உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிணத்துக்கடவு மாகாளியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா

கிணத்துக்கடவு மாகாளியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நல்லட்டிப்பாளையம் விநாயகர், முனியப்பன், மாகாளியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.

கிணத்துக்கடவு, நல்லட்டிப்பாளையம் விநாயகர், முனியப்பன், மாகாளியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சிகள் கடந்த 17ம் தேதியன்று, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், தீபாராதனை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை, பூர்ணாஹுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. இன்று 18ம் தேதி, மங்கள இசை, யத்ராதானம், விநாயகர், முனியப்பன், மாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், நல்லட்டிபாளையம் சுற்று வட்டார மக்கள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தச தரிசனம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !