sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

குருபெயர்ச்சி பலன்கள்

/

மிதுனம்

/

மிதுனம்

குருபெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

குருப்பெயர்ச்சி பலன்கள் : மிதுனம்
19 அக் 2019 to 30 அக் 2020

முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

மிதுனம்குருபகவான் 6ம் இடத்தில் இருந்து 7ம் இடத்திற்கு செல்வது மிக உயர்வான நிலை. குருவின் 5ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. எனவே ஏழாம் இடத்து குருவால் வாழ்வில் குறையொன்றும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் கூடும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் பெருகும்.  குருபகவான் 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  அதிசாரம் பெற்று மகர ராசியில் இருக்கிறார். அப்போது  அவரால் நன்மை தர இயலாது. ஆனால் அப்போது அவரது 7ம் இடத்துப்பார்வையால் எந்த பிரச்னையை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். இனி பொது பலனைக் காணலாம்.

குருபகவானால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பெண்களால் மேன்மை உண்டாகும். நீண்ட நாளாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் அவரது 5ம் இடத்துப் பார்வையால் பணப்புழக்கம் அதிகரிக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை கணவன், மனைவி இடையே சிறு பூசல்கள் வரலாம். ஒருவருக்கொருவர் பொறுமையுடன் விட்டு கொடுக்கவும். வீண் விவாதம், அனாவசிய செலவைத் தவிர்க்கவும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு கேது 6ம் இடத்தில் இருப்பதன் மூலம் சிரமங்கள் அடியோடு மறையும். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம்.

வியாபாரிகளுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும். குருவால் வங்கி கடன், நிதியுதவி எளிதாக கிடைக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை வேறு ஊருக்கு மாற்ற நேரிடலாம். வியாபாரத்தில் யாரையும் நம்பி பணப்பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு பகைவர் தொல்லை மறையும்.

பணியாளர்களுக்கு தடைகள் விலகும். பணியிடத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களின் திறமை பளிச்சிடும். சிலர் விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்,ஆசிரியர்களுக்கு இந்த காலம் உன்னதமாக இருக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.  வேலையில் பொறுமை தேவை. 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு  போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். சக ஊழியர்கள் உதவியாக இருப்பர்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பணநஷ்டம், அவப்பெயர், போட்டிகள் முதலியன மறையும். உங்களுக்கு சாதகமான காற்று வீசும். முன்னேற்றத்துக்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர். அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு கிடைக்காமல் போகலாம். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு அரசியல்வாதி, பொதுநல சேவகர்கள் திருப்தியுடன் இருப்பர்.

மாணவர்கள்  முன்னேற்றம் காண்பர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் யோகம் பெறுவர். ஆசிரியரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.  விவசாயிகளுக்கு நெல், மஞ்சள், பழவகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக் கும். கூலி வேலை செய்வோரும் திருப்திகரமாக வாழ்வர். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை அதிக முதலீடு பிடிக்கும் பயிர்களை விவசாயம் செய்ய வேண்டாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு புதிய சொத்து வாங்கலாம். பக்கத்து நிலவகையில் ஏற்பட்ட பிரச்னை  மறையும்.

பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் காண்பர்.  உங்களது பங்களிப்பு குடும்பத்திற்கு அதிகமாக தேவைப்படும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சகோதரவழியில் உதவி கிடைக்கும்.   ராகுவால் உறவினர் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம்.  2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை ஆடம்பரச் செலவை குறைப்பது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. பொறுப்பை தட்டிக் கழிக்காமல் செய்யவும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். உடல்நலம் அவ்வப்போது பாதித்தாலும் சிரமம் ஏற்படாது.

பரிகாரம்:
*  சனிக்கிழமை பெருமாள் கோவில் தரிசனம்
*  வெள்ளியன்று துர்கைக்கு எலுமிச்சை தீபம்
*  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு

Advertisement

Advertisement Tariff

மேலும் குருப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us