sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

/

கும்பம்

/

கும்பம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

ராகு கேது பெயர்ச்சி பலன் : கும்பம்
22 ஆக 2020 to 16 மார் 2022

முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

கும்பம்ராசிக்கு 4ல்  அதுவும் அசுரகுரு சுக்ரனின் வீட்டில் ராகு அமர உள்ளார். செயலில் சிறப்பான வெற்றி அமையும். புத்திகூர்மை வெளிப்படும். வாழ்க்கைத் தரம் உயரும்.  10க்கு வரும் கேது அலைச்சலைத் தந்தாலும் செயலில் தடை ஏற்படுத்த மாட்டார். பிரயாணம் அடிக்கடி செல்ல நேரிடும்.  ராகுவோடு சூரியன் சேரும் காலத்தில் வைகாசி மாதம் மட்டும் பிரயாணத்தை தவிர்க்கவும்.  கேதுவால் ஆன்மிக நாட்டம் உண்டாகும்.  பொது விஷயங்களில் முன்நின்று செயல்படுவீர்கள். திட்டமிட்ட  பணிகளை கடைசி நேரத்தில் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். ராகு சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார். ஜெனன ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமை பெற்றவர்கள் சிறப்பான நிலை அடைவர்.  சனியின் பார்வை ராசியின் மீது விழுவதால் டிச.26 வரை நன்மை அதிகரிக்கும். அதன்பின் ஏழரை சனியால் நிதானம் தேவை.

குடும்பம்:
    மூத்த சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு மறையும்.  பாகப்பிரிவினை பிரச்னை முடிவுக்கு வரும். குடும்பத்தில்  கலகலப்பான சூழல் உருவாகும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. உறவினர் வழியில் ஏமாற்றத்தை சந்திக்கலாம்.  சிலர்  பணிநிமித்தமாக நீண்ட துாரம் செல்ல வேண்டியிருக்கும். குடும்பத்தினரோடு செலவிடும் நேரம் குறையும்.

தொழில்:
தொழில், வியாபாரத்தில் அகலக்கால் வேண்டாம். நிதனாம் தேவை. 10ம் இடத்து கேதுவால் அலைச்சல் ஏற்பட்டாலும் இரவில் நிம்மதியான உறக்கம் உண்டாகும். வெளிநாட்டில் பணி புரிவோர் சிறப்பான வளர்ச்சி காண்பர். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு வாய்ப்பு கிடைக்கும். வங்கி, இன்ஷ்யூரன்ஸ், நிதி நிறுவனம், அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், பத்திரிகை, நீதித்துறை சார்ந்தவர்கள் வளர்ச்சியடைவர். தொழில்நுட்பம், அறிவியல் துறை சார்ந்தவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதோடு பதவி உயர்வும் கிடைக்கும். கீழ்நிலைப் பணியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி நல்வழிப்படுத்துவீர்கள்.

நிதி நிலை :
 அசையும், அசையாச் சொத்து சேரும். அதே நேரம் குரு நவம்பர் முதல் விரய ஸ்தானத்தில் நீசம் பெற உள்ளதால் கையிருப்பு  கரையும். சேமிப்பில் சொத்து வாங்குவது நல்லது. நகையை வங்கி லாக்கரில் பத்திரப்படுத்துவது நல்லது. குரு, சனியால் விரயம் ஏற்பட்டாலும் ராகு வருமானத்தை கொடுக்கச் செய்வார்.

பெண்கள் :
 ஆடம்பர பொருட்கள்  வீண்பேச்சால் ஆபரத்து ஏற்படலாம். வீட்டுப் பிரச்னைகளை வெளியில் சொல்ல வேண்டாம். ஏமாற்றுபவர்களை நல்லவர் என நம்புவது உங்களுக்கு பலவீனம் தரும். குடும்ப பொறுப்புகள் அதிகரிப்பதால் லேசான விரக்தி தலைதுாக்கும். கணவருக்கு பக்கபலமாக  செயல்படுவீர்கள்.

மாணவர்கள்:
 சிறப்பான வளரச்சி காண்பர். தேர்விற்கு முன் மாதிரித்தேர்வுகளை எழுதி பழகுவது நல்லது. பொறியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஸியோதெரப்பி,, பயோடெக்னாலஜி பிரிவு மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.

உடல்நிலை:
ஆஸ்துமா, சைனஸ், சளித் தொந்தரவு வரலாம்.  சிகிச்சையை காலம் தாழ்த்தாமல் எடுப்பது நல்லது. ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் சிகிச்சை பெறுவது அவசியம்.  அவ்வப்போது ரத்த அழுத்த பரிசோதனை செய்வது நல்லது.

பரிகாரம்:
* செவ்வாய் தோறும் சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள்.
* சுதர்சன அஷ்டகம் படிப்பதால் மனதைரியம் கூடும்.
* கார்த்திகை நட்ச்த்திரத்தன்று ஏழைகளுக்கு உதவுதல்

Advertisement

Advertisement Tariff

மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us