Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/கன்னி

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

மாத ராசி பலன் : கன்னி
11 பிப் 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

கன்னி

உத்திரம் 2, 3, 4 ம் பாதம்
அறிவு, ஆற்றலால் வெற்றி பெறும் உங்களுக்கு மாசி யோகமான மாதமாகும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வாழ்வில் புதிய பாதை தெரியும். நடக்காது, முடியாது என நீங்கள் கைவிட்ட வேலைகளையும் மீண்டும் கையில் எடுத்து ஆதாயம் காண்பீர்கள். உங்களுக்கிருந்த சங்கடம், நெருக்கடி, பிரச்னை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை, மெமோ என்றிருந்த நிலை எல்லாம் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடம் மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். பெண்களுக்கு உடல்நிலை, மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும்.  சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களும் இந்த நேரத்தில் மனம் மாறுவர். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்குவதற்காக அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவர். வராமல் இருந்த பணம் வரும் கொடுக்கல் வாங்கல் சீராகும். மனதில் இருந்த சங்கடம் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: பிப். 21, 22
அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 19, 23, 28. மார்ச். 1, 5, 10, 14
பரிகாரம்
அக்னீஸ்வரரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

அஸ்தம்
மனதில் தெளிவும் செயலில் உறுதியும் கொண்ட உங்களுக்கு மாசி அதிர்ஷ்டமான மாதம். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி எல்லாம் விலகும். நீங்களே ஆச்சரியப்படும் வகையில் உங்களின் நிலை உயரும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சூரியன், ராகு, மார்ச் 6 வரை சனி சஞ்சப்பதுடன், பிப். 21 முதல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும். தள்ளிப்போன வேலைகள் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை உயரும். உடல்நிலை சீராகும். மருத்துவச்செலவு குறையும். சுயதொழில் செய்பவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விற்பனையில் இருந்த மந்தநிலை மாறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படும் நிலை உருவாகும். சட்ட சிக்கல்களால் முடங்கிய தொழில் மீண்டும் செயல்படத் தொடங்கும். அரசு வழியில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அசாத்தியமான துணிச்சலும், வெளி வட்டாரத்தில் செல்வாக்கும் உருவாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வேலை தேடும் முயற்சியில் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம், தொழிலில் இருந்த எதிர்ப்பு விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடமே சமாதானம் பேசுவதற்கு வருவர். உடல் பாதிப்பு விலகும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் நிலை உருவாகும். பிப். 20 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். எதிர்பார்ப்பு நிறைவேறும். 
சந்திராஷ்டமம்: பிப்.22, 23
அதிர்ஷ்ட நாள்: பிப்.14, 20. மார்ச். 2, 5, 11, 14
பரிகாரம்
காமாட்சி அம்மனை வழிபட சங்கடம் தீரும். நன்மை நடக்கும்.

சித்திரை 1, 2 ம் பாதம்
தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் மூலதனமாக கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதமாகும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியான செவ்வாய் பிப். 21 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். பொருளாதார நிலை உயரும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வம்பு வழக்குகளால் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். குடும்பத்திற்குள் நிம்மதியான சூழ்நிலை உருவாகும் செய்துவரும் தொழிலில் ஆதாயம் கூடும். எதிர்ப்பு போட்டி என்ற நிலையெல்லாம் மாறும். சூரியன், ராகு சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால் உங்கள் வாழ்வின் நீண்ட நாள் கனவுகள் இப்போது நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் புதிய பொறுப்பும் பதவியும் கிடைக்கும். செல்வாக்கு உயரும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பெண்களுக்கு இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பிப். 20 முதல் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: பிப். 23.
அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 18, 27. மார்ச். 5, 9, 14.

பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap