sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

சனிப்பெயர்ச்சி பலன்கள்

/

மகரம்

/

மகரம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் : மகரம்
04 மார் 2026 to 22 மார் 2028

முந்தைய சனிப்பெயர்ச்சி பலன்கள்

rasi

மகரம் :

உத்திராடம்: எடுத்த வேலைகள் வெற்றியாகும்

ஆத்மகாரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான தனுசுவில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர்.
உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இதுவரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்து சாதனைகள் புரிய வைத்த சனி பகவான் மார்ச் 6, 2026 முதல் சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கப்போகிறார். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரைச்சனியாக நெருக்கடிகளை வழங்கி வந்தவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பம், தொழில், உத்தியோகம் என்று அனைத்திலும் நெருக்கடிகளை ஏற்படுத்துவார். சங்கடங்களை அதிகரிப்பார். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களை ஏழரை ஆண்டு காலம் அனுபவித்து வந்த போராட்ட நிலையில் இருந்து விடுவிப்பார். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து புகழ் என்று எல்லாவற்றையும் அடையக்கூடிய நிலையினை உருவாக்குவார்.
இந்த நேரத்தில் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் யோகப்பலன்கள் கூடுதலாகும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், 1ம் பாதத்தினருக்கு சனி பகவானின் சஞ்சார நிலையினாலும் பார்வைகளினாலும் ஏற்படும் நெருக்கடிகள் நீங்கி நினைத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு சனியின் பார்வைகளால் ஏற்படும் பாதகங்கள் நீங்கும். விரயச்செலவுகள் கட்டுப்படும். தெய்வ அருளும் பெரியோர் துணையும் கிடைக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்  உத்திராடம் 1ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். 2,3,4 ம் பாதத்தினருக்கு மீன சனிக்காலத்தில் ராகு கேது சஞ்சார நிலைகள் சாதகமாக இல்லை என்பதால் எடுக்கும் வேலைகள் அனைத்திலும் நிதானம் தேவை, புதிய முதலீட்டில் எச்சரிக்கை அவசியம்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, 1ம் பாதத்தினருக்கு, மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம், பட்டம், பதவி என்ற கனவுகள் நனவாகும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கு விவகாரங்கள் வெற்றியாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு, கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி, குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, வேலையில் முன்னேற்றம், பொருளாதார நிலையில் உயர்வு, பொதுவாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் விரயங்கள் கட்டுப்படும், குடும்பத்தில் நிம்மதி, பணப்புழக்கம் இருக்கும்.

பொதுப்பலன்
வாழ்வில் நிம்மதி உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு  தகுதியான வேலை கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் கிடைக்க வேண்டிய உயர்வு கிடைக்கும். புதிய சொத்து சேரும்.

தொழில்
தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபமடையும்.
நிதி நிறுவனம், உதிரி பாகம் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திரத் தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், முன்னேற்றம் அடையும்.

பணியாளர்கள்
போராட்டமான நிலையை சந்தித்து வந்தவர்களுக்கு மாற்றமும் நிம்மதியும் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த பதவி உயர்வு வரும்.

பெண்கள்
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். கணவனுடன்  ஏற்பட்ட இடைவெளி விலகும். விவாகரத்து வரை சென்றவர்களும் மீண்டும் சேர்ந்து வாழும் நிலை வரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவர்கள் ஏக்கம் தீரும். பொன் பொருள் சேரும்.

கல்வி
படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம். மேற்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை 
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கு சிகிச்சை பலனளிக்கும். நோய் குணமாகும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.

குடும்பம் 
குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். தம்பதிகள் ஒருவரை ஒருவர் ஆலோசித்து முடிவெடுப்பீர்கள், சேமிப்பு உயரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். பிள்ளைகள் மேற்கல்விக்கு செல்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். வேண்டுதல்கள் நிறைவேறி ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.

பரிகாரம் :பகவதி அம்மனை வழிபட வேண்டுதல் நிறைவேறும். நன்மைகள் நடக்கும்.

திருவோணம்: வெற்றிமேல் வெற்றி

மனக்காரகன் சந்திரன், ஆயுள்காரகன் சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, மார்ச். 6, 2026 முதல் ஏழரை ஆண்டுகளாக இருந்த நெருக்கடிகள் நீங்கப் போகிறது, உடலில் ஏற்பட்ட பாதிப்புகள், வருமானத்தில் ஏற்பட்ட தடைகள், உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாம் விலகி நல்ல காலம் பிறக்கப் போகிறது. சகாய ஸ்தானமான 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் எடுக்கும் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். பொருளாதார நிலையை உயர்த்துவார். தொழிலில் முன்னேற்றத்தையும் லாபத்தையும் ஏற்படுத்துவார். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து புகழ் என்று எல்லாவற்றையும் வழங்குவார்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் கட்டுப்படும். சேமிப்பு உயரும்.

ராகு - கேது சஞ்சாரம் நவ.13, 2026 வரை ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும் சஞ்சரித்து, நவ. 13, 2026 முதல் ராகு ராசிக்குள்ளும், கேது 7ம் இடத்திலும் சஞ்சரிபார்கள் என்பதால், குடும்பம், பணம், தொழில், உத்தியோகம் என்று அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உடல்நிலையிலும், புதிய நட்புகளிடமும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, 7ம் இடமான கடகம், பாக்ய ஸ்தானமான கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் நினைத்த வேலைகள் நடந்தேறும். செல்வாக்கு, பட்டம், பதவி, அந்தஸ்து உண்டாகும். திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகன யோகம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வீண் செலவுகள் குறையும், உடல்நிலை சீராகும், குடும்பத்தில் நிம்மதியும் பணப்புழக்கமும் உண்டாகும்.

பொதுப்பலன்
சகாய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள், போராட்டங்கள், பிரச்சனைகள் எல்லாம் முடிவிற்குவரும். புதிய பாதைத்தெரியும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். தைரியம் அதிகரிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வாழ்வில் நிம்மதி உண்டாகும்.

தொழில்
தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திரத் தொழிற்கூடம், வாகன விற்பனை, கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம், பால், குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆடை வணிகம் லாபம் தரும்.

பணியாளர்கள்
வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். நிர்வாகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். தடைபட்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
வாழ்க்கையில் நிம்மதி இல்லை, எந்த ஒன்றும் கைகூடி வரவில்லை என்றிருந்த நிலையெல்லாம் மாறும். இனி, எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சுய தொழிலில் ஆதாயம் கூடும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கணவரின் அன்பு அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்யம் உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

கல்வி 
தன்னம்பிக்கை இருக்கும் என்றாலும் பொதுத்தேர்வை எதிர்கொள்பவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதுடன், படிப்பைத்தவிர வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது மிக மிக அவசியம்.

உடல்நிலை 
மன அழுத்தம், செரிமானக் கோளாறு, அல்சர், இளைப்பு, உறக்கமின்மை, பரம்பரை நோய், விபத்து என்று அவதிப்பட்டு வந்தவர்கள் குணமடைவீர்கள். ஆரோக்கியம் சீராகும், வேகமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள்.  வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைபடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

பரிகாரம் :ஆண்டாள் அழகரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.

அவிட்டம்: முன்னேற்றம் உண்டாகும்

ரத்தக்காரகன், யுத்தக்காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்கள் மகர ராசியினராகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசியினராகவும், இருவருக்கும் சனி பகவானே ராசிநாதனாவார்.
அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச். 6, 2026 முதல் பாத சனி விலகுவதால் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும், ஏழரை ஆண்டுகளாக சந்தித்து வந்த போராட்ட நிலை மாறும். விருப்பங்கள் பூர்த்தியாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனிக்காலம் முடிவடைந்து பாத சனிக்காலம் தொடங்குவதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும்.  உழைப்பு அதிகரிக்கும், உடல்நிலை சோர்வடையும், மறைமுகத்தொல்லைகளால் மனம் சங்கடத்திற்கு ஆளாகும் என்றாலும் வருமானம் அதிகரிக்கும். பெரியோரின் துணைக்கிடைக்கும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். பிள்ளைகள் பற்றிய கவலை விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாத சனியின் பாதிப்பு விலகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். எடுக்கும் வேலைகள் ஜெயமாகும். 

ராகு - கேது சஞ்சாரம் அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13, 2026 வரை ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும் சஞ்சரித்து, நவ. 13, 2026 முதல் ராகு ராசிக்குள்ளும், கேது 7ம் இடத்திலும் சஞ்சரிப்பார்கள் என்பதால், குடும்பம், பணம், தொழில், உத்தியோகம், உடல்நிலை, நட்பு என்று அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 2026 முதல் கேது சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து அனைத்திலும் வெற்றியை உண்டாக்குவார். சட்டசிக்கல்கள் விலகும். எதிர்ப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். வழக்கு சாதகமாகும். ஆரோக்கியம் மேம்படும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில்  செல்வாக்கு, பட்டம், பதவி, அந்தஸ்து உண்டாகும். திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும்.  புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையிலும் பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் செலவுகள் குறையும், உடல்நிலை சீராகும், பணப்புழக்கம் அதிகரிக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். நீண்டநாள் கனவுகள் பூர்த்தியாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். கடகம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பாத சனியால் ஏற்படும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும்.

பொதுப்பலன்
அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய சனியும் குரு பகவானும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குரு பகவானின் சஞ்சாரங்களும் பார்வைகளும், நவ. 13, 2026 முதல் ஆறாமிட கேதுவும் சாதகமான பலன்களை வழங்குவர். ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும்.

தொழில்
தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், இயந்திரத்தொழில், வாகன உற்பத்தி, உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், வாகன விற்பனை, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் வருமானம்தரும்

பணியாளர்கள் வேலையில் இருந்த சங்கடங்கள், போராட்ட நிலைகள் மாறும். பணிபுரியும் இடத்தில் திறமைக்குரிய மதிப்புண்டாகும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
உடல் நிலையிலும் மன நிலையிலும் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் தேவைக்கேற்றவை பூர்த்தியாகும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வெளியூரில் வேலைப் பார்ப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பொருள் சேரும்.

கல்வி 
படிப்பில் கூடுதல் கவனமும் அக்கறையும் தேவைப்படும். மொபைல் மற்றும் தவறான நட்புகளை இக்காலத்தில் தள்ளி வைப்பதும், ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதும், கடின உழைப்பும் எதிர்பார்த்த மதிப்பெண்பெற வழிவகுக்கும்.

உடல்நிலை 
1,2ம் பாதத்தினருக்கு ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மருத்துவச்செலவுகள் குறையும், 3,4ம் பாதத்தினருக்கு பரம்பரை நோய், பாரம்பரிய நோய் என்று ஏற்படுவதுடன் விபத்துகளையும் சந்தித்திடக்கூடிய நிலை இருப்பதால் வாகனப்பயணத்திலும், இயந்திரப்பணியிலும் எச்சரிக்கை அவசியம்.

குடும்பம்
குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். வேலையின் காரணமாகவும் கருத்து வேறுபாடுகளாலும் பிரிந்திருந்தவர்கள் ஒன்றாக வசிக்கும் நிலையுண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். நீண்டநாள் கனவு நனவாகும். பிள்ளைகளின் உயர்கல்வி திருமண முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.

பரிகாரம் வைத்தியநாதசுவாமியை வழிபட சங்கடங்கள் விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் சனிப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events

    Dinamalar