sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

/

கும்பம்

/

கும்பம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

ராகு கேது பெயர்ச்சி பலன் : கும்பம்
17 மார் 2022 to 02 அக் 2023

முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

கும்பம்அவிட்டம் 3, 4ம் பாதம்: ராகுவால் நன்மை

ராகு 4ம் இடமான ரிஷபத்தில் இருந்து இருந்து வீண்கலகம், அலைச்சலை உருவாக்கி இருப்பார். குடும்பத்தில் பகை, பிரிவை உருவாக்கி இருக்கலாம். இப்போது ராகு 3ம் இடமான மேஷத்திற்கு வந்து நன்மை தர உள்ளார். குறிப்பாக காரிய அனுகூலம், நற்சுகம், பொருளாதார வளம் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் விருத்தி கொடுப்பார்.
கேது இதுவரை 10ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து உடல் உபாதை தந்திருப்பார். இனி அவர் 9ம் இடமான துலாம் ராசிக்கு போகிறார். அவரால் உடல் உபாதை குணமாகும். கேதுவால் பொருள் இழப்பு, முயற்சியில் தோல்வியைக் காணலாம். அவரது பின்னோக்கிய 4,7,11ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளதால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். இதன் மூலம் தெய்வ அனுகூலம் கிடைக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். இனி விரிவான பலனை காணலாம்
               
பொதுபலன்: பொருளாதார வளம் சிறக்கும். தேவைகள் பூர்த்தியாகும். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். வண்டி, வாகனம் வாங்கலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரலாம். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.  குருவால் உங்களுக்கு ஏற்பட்ட பொருள் நஷ்டம், மனதில் தளர்ச்சி, வீண் மனக்கவலை முதலியன மறையும். மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தடைபட்ட திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உங்களை நாடி வருவர்.
தொழில்: வியாபாரம் வளர்ச்சியடையும்.  புதிய வியாபாரம் ஓரளவு லாபத்தைத் தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.

பணியாளர்கள்: பணியில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். வேலையில் தன்னம்பிக்கை பிறக்கும். சிலர் இடமாற்றம், பணிமாற்றம் காண்பர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். 2023 ஏப். 22க்கு பிறகு மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிரத்தை எடுத்தால் தான் கோரிக்கைகள் நிறைவேறும்.

கலைஞர்கள்: வசதியுடன் வாழ்வர். சக கலைஞர்கள் மிக ஆதரவுடன் செயல்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு வரும்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். சமூகநல தொண்டர்கள் சிலர் அரசிடம் இருந்து விருது, பாராட்டு பெற வாய்ப்புண்டு.

மாணவர்கள்: தேர்வில் மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு பெறுவர்.
 விவசாயிகள்: பாசிப்பயறு, நெல், எள், உளுந்து, கொள்ளு, துவரை, சோளம், மஞ்சள், கொண்டைக்கடலை மூலம் வருமானம் அதிகரிக்கும். கால்நடைச்செல்வம் பெருகும். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் காண்பர். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும்.
 பெண்கள்: கணவர், குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் பெறுவர். சகோதரர்கள் ஆதரவுடன் செயல்படுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் லாபம் பெறுவர். ஆடை, ஆபரணம் சேரும். பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக பொருள் வந்து சேரும். தோழிகள் ஆதரவுடன் இருப்பர்.
உடல்நிலை: ஆரோக்கியம் மேம்படும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
பரிகாரம்:  கேது சாதகமற்ற நிலையில் உள்ளதால் அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்கை அம்மனை வணங்குங்கள். 2023 ஏப்.22க்கு பிறகு வியாழனன்று தட்சிணாமூர்த்தியை வழிபடத் தவறாதீர்கள்.

சதயம் : சுகமாக வாழ்வீர்கள்

பொதுபலன்:
ராகு, குருவால் சிறப்பான நிலையை காணலாம். தெய்வ அனுகூலம் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். பிள்ளைகளால் பெருமை காண்பீர்கள்.  பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். வண்டி, வாகனங்கள் வாங்க யோகமுண்டு. 2023 மார்ச் 29க்கு பிறகு உறவினர் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம்.

தொழில்: பண விஷயத்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். ராகுவால் பகைவர் தொல்லைகள் குறையும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். தரகு, கமிஷன் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.  வக்கீல்கள் போட்டியாளர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் காண்பர்.

பணியாளர்கள்:  மேலதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். 2023 ஏப். 22க்கு பிறகு  முயற்சியில் தடை ஏற்படும். நெருப்பு. மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

கலைஞர்கள்:  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு போன்றவை கிடைக்கும். உங்கள் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள்:  எதிர்பார்த்த பதவி, பொறுப்புகளை பெறுவர். ஆடம்பர வசதியுடன் வாழ்வு நடத்துவர்.
மாணவர்கள்: கல்வி வளம் பெருகும். ஆசிரியர்களின் மத்தியில் நன்மதிப்பு கூடும்.
விவசாயிகள்: பொருளாதார வளத்தில் சிறப்படைவர். பாசிபயறு நெல், உளுந்து, துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். கால்நடை செல்வம் பெருகும். நவீன விவசாயத்தை பயன்படுத்தி மகசூலை பெருக்குவீர்கள். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக இருக்கும்.

பெண்கள்: குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். கணவர், குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். பெரியோர்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். பொன், பொருள் சேரும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர்.  அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும்.  வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேருவர். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தைப் பெறுவர்.
உடல்நலம்: கண்,உஷ்ணம்,தோல்,தொடர்பான நோய் பூரண குணம் பெறும். மருத்துவச் செலவு குறையும்.
பரிகாரம்: சனி,கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். விநாயகரை வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பத்திரகாளியம்மனுக்கு எலுமிச்சைபழ  விளக்கு ஏற்றுங்கள்.

பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்: ஆடம்பர வசதி பெருகும்

கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் நற்சுகம் கிடைக்கும். அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் சிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள்  ஒன்று சேருவர்.
தொழில்: பகைவர்களின் தொல்லைகள் குறையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள்  வீடு திரும்புவர். 2023 மார்ச் 29க்கு பிறகு புதிய வியாபாரம் தொடங்குவதோ, அதிகமுதலீடு போடுவதோ இப்போது வேண்டாம். அதைவிட இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு.
பணியாளர்கள்: பதவி உயர்வு காண்பர். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். 2023 ஏப். 22க்கு பிறகு வேலைப் பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். முக்கிய பொறுப்புகளை வேறு நபரிடம்  ஒப்படைக்க வேண்டாம்.

கலைஞர்கள்: சக கலைஞர்கள் ஆதரவுடன் இருப்பர் 2023 ஏப். 22க்கு பிறகு புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.
அரசியல்வாதிகள்: புகழ் பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆடம்பர வசதியுடன் இருப்பர்.
மாணவர்கள்: கல்வி வளம் பெருகும். ஆசிரியர்களின் மத்தியில் நன்மதிப்பு  கூடும். 2023 ஏப்.22க்கு பிறகு முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும்.
விவசாயிகள்: பாசிப்பயறு, நெல், எள், உளுந்து, கொள்ளு, துவரை, சோளம், மஞ்சள், கொண்டைக் கடலை பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். கால்நடை செல்வம் பெருகும்.வழக்கு விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும். 2023 மார்ச் 29க்கு பிறகு புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள்: வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். கணவர்,  குடும்பத்தாரின் மத்தியில்  நற்பெயர் உண்டாகும். .சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குழந்தைகளால் பெருமை உண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சியடைவர். சுயதொழில் செய்யும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 2023 ஏப். 22ந் தேதிக்கு பிறகு விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லை யென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
உடல்நிலை: ஆரோக்கியம் மேம்படும். நீண்ட காலம் நோயால் அவதிப்படுபவர்கள் கூட நோயின் தீவிரம் குறைந்து நலமாக இருப்பர்.  
பரிகாரம்: துர்கை வழியாடு துணை நிற்கும். சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள். 2023 ஏப். 22க்கு பிறகு திருவாரூர் மாவட்டம் ஆலங்குடிக்கு ஒருமுறை செல்லுங்கள். அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு 21 தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

Advertisement

Advertisement Tariff

மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us