உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ராமநாதபுரம் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

உத்தரகோசமங்கை: -: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் பிரதோஷ விழா நடந்தது.

மங்களநாதர் சன்னதி முன்புறமுள்ள அலங்கார மண்டபத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பிரதோஷ பாடல்கள் பாடப்பட்டது.

சாயல்குடி: மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ரிஷப வாகனத்தில் உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது.

சாயல்குடி கைலாசநாதர் சுவாமி கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள வல்லபை சங்கரன் சுவாமிக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருப்புல்லாணியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !