ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
ராகு கேது பெயர்ச்சி பலன் : மிதுனம்
04 பிப் 2019 to 21 ஆக 2020
முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மிதுனம்ராகு உங்கள் ராசிக்கு பெயர்ச்சியடைவது சுமாரான நிலை தான். இனி முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம். கேது 7ம் இடமான தனுசு ராசிக்கு வந்திருக்கிறார். கணவன், மனைவி வகையில் பிரச்னை ஏற்படலாம். எதிரி தொல்லை குறுக்கிடலாம். குருபகவான் 6ம் இடத்தில் உள்ளதால் மனதில் தளர்ச்சி ஏற்படும். குருபகவான் 2020 மார்ச் 26ல் மகர ராசிக்கு மாறுகிறார். அப்போது பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். சனிபகவான் 7ம் இடமான தனுசு ராசியில் உள்ளதால் குடும்பத்தில் பிரச்னையை உருவாக்குவார். மொத்தத்தில் சாதகமான காலம் வரும் வரை பொறுமை காப்பது அவசியம்.
2019 பிப்ரவரி – அக்டோபர்
குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். மார்ச்13க்கு பிறகு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். பணியாளர்களுக்கு சகஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவர். மே19 முதல் 2019 அக். 27 வரை அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியதிருக்கும்.
2019 நவம்பர் – 2020 ஆகஸ்ட்
குருபகவானால் முயற்சியில் வெற்றி உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். அவரது 5ம் இடத்துப் பார்வையால் பணப்புழக்கம் இருக்கும். அண்டை வீட்டார் உதவிகரமாக இருப்பர். 2020 மார்ச் 26 க்கு பிறகு எதிலும் பொறுமையுடன் விட்டுக் கொடுத்துப் போகவும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலர் இடமாற்றத்தை சந்திக்க நேரிடலாம். 2020 மார்ச்26க்கு பிறகு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.
பரிகாரம்:
* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு
* ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி மாலை
* சஷ்டியன்று முருகனுக்கு பால் அபிஷேகம்