மழை வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
ADDED :10 hours ago
ஊட்டி: ஊட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பெரிய பள்ளிவாசலில் மழை பெய்ய வேண்டி, த.மு.மு.க., சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது.
நீலகிரியில், கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால் அணைகள் , குடிநீர் ஆதாரங்கள் வற்றி கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீர் பஞ்சம் ஏற்பட்டிருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேய்ச்சல் நிலங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியால் தீவனம் தட்டுப்பாட்டால் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை, மலை காய்கறி விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையல், மாவட்டத்தில் வறட்சி நீங்கி, குடிநீர், விவசாயம் செழிக்கும் வகையில், மழை பெய்ய வேண்டி, ஊட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பெரிய பள்ளிவாசலில் மழை பெய்ய வேண்டி, த.மு.மு.க., சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. ஏராளமான இஸ்லாமிய மக்கள் பங்கேற்றனர்.