சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :4 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், வருடாபிஷேக விழா நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, நவக்கிரக, சுதர்சன, பஞ்ச சுக்த ஹோமங்கள் நடந்தது. மூலவர், உற்சவர் கோதண்டராமருக்கு பாலாபிஷேகம், சப்த வர்ண, 16வகை திரவிய அபிஷேகத்துடன் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ஐ தரிசனம் செய்தனர்.