பற்றி அவதுாறு பரப்பும் நிலை வரலாம். சுய ஒழுக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல் எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம்.  இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் பொருளாதார நிலையை உயர்த்துவர். நிதானமான வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். என்றோ செய்த முதலீட்டில் இருந்து இந்த நேரத்தில் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்பு வெற்றி பெறும்.  லாப ஸ்தான சூரியனால் அரசுவழி முயற்சி, நீண்டநாள் கனவு நிறைவேறும். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு தடைபட்ட பணம் வரும். நவீன பொருள் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமையும் பிள்ளைகளின் மீது அக்கறையும் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: டிச. 11அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 20, 26, 29. டிச. 2, 8பரிகாரம் ஸ்ரீராமரை வழிபட வாழ்வில் இழந்த யாவும் கிடைக்கும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்தன்னம்பிக்கை, துணிச்சல் கொண்டு வாழ்வில் முன்னேறும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் நன்மையான மாதம். உங்கள் ராசிக்கு சுகாதிபதியும் லாபாதிபதியும், பூமி காரகனுமான செவ்வாய் லாப ஸ்தானத்தில் டிச.6 வரை ஆட்சியாக இருப்பதால் உங்களுக்கு முன்னேற்றமான மாதமாக இருக்கும். வீடு, மனை, தொழில் அமையும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மருந்தகம், ஓட்டல், பெட்ரோலியம், விவசாயம் சார்ந்த பொருட்களின் விற்பனை வருமானத்தைக் கொடுக்கும். காவல்துறை, தீயணைப்புத்துறை ஊழியர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவர். புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற வேலைகள் நடக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.  வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும். தொழிலை விரிவு செய்யக் நிலை சிலருக்கு ஏற்படும். பணியாளர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்தும் கிடைக்காத சம்பள உயர்வு, பதவி உயர்வு  கிடைக்கும். உடல் பாதிப்பு விலகி சுறுசுறுப்பாக செயல்படும் நிலை உண்டாகும். தொழில் வளர்ச்சி பெறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு  எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சூரியன் மாதம் முழுதும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் அரசுவழி வேலைகள் சாதகமாகும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும்.சந்திராஷ்டமம்: டிச. 12அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 18, 26, 27. டிச. 8, 9பரிகாரம் அனுமனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

அவிட்டம் 3, 4 ம் பாதம்உழைப்பால் உயர்வடையும் உங்களுக்கு கார்த்திகை மாதம் யோகமான மாதமாகும். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியும், ஜீவனாதிபதியுமான செவ்வாய், ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்.  பொருளாதார நிலை உயரும். சகோதரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விற்க முடியாமல் இருந்த இடத்தை விற்பீர்கள். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை சுமூகமான முடிவிற்கு வரும். சேமிப்பில் அக்கறை ஏற்படும். டிச.6 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் வருமானம் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.  கணவன், மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வேலையின் காரணமாக வெளியூர் செல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு மாத பிற்பகுதியில் படிப்பில் அக்கறை ஏற்படும்.சந்திராஷ்டமம்: டிச. 12அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 18, 26, 27. டிச. 8, 9 பரிகாரம் திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை உண்டாகும்.சதயம்பிறரால் செய்ய முடியாத வேலையையும் எளிதாக செய்து லாபம் காணும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் நன்மையான மாதம். ராசிக்குள் ராசிநாதன் சனி, யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். குழப்பம் விலகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். வரவேண்டிய பணம் வரும். புதிய முதலீடுகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அந்நியரால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். மாதம் முழுவதும்  சப்தமாதிபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட வழக்குகள் முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு, சம்பளம் கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். சிலர் தொழிலை விரிவுபடுத்துவர். அதற்காக எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். மக்கள் ஆதரவு கூடும். மாத பிற்பகுதியில் எதிர்பாராத வாய்ப்பு தேடி வரும். தாராளமாக செலவு செய்யும் நிலை உருவாகும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு மாத பிற்பகுதி யோகமாக இருக்கும். நவ.27 வரை பாக்கிய ஸ்தான சுக்கிரனால் பிறருக்கு உதவும் அளவிற்கு உங்களின் நிலை இருக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதிய நட்பு வழியே குடும்பத்தில் குழப்பம் வர வாய்ப்புண்டு. எச்சரிக்கை அவசியம். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது நல்லது. சந்திராஷ்டமம்: டிச. 13அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 22, 26. டிச. 4, 8பரிகாரம் தில்லை காளியை வழிபட சங்கடங்கள் விலகும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்வரப்போகும் ஒவ்வொன்றையும் முன்னதாக அறிந்து அதற்கேற்ப செயல்படும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம்.  குரு ஆறாம் இடத்தில் வக்கிரமாகி இருக்கிறார். குரு வக்கிரம் அடையும் காலத்தில் முன் ராசிக்குரிய பலன்களை தரக்கூடியவர் என்பதால், கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடி விலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பிள்ளைகளின் மீது அக்கறை உண்டாகும். அவர்களுக்காக சேமிப்பையும் உண்டாக்குவீர்கள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு சொத்து சேரும். புதிய வீட்டில் குடியேறும் நிலை உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மாதம் முழுவதும் சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். இடமாற்றம், பதவி உயர்வுக்காக காத்திருப்போரின் விருப்பம் நிறைவேறும். வேலை தேடுவோருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய வியாபாரம், தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு கூடி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். டிச.6 முதல் லாபச் செவ்வாயும், ஜீவன புதனும், புத ஆதித்ய யோகமும் உங்கள் நிலையை உயர்த்தும். உறவுகளும், நட்புகளும் ஆச்சரியப்படும் வகையில் செல்வாக்கு உண்டாகும். தடைபட்ட ஒப்பந்தம் கைக்கு வரும். போராட்ட நிலை மாறும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடை விலகும். ஆர்வம் கூடும்.சந்திராஷ்டமம் நவ. 17. டிச. 14அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 26, 30. டிச. 3, 8, 12பரிகாரம் பாலாம்பிகையை வழிபட நன்மை உண்டாகும்.

பூரட்டாதி 4 ம் பாதம்பிறர் நலனில் அக்கறை கொண்ட உங்களுக்கு, கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ராசிநாதன் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் செயலில் தடுமாற்றம் ஏற்படும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். இதற்கு முன்பிருந்த இயல்பு நிலை இப்போது இல்லாமல் போகும். வேலையில் பிரச்னை தலைகாட்டும். வியாபாரத்தில் உங்களின் திட்டங்கள் இழுபறியாகும். அதே நேரத்தில் உங்கள் ராசிக்கு தன குடும்பாதிபதியும் பாக்யாதிபதியுமான செவ்வாய் டிச. 6 வரை பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். விஐபிகள் உங்களுக்கு உதவி புரிவர். பெற்றோர் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.  உங்களுக்கு வழிகாட்டுவதற்கு நல்ல நண்பர்கள் இந்த நேரத்தில் உங்களுடன் தோள் கொடுப்பர். கடன் தொல்லை, வம்பு வழக்கு, பிரச்னைகள் என்றிருந்த நிலை அனைத்தும் மாறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். கணவன், மனைவி இருவரும் இந்த நேரத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் சங்கடம் உங்களை நெருங்காமல் போகும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது எல்லா நிலையிலும் உங்களைப் பாதுகாப்பார். ஆரோக்யத்துடன் தலை நிமிர்ந்து நடை போட வைப்பார்.சந்திராஷ்டமம்: நவ. 17. டிச. 15அதிர்ஷ்ட நாள்: நவ. 21. 30. டிச. 3, 12பரிகாரம் மாரியம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரட்டாதிநடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்துடன் வாழும் உங்களுக்கு கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் செலவுகளை அதிகரிப்பர். எதிர்பாராத செலவு தோன்றும். கையில் பணம் வருவதற்கு முன்னதாகவே செலவு காத்துக் கொண்டிருக்கும். அனைத்திலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.  கையில் இருக்கும் பணத்தை பூமி, தங்கத்தின் மீது முதலீடு செய்வது நன்மை தரும். வசிக்கும் வீட்டை உங்கள் விருப்பத்திற்கேற்ப புதுப்பிக்கலாம். வியாபாரத்தில் அதிகபட்ச கவனம் தேவை. முதலீட்டிற்கேற்ற  லாபம் கிடைக்காமல் போகும். குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படும்.  கணவன், மனைவிக்குள் சச்சரவு உண்டாக வாய்ப்பிருப்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதும், விட்டுக்கொடுப்பதும் நலம் தரும். சிலருக்கு திடீரென வாகனம் பழுதாகி செலவை ஏற்படுத்தும். ஏதேனும் ஒரு வகையில் கையில் இருக்கும் பணம் கரையும். புதிய இடம் வாங்குவது, வாகனம் வாங்குவது என்ற வகையில் செலவு தோன்றும். அரசியல்வாதிகளுக்கு நிதானமாக செயல்பட வேண்டிய நேரம் இது. யாரையும் பகைக்காமல் அனுசரித்துச் செல்வதால் எதிர்மறை பலன் ஏற்படாமல் போகும். அதே நேரத்தில் சப்தமாதிபதி புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பிரச்னை வந்தாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சஞ்சாரத்தால் நவ. 27 வரை குடும்பத்தினர் உங்கள் மீது அன்பு செலுத்துவர்.  எந்த பிரச்னை வந்தாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும். நட்பு வட்டம் உங்களைப் பாதுகாக்கும்.  நவ. 27 முதல் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு கையில் பணப்புழக்கம் இருக்கும். உதவி எனக் கேட்பவர்களுக்கு தகுதி பார்த்து உதவுவீர்கள். நீண்டகால கனவு இந்த நேரத்தில் நனவாகும். உடல்நிலை சீராகும். ஆரோக்யம் மேம்படும்.சந்திராஷ்டமம்: நவ.18அதிர்ஷ்ட நாள்: நவ.17, 21, 26, 30. டிச. 3, 8, 12பரிகாரம் அபிராமி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.ரேவதிவார்த்தையில் கனிவும் செயலில் நிதானமும் கொண்டு வாழ்வில் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு கார்த்திகை மாதம் யோகமான மாதம். உங்கள் ராசிக்கு சுகாதிபதியும், சப்தமாதிபதியுமான புதன் டிச.6 வரை அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால், மறைந்த புதன் நிறைந்த செல்வங்கள் தருவார் என்பதற்கேற்ப வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்குவது போன்ற முயற்சிகள் நிறைவேறும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். டிச. 6 முதல் புத ஆதித்ய யோகம் உண்டாவதால் நீங்களே நம்ப முடியாத அளவிற்கு உங்கள் நிலை மாறும். கையில் பணம் புரளும். செல்வாக்கு உயரும். பணியாளர்களின் நீண்டநாள் முயற்சி வெற்றி பெறும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் ஆற்றலை அதிகரிப்பார். நோய் நொடி, எதிர்ப்பு என்றிருந்த நிலைகளில் மாற்றத்தை உண்டாக்குவார். வழக்குகளை சாதமாக்குவார். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன், பெரியவர்களின் ஆதரவை ஏற்படுத்துவார். கலைஞர்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: நவ.19அதிர்ஷ்ட நாள்: நவ.21, 23, 30. டிச. 3, 5, 12, 14பரிகாரம் கூடல் அழகரை வழிபட குறை அனைத்தும் தீரும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us