Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/கன்னி

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

மாத ராசி பலன் : கன்னி
20 ஜூன் 2025

முந்தைய மாத ராசி பலன்

rasi

கன்னி

உத்திரம் 2, 3, 4 ம் பாதம் 
தெளிவாக சிந்தித்து உறுதியாக செயல்படும் உங்களுக்கு பிறக்கும் ஆனி யோகமான மாதமாகும். உங்கள் நட்சத்திராதிபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் வளர்ச்சி பெறும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இட மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். சிலர் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவர். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். ஜூலை 3 வரை ராசிநாதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவுகள் வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். விரய ஸ்தானத்தில் கேது, செவ்வாய் சஞ்சரிப்பதால் செலவில் கவனம் தேவை. விவசாயிகள் விளைச்சலில் முழுமையான கவனத்தையும் செலுத்தி வருவது நன்மை தரும். சீருடை பணியில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரிகள் முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 20, 21.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 19, 23, 28, ஜூலை 1, 5, 10, 14.
பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும்.

அஸ்தம்
மன வலிமையுடன் நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். குருபகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடன் சஞ்சரிக்கும் சூரியனால் பதவியில் ஏற்படும் நெருக்கடி விலகும். குருவின் பார்வைகள் தன, குடும்ப, வாக்கு, சுக,  சத்ரு ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்பாதிப்பு விலகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள், பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு, விவகாரம் சாதகமாகும். ராகு, சனியின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இக்காலம் உங்களுக்கு யோக காலமாக இருக்கும். எடுத்த வேலைகளை உங்களால் முடித்து விட முடியும். அதற்கேற்ப ஆதாயமும் உண்டாகும். செல்வாக்கும் உயரும். அரசியல்வாதிகளுக்கு இது முன்னேற்றமான காலம். புதிய பொறுப்பு, பதவி என ஒரு சிலருக்கு கிடைக்கும். ராசிநாதன் ஜூலை 3 வரை சாதகமாக இருப்பதால் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். இதுவரை இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும் என்றாலும், விரய ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் உடல்நலனில் அக்கறை தேவை. எதிர்பாராத செலவு சிலருக்கு ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 21, 22.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 23, 29. ஜூலை 2, 5, 11, 14.
பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

சித்திரை 1, 2 ம் பாதம்
துணிவுடன் செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் ஆனி நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ராசி அதிபதி ஜூலை 3 வரை சாதகமாக சஞ்சரித்து நன்மை வழங்கினாலும், மாதம் முழுவதும் நட்சத்திராதிபதி செவ்வாய், கேதுவுடன் இணைந்து விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஏதாவது ஒரு வகையில் செலவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வரவு வரும் போதே அதற்காக செலவும் காத்துக் கொண்டிருக்கும். 10ல் சஞ்சரிக்கும் சூரியனும், 6ம் இடத்தில் குரு பார்வையுடன் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும், மாதம் முழுவதும் சுக்கிரனும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்கள். வசதி வாய்ப்பை அதிகரிப்பார்கள். கவுரவத்தை உண்டாக்குவர். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் லாபம் அடையும். தொழிலில் இருந்த தடை விலகும். புதிய முயற்சிகள் சாதகமாகும். அரசு வழியில் அனுமதி கிடைக்கும். வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். உடல் பாதிப்பு விலகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். வழக்கு சாதகமாகும். மனம் நிம்மதி பெறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்வில் புதிய பாதை தெரியும். சிலருக்கு புதிய சொத்து சேரும். விவசாயிகள் இந்த மாதம் கவனமாக செயல்பட வேண்டும். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும். பெண்களின் மனதில் இருந்த குறைகள் விலகும். உடல் பாதிப்பு நீங்கும். பணியில் உயர்வு உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 22. 
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27, ஜூலை 5, 9, 14.
பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap