Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/கன்னி

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

மாத ராசி பலன் : கன்னி
13 மார் 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

கன்னி

உத்திரம் 2, 3, 4 ம் பாதம்

அறிவாற்றலுடன் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் ராசியைப்பார்ப்பதால் உங்களுக்குள் நம்பிக்கை அதிகரிக்கும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்ததுபோல் உங்கள் நிலை மாறும். செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகளில் வெற்றியுண்டாகும். எதிர்ப்பு விரோதம் என்றிருந்த நிலையெல்லாம் மாறும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். தொழில் லாபம் தரும். உங்கள் சகாய ஸ்தானாதிபதி செவ்வாய் மாதம் முழுவதும் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எந்த ஒன்றிலும் துணிச்சலாக செயல்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்புவரும். என்றாலும் மார்ச் 27 வரை சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரிடம் இருந்து ஓரடி விலகி இருப்பது உங்கள் பெயருக்கும் கவுரவத்திற்கும் நன்மையை உண்டாக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இந்த நேரத்தில் நன்மையளிக்கும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். பணியிடத்திலும் நிம்மதியான நிலை இருக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருவாய் அதிகரிக்கும். மாணவர்களுக்கு ராசிநாதனே வித்யா காரகன் என்பதால் படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 21.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19, 23, 28. ஏப். 1, 5, 10.

பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட்டுவர வாழ்வில் வளம் உண்டாகும்.

அஸ்தம்

திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ராசிநாதன் புதனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலைகள் எல்லாம் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் நிலை மாறும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் மாதம் முழுவதும் செவ்வாயும், ராகுவும் சஞ்சரிப்பதால் அரசியல்வாதிகள் செல்வாக்கு அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுத்து அதில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடக்கூடிய வாய்ப்புகள் வரும். என்றாலும் மார்ச் 6 முதல் கர்மக்காரகன் சனி பகவான் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியை பார்ப்பதால் எந்தவொரு வேலையிலும் நிதானம் காப்பது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவோருக்கு இந்தநேரம் சங்கடமான காலமாக இருக்கும். பாக்ய ஸ்தானத்திற்கு சனிபகவானின் பார்வை கிடைப்பதால் பெரியோர்களின் ஆதரவு, தெய்வ அனுகூலம் எல்லாம் இந்த நேரத்தில் உங்களைப் பாதுகாக்கும். குடும்பத்திலும் நிம்மதி இருக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குருப் பார்வைகள் சாதகமாக இருப்பதால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பெண்களுக்கு குடும்பம், வேலையில் இருந்த பிரச்னைகள் விலகும். மனதில் நிம்மதி உண்டாகும். ஆரோக்கியத்துடன் செயல்படமுடியும். மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 21, 22.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20, 23, 29. ஏப். 2, 5, 11.

பரிகாரம்: கைலாச நாதரை வழிபட சங்கடங்கள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

சித்திரை 1, 2 ம் பாதம்

நேரம் வரும்வரை காத்திருந்து நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். தைரிய, பராக்கிரமக்காரகனான செவ்வாய் மாதம் முழுவதும் சத்ரு ஜெயஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சங்கடமான நிலை மாறும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். பகைவரால் ஏற்பட்ட தொல்லைகள், வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி இருந்த இடம் தெரியாமல் போகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். ராசிநாதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். ஞானக்காரகன் குரு பகவான் மார்ச் 17 முதல் ஜீவன ஸ்தானத்தில் வக்கிர நிவர்த்தியாவதால் வேலைப்பளு கூடும். மேலதிகாரிக்கும் உங்களுக்கும் இணக்கமற்ற நிலை ஏற்படும். தன, குடும்பம் மற்றும் சுகம், சத்ரு ஜெய ஸ்தானங்களுக்கு குரு பகவானின் பார்வை உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். பணப்புழக்கம் இருக்கும். கடன் தொல்லை விலகும். மனதில் சந்தோஷமான நிலை இருக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய நிலை உண்டாகும். பெண்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். நோய் நொடி என்ற நிலைகள் மாறும். மாணவர்களுக்கு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 22, 23.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 23, 27. ஏப். 5, 9.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap