/
கோயில்கள் செய்திகள் / காரமடையில் தீர்த்தக் குடம் எடுத்து பிளேக் மாரியம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்
காரமடையில் தீர்த்தக் குடம் எடுத்து பிளேக் மாரியம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்
ADDED :11 hours ago
காரமடை; காரமடையில் ஹிந்து அன்னை முன்னணியினர் சார்பில் பெண்கள் தீர்த்தக் குடம் எடுத்து, பிளேக் மாரியம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.
கோவை வடக்கு மாவட்டம், காரமடை தெற்கு, வடக்கு நகர் மற்றும் கிழக்கு, மேற்கு ஒன்றியங்களை சேர்ந்த, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். காரமடை கருப்பக விநாயகர் கோவிலில் துவங்கிய ஊர்வலம், நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து பிளேக் மாரியம்மன் கோவிலை அடைந்தது. பின், உற்சவருக்கு அபிஷேகம் செய்து, பிளாக் மாரியம்மனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிப்பாடு நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் சிவபுகழ் தலைமை வகித்தார். செயலாளர் ரவிபாரதி முன்னிலை வகித்தார். பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.