திருப்பதி போக ஸ்ரீநிவாச மூர்த்திக்கு சஹஸ்ர கலசாபிஷேகம்
ADDED :3 hours ago
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோவிலில் பஞ்ச பேரில் ஒன்றான ஸ்ரீ போக ஸ்ரீநிவாச மூர்த்திக்கு சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகம் நடத்தப்பட்டது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பல்லவ ராணி சாமவை பெருந்தேவி ஸ்ரீ போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு வெள்ளி சிலையை காணிக்கையாக வழங்கியதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்படி இன்று சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகம் நடத்தப்பட்டது. போக ஸ்ரீனிவாச மூர்த்தி மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு, பரிமள தீர்த்தம் நிரப்பப்பட்ட 1008 வெள்ளி மற்றும் ஒரு தங்கக் குடம் கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஏகாந்தமாக நடைபெற்ற இந்த சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.