உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோஷம்

ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோஷம்

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கத்தில் உள்ள ஆட்சீஸ்வரர் கோவிலில், ஆடி மாத பிரதோஷம் நேற்று விமரிசையாக நடந்தது.

அச்சிறுபாக்கத்தில் தொண்டை நாட்டு சிவ தலங்களில் ஒன்றானதும், சைவ சமய குரவர்களால் பாடல் பெற்றதுமான, புகழ்பெற்ற இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில் நேற்று, ஆடி மாத பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடந்தது.

இதில், நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !