sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

/

மிதுனம்

/

மிதுனம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

ராகு கேது பெயர்ச்சி பலன் : மிதுனம்
17 ஜூன் 2014 to 21 டிச 2015

முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

மிதுனம்செயல்திறத்துடன் பணியாற்றும் மிதுனராசி அன்பர்களே!

இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்காது என்றாலும் இந்த காலம் உங்கள் வாழ்வைத் தழைக்கச் செய்யும் வகையில் அமையும் என்பதில் சந்தேகமில்லை. ராகு இதுவரை 5-ம் இடமான துலாமில் இருந்து குடும்பத்தில் பிரச்னையை தந்து கொண்டிருந்தார். இப்போது அவர் 4-ம் இடமான கன்னி ராசிக்கு வந்து விட்டதால் அந்த பிரச்னை நீங்கும். அதே நேரம் இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் வீண் அலைச்சல், பணவிரயம் போன்றவை உருவாகலாம். நிழல் கிரகமான கேது இது வரை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான மேஷத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக நல்ல சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தந்திருப்பார். அவர் இப்போது 10-ம் இடமான மீனத்திற்கு சென்றுள்ளார். இது சிறப்பானது என்று சொல்லமுடியாது. இங்கும் அவர் உடல் உபாதைகளைத் தரலாம். ஆனால் கேது பிற்பகுதியில் செயல் வெற்றியைக் கொடுப்பார். குடும்பத்தின் நிலையில் மேம்பாடு உண்டாகும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்க அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனமாக இருப்பது நல்லது. எனவே சற்று கவனமாக இருக்கவும். உடல் நலம் சுமாராகவே இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை கொள்வது நல்லது. உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.

தொழில், வியாபாரம்: நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். லாபம் சீராக இருக்கும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதுõக்கலாம். எப்போதும்  அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சாமர்த்தியமாகச் செயல்பட்டால் அதை முறியடித்து வெற்றி காணலாம். புதிய தொழில் தொடங்க அதிக பணம் போட வேண்டாம். பண முதலீட்டைவிட அறிவு முதலீட்டை போட்டு தொழில் செய்வது நன்மைக்கு வழிவகுக்கும். பொருள் விரயம், பணம் மாயம் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

பணியாளர்கள்: பணியில் சிறப்பான நிலையில் இருப்பர். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். சிலருக்கு எதிர்பாராமல் சம்பள உயர்வும் கிடைக்கும். சாதாரண பணியில் இருப்பவர்கள் கூட அந்தஸ்து, அதிகாரம் மிக்க பதவிக்கு உயர வாய்ப்புண்டாகும். படிப்பை முடித்து விட்டு பணிக்காக காத்திருப்பவர்கள் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கப் பெறுவர்.

கலைஞர்கள்: சிறப்பான பலனைக் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த புகழ், பட்டம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் தொடர்ந்து சிறப்புநிலை அடைவர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.

மாணவர்கள்: கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேரலாம். பாடம் பெறலாம். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம்.

விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் போகாது. நெல், கோதுமை, கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரத்தில் சாதகமான  சூழல் அமையும். ஆனால் புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள்: உற்சாகமாக காணப்படுவர். குழந்தைகளால் பெருமை காண்பீர்கள். விருந்து,விழா என சென்று  வருவீர்கள். குடுபத்தினரிடம் சற்று விட்டுக் கொடுத்து போக வேண்டும்.

பரிகாரப் பாடல்!

அருமறை முதல்வனை ஆழி மாயனைக் கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனைத் திருமகள் தலைவனை தேவ தேவனை இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்.

ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். காளி, துர்க்கை கோயிலில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு நடத்துங்கள். பாம்பு புற்றுள்ள கோயில்களுக்கு சென்று நாகரை வணங்கி வாருங்கள்.  ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபடுங்கள். கிருஷ்ணரை வணங்கி வாருங்கள். விதவை பெண்களுக்கு உதவுங்கள்.

Advertisement

Advertisement Tariff

மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us