ஜலதர மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம்
ADDED :5 hours ago
விழுப்புரம்: ஜலதர மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் அருகே கண்டமானடி, ஜலதரமாரியம்மன் கோவில் ஆடி மாத உற்சவம் நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு ஆழங்கால் வாய்க்காலில் இருந்து பூங்கரகம் ஜோடித்து ஊர்வலம் வந்தது. முக்கிய வீதிகள் வழியாக பூங்கரகம் ஊர்வலம் முடிந்து, மதியம் 2:00 மணிக்கு ஜலதர மாரியம்மனுக்கும், கெங்கையம்மனுக்கும் கூழ் ஊற்றி, சாகை வார்த்தல் வழிபாடு நடந்தது. தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு ஐயனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு உற்சவர் ஜலதர மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில், சுவாமி வீதியுலா நடந்தது.