உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக சதுர்த்தி சிறப்பு வழிபாடு

கோவை அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக சதுர்த்தி சிறப்பு வழிபாடு

கோவை ; நாக சதுர்த்தி நாக பஞ்சமி ஆகிய தினத்தை முன்னிட்டு கோவை ஆர் எஸ் புரம் ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி ஸ்ரீ யோக நரசிம்மர் சன்னதி ஆதி சங்கர ஆரியாம்பா சேவா டிரஸ்ட் சார்பில் ஸ்ரீ நாக பஞ்சமி விழா நாக சதுர்த்தி விழா கோவை ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நடந்தது நாகசதுர்த்தி பாம்பு கடவுள் நாக தேவதைகளை வணங்கும் ஒரு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது  கருட பஞ்சமி நாக பஞ்சமி என்பது சதுர்த்தி திதியில் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. பாற்கடலில் ஆலகால விஷம் அருந்திய சிவபெருமானை நினைத்து நாக தோஷங்கள் நீங்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது வாசுகி ரட்சகன் கார்கோடகன் போன்ற  நாக தெய்வங்களை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வது என்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் குடும்ப நலனுக்காகவும் குழந்தைகளின் நல்வாழ்வுகாகவும் திருமணமான பெண்கள் இந்த நாளில் சிறப்பு பூஜைகள் செய்கின்றன நாக தோஷம் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது வழக்கம் இதையொட்டி ஆர் எஸ் புரம் அன்னபூரணி கோவிலில் பிரம்மாண்டமான நாகர் கோலம் மஞ்சள் மற்றும் குங்குமத்தால் வரைய பட்டிருந்தது இதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன இந்த நிகழ்வில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !